உயர் புவி வட்டணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாழ், இடைநிலை, உயர் புவி வட்டணைகளின் அளவீட்டு வரைபடம்

உயர் புவி வட்டணை (High Earth orbit) (HEO) என்பது புவியைச் சுற்றியுள்ள விண்வெளியின் ஒரு பகுதியாகும், அங்கு செயற்கைக்கோள்களும் பிற விண்கலங்களும் புவி வளிமண்டலத்திற்கு மேலே உள்ள வட்டணையில் வைக்கப்படுகின்றன. இதன் உயரம் கடல் மட்டத்திலிருந்து 35,786 கிமீ (22,236 மைல்) உயரத்திற்கும் மேலான உயரமாக வரையறுக்கப்படுகிறது, [1] இது ஒரு வட்ட வடிவ புவி ஒத்திசைவு வட்டணையின் ஆரம் ஆகும். உபுவ புவியின் ஈர்ப்பு செல்வாக்கு மண்டலத்தின் இறுதி வரை நீண்டுள்ளது. உபுவ வில் உள்ள செயற்கைக்கோள்கள் முதன்மையாக தகவல் தொடர்பு, வழிசெலுத்தல், அறிவியல் ஆராய்ச்சி, படைத்துறைப் பயன்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. [2] தெசு(TESS), [3] போன்ற பல்வேறு செயற்கைக்கோள்கள் உயர் புவி வட்டணையில் வைக்கப்பட்டுள்ளன.

உபுவ வின் முதன்மையான நன்மைகளில் ஒன்று, இது புவி, ஆழ்வெளியின் கிட்டத்தட்ட தடையற்ற காட்சியை வழங்குகிறது. இது வானியல் நோக்கீடுகளுக்கும் புவிக் கண்காணிப்புக்கும் சிறந்த இடமாக அமைகிறது. கூடுதலாக, உபுவ வில் உள்ள செயற்கைக்கோள்கள் புவியின் மேற்பரப்பின் தொடர்ச்சியான படபிடிப்பை வழங்க முடியும், இது தகவல் தொடர்பு, கலம்செலுத்தல் நோக்கங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். [4]

பெரும்பாலான செயற்கைக்கோள்கள் தாழ் புவி வட்டணையில் நிலைநிறுத்தப்படுவதற்கு நான்கு முதன்மைக் காரணங்கள் உள்ளன. முதலில், ஒரு உபுவ வட்டணைக் காலம் ஒரு மாதம் அல்லது அதற்கு மேலும் ஆகலாம். ஏனென்றால், உபுவ வட்டணைகள் மிகப் பெரிய ஆரத்தைக் கொண்டுள்ளதோடு அதில் கலம் மணிக்கு 7000 மைல் வேகத்தில் மட்டுமே நகரும். இதற்கிடையில், ஒரு தாழ் புவி வட்டணை 90 மணித்துளிகளுக்கும் குறைவான வட்டணைக் காலமே எடுக்கும். [5] எனவே, விரைவாகச் சுற்றி வர வேண்டிய செயற்கைக்கோள்களுக்கு, உபுவ சரியாகப் பொருந்தாது. இரண்டாவதாக, உபுவ வட்டணை தாபுவ வட்டனையை விட, ஒரு செயற்கைக்கோளை வைக்க அதிக ஆற்றலை எடுத்துக் கொள்கிறது. ஒரு செயற்கைக்கோளை உபுவ வட்டணையில் வைப்பதற்கு, அதை சூரிய மைய சுற்றுப்பாதையில் வைப்பதற்கு, ஏறக்குறைய அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. எடுத்துக்காட்டாக, குறிபிட்ட ஆற்றல் பால்கன் 9 50,000 பவுண்டுகளை தாபுவ வட்டணைக்கு எடுத்துச் செல்லும் என்றால், இது உபுவ வட்டணைக்கு சுமார் 10,000 பவுண்டுகளை மட்டுமே கொண்டு செல்ல முடியும். [6] அதாவது உபுவ வில் ஏற்புசுமையை வைப்பதற்கு தாபுவ வில் வைப்பதை விட 5 மடங்கு அதிகமாக செலவாகும். மூன்றாவதாக, உபுவ வட்டணைக்கள் புவியிலிருந்து நம்பகமற்ற தொலைவில் உள்ளன. அதாவது, செயற்கைக்கோளுக்குக் குறிகைகளை அனுப்பும் போதும் பெறும்போதும் தகவல் தொடர்பு தாமதம் ஏற்படுகிறது. குறிகைகள் ஒளியின் வேகத்தில் மட்டுமே பயணிக்க முடியும் என்பதே இதற்குக் காரணம். ஒவ்வொரு முறையும் தாமத நேரத்தில் 0.1 முதல் 4.5 நொடிகள் வரை ஆகலாம். இது இணையத்திற்கு பயனற்றதாக ஆக்குகிறது, மேலும் மற்றவற்றுக்கும் பயன்படுத்த கடினமாக உள்ளது. நான்காவது காரணம் கதிர்வீச்சு உபுவ புவிக் காந்தப்புலத்திற்கு வெளியே உள்ளது. இதனால் உபுவ வில் அதிக கதிர்வீச்சு உள்ளது. இதன் விளைவாக, உபுவ வில் உள்ள விண்கலங்களை கதிர்வீச்சிலிருந்து பாதுகாக்க சிறப்புக் கருவிகளும் பாதுகாப்பும் தேவைப்படுகிறது. இதனால், உபுவ வின் தனிந்த பண்புகள் தேவைப்படும் செயற்கைக்கோள்கள் மட்டுமே இந்த வட்டணையைப் பயன்படுத்துகின்றன.

உபுவ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி விண்வெளி ஆய்வில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, எதிர்கால ஆழ்வெளிப் பயணங்களுக்கு வழிவகுத்துள்ளது. உபுவ வில் செயற்கைக்கோள்களை வைக்கும் திறன் வானியல், புவி அறிவியலில் அற்புதமான கண்டுபிடிப்புகளை செய்ய அறிவையலாளருக்கு வழிவகுத்துள்ளது, அதே நேரத்தில் உலகளாவிய தொடர்பு, வழிசெலுத்தல் அமைப்புகளையும் செயல்படுத்துகிறது. [7]

புவி உயர் வட்டணை செயற்கைக்கோள்களுக்கான எடுத்துக்காட்டுகள்[தொகு]

பெயர் NSSDC ஐடி. வெளியீட்டு தேதி புவியண்மை புவிச் சேய்மை காலம் சாய்வு
வேலா 1A [8] [9] 1963-039A 1963-10-17 101,925 கி.மீ 116,528 கி.மீ 108 மணி 39 மணித்துளி 37.8°
ஐபெக்சு(IBEX) 2008-051A 2008-10-19 61,941 கி.மீ 290,906 கி.மீ 216 மணி 3 மணித்துளி 16.9°
தெசு(டெஸ்) [3] [10] 2018-038A 2018-04-18 108,000 கி.மீ 375,000 கி.மீ 328 மணி 48 மணித்துளி 37.00°
செலுத்தப் பெட்டகம் 2023-098B 2023-07-14 115,000 கி.மீ 154,000 கி.மீ 13 நாட்கள் 27°

மேலும் பார்க்கவும்[தொகு]

  • புவி அருகில் உள்ள விண்வெளி கண்காணிப்பு வலைக்கான உக்ரேனிய ஒளியியல் ஏற்பாடுகள்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Catalog of Earth Satellite Orbits" (in ஆங்கிலம்). 2009-09-04. பார்க்கப்பட்ட நாள் 2023-04-05.
  2. "Types of Orbits". பார்க்கப்பட்ட நாள் April 22, 2023.
  3. 3.0 3.1 "MIT TESS mission". பார்க்கப்பட்ட நாள் November 12, 2022.
  4. "Advantages of HEO Highly Elliptical Orbit | Disadvantages of HEO orbit".
  5. "Popular Orbits 101" (in அமெரிக்க ஆங்கிலம்). 30 November 2017. பார்க்கப்பட்ட நாள் 2023-04-05.
  6. "Capabilities & Services" (PDF). பார்க்கப்பட்ட நாள் April 22, 2023.
  7. "Catalog of Earth Satellite Orbits" (in ஆங்கிலம்). 2009-09-04. பார்க்கப்பட்ட நாள் 2023-04-05.
  8. "Vela". Astronautix.com. பார்க்கப்பட்ட நாள் November 12, 2022.
  9. "Trajectory Details for Vela 1A from the National Space Science Data Center". பார்க்கப்பட்ட நாள் November 12, 2022.
  10. "NASA - TESS Science Support Center".
"https://ta.wikipedia.org/w/index.php?title=உயர்_புவி_வட்டணை&oldid=3860787" இலிருந்து மீள்விக்கப்பட்டது