வானநடுவரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வானநடுவரை வான்கோள பெருவட்டத் தளத்திற்கு 23.4 பாகை சாய்வாக உள்ளது. புவியச்சுச் சாய்வு, சுழற்சி அச்சு, சுற்றுப்பாதை தளம் ஆகியவற்றிற்கிடையே உள்ள தொடர்பை விளக்கும் படம்.

வான நடுவரை (Celestial equator) என்பது பூமி யின் சுழல் அச்சுக்குச் சமமான தொலைவில் இருப்பதாகக் கருதப்படும் பூமத்தியரேகையைப் போன்று அதே தளத்தில் கற்பனையான வான் கோளத்தின் மேலுள்ள ஒரு பெரு வட்டமாகும். வேறு வார்த்தைகளில் இதை விளக்குவதென்றால், விண்வெளியில் நீட்டிக்கப்பட்டிருக்கும் மண்ணுலகின் பூமத்தியரேகைதான் வானநடுவரை எனக்கருதப்படுகிறது[1] . புவியச்சு சாய்வின் விளைவாக வானநடுவரையும் வான்கோளப்பெருவட்டத் தளத்திற்கு 23.4 பாகை சாய்ந்துள்ளது.

ஒரு பார்வையாளர் பூமியின் பூமத்தியரேகையின் மீது நின்றுகொண்டு வானநடுவரையை நோக்குவதாகக் கொண்டால் அது அவருடைய தலைக்கு நேர்மேலே வானுச்சியின் வழியாக செல்லும் ஒரு அரைவட்டமாகக் காண்பார். பார்வையாளர் வடக்கு (அல்லது தெற்கு) நோக்கி நகரும்போது, அவருக்கு எதிரிலுள்ள அடிவானத்தை நோக்கி வானநடுவரை சாய்கிறது. வான்கோளத்தில் இருப்பதால் வானநடுவரை முடிவில்லா தொலைவில் இருப்பதாக வரையறுக்கப்பட்டுள்ளது. இதனால் பார்வையாளர் பூமியில் எங்கிருந்து பார்த்தாலும் எப்போதும் தொடுவானத்தின் மேல் மறையும் அரைக் கோளத்தின் முனைகளை கிழக்கு மேற்காகவே பார்க்கிறார். ( துருவங்களில் வானநடுவரை அடிவானத்திற்கு இணையாக இருந்தாலும் ). எல்லா அட்சரேகைகளிலும் வானநடுவரை பார்ப்பதற்கு நேராகவே இருக்கும் ஏனெனில் பார்வையாளர் வானநடுவரையின் சுழல் தளத்திலிருந்து அளவிடக்கூடிய தொலைவிலும் வானநடுவரைக்கு முடிவில்லா தொலைவிலும் இருக்கிறார்[2]

வானநடுவரைக்கு அருகிலுள்ள வான் பொருட்களை உலகில் எங்கிருந்தும் காணமுடியும். ஆனால் அயன மண்டலப்பகுதிகளில் அவை உச்சத்தில் காணப்படும் என்று கூறப்படுகிறது.. தற்பொழுது வானநடுவரை கீழ்கண்ட விண்மீன் குழாம்களின் வழியாகத்தான் செல்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வானநடுவரை&oldid=3778036" இருந்து மீள்விக்கப்பட்டது