பெரு வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோளமொன்றில் பெருவட்டம்

பெரு வட்டம் என்பது, கோளமொன்றில், அதன் மேற்பரப்பை பரிதியாகவும் அக்கோளத்தை சரி இரண்டாகவும் பிரிக்கும் ஒரு வட்டம் ஆகும். இன்னுமொரு முறையில், கோளத்தின் மேற்பரப்பை பரிதியாகவும் கோளத்தின் மையத்தை மையமாகவும் கொண்ட ஒரு வட்டமாகும். பெரு வட்டம் என்பது கோளமொன்றின் மையத்தூடாக செல்லும் ஒரு தளமாகும்.

புவியில் நெட்டாங்குகள் அனைத்தும் பெருவட்டங்களை அமைக்கின்றது. ஏனெனில் இவை அனைத்தும் புவியின் மையத்தை தமது மையமாக கொண்டுள்ளன. மாறாக அகலாங்குகளில் மத்திய கோட்டைத் தவிர்ந்த ஏனைய அனைத்தும் சிறு வட்டங்களாகும். புவியின் பெருவட்டங்கள் சுமார் 40,000 கி.மீ. பரிதியை கொண்டனவாகும். புவி, சரியான கோளமல்ல என்பதால் இவை சிறிது மாற்றமடைகின்றன. உதாரணமாக மத்திய கோடு 40,075 கி.மீ நீளமானது.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரு_வட்டம்&oldid=3222563" இலிருந்து மீள்விக்கப்பட்டது