கன்னி (விண்மீன் குழாம்)
கன்னி | |
விண்மீன் கூட்டம் | |
கன்னி இல் உள்ள விண்மீன்கள் | |
சுருக்கம் | Vir |
---|---|
Genitive | Virginis |
ஒலிப்பு | /ˈvɜːrɡoʊ/, genitive /ˈvɜːrdʒ[invalid input: 'ɨ']n[invalid input: 'ɨ']s/ |
அடையாளக் குறியீடு | the Virgin |
வல எழுச்சி கோணம் | 13 h |
நடுவரை விலக்கம் | −4° |
கால்வட்டம் | SQ3 |
பரப்பளவு | 1294 sq. deg. (2nd) |
முக்கிய விண்மீன்கள் | 9, 15 |
பேயர்/ஃபிளேஸ்டெட் குறியீடு | 96 |
புறவெளிக் கோள்களுடைய விண்மீன்கள் | 26 |
> 3.00m ஒளிமிகுந்த விண்மீன்கள் | 3 |
10.00 பார்செக் தூரத்திற்குள் உள்ள விண்மீன்கள் | 10 |
ஒளிமிகுந்த விண்மீன் | Spica (α Vir) (0.98m) |
மிக அருகிலுள்ள விண்மீண் | Ross 128 (10.94 ly, 3.35 pc) |
Messier objects | 11 |
எரிகல் பொழிவு | Virginids Mu Virginids |
அருகிலுள்ள விண்மீன் கூட்டங்கள் | Boötes கோமா பெரனிசியஸ் Leo Crater Corvus Hydra Libra Serpens Caput |
Visible at latitudes between +80° and −80°. May மாதத்தில் 21:00 (மாலை 9.00) மணிக்கு தெளிவாகக் காணலாம். |
கன்னிராசி மண்டலம் எனப்படும் பூட்டெஸ் ராசி மண்டல விண்மீன் கூட்டங்களுள் இரண்டாவது பெரிய வட்டாரமாகும். இவ் வட்டார விண்மீன் கூட்டம் பேரண்டத்தின் நடுவரைக்கோட்டுப் பகுதியில் சிம்மராசி மண்டலத்திற்கும் (லியோ) துலா ராசிமண்டலத்திற்கும் (லிப்ரா) இடையில் அமைந்துள்ளது[1]. சூரியன் கதிர் வீதியில் நகர்ந்து செல்லும் போது இவ் வட்டாரத்தில் செப்டம்பர் 16 முதல் அக்டோபர் 31 வரையிலான காலத்தைக் கழிக்கின்றது. இது கன்னி ராசிக்குரிய நட்சத்திரக் கூட்டமாகும். இதில் 95 விண்மீன்களை வானவியலார் இனமறிந்துள்ளனர். இதிலுள்ள முக்கியமான விண்மீன் ஸ்பைகா என அழைக்கப்படும் ஆல்பா வெர்சினிஸ் ஆகும். இது சிம்மராசி வட்டாரத்திலுள்ள ரெகுலஸ் என்ற விண்மீனை விட பிரகாசமிக்கதும், வெப்பமிக்கதும், பலமடங்கு பெரியதும் ஆகும். இதனுள் 600 சூரியன்களை உள்ளடக்கிவிடலாம். 262 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஸ்பைகா விண்ணில் தெரியும் பிரகாசமான விண்மீன்களின் வரிசையில் 15 ஆவதாக உள்ளது. இந்த வட்டார விண்மீன் கூட்டம் நீதிக்குரிய பெண் கடவுளான டிக்கியை (Dike) பெருமைப்படுத்துவதற்காக என்று சிலரும்[2] தானியங்களுக்கான பெண் கடவுளான டிமெட்டரை (Demeter) நினைவூட்டுவதற்காக என்று[3][4] சிலரும் நம்புகின்றனர்.
மேற்கோள்களும் குறிப்புகளும்
[தொகு]- ↑ "Night Sky~Big Dipper Navigation". Souledout.org. பார்க்கப்பட்ட நாள் 2012-05-16.
- ↑ Universe, Martin Rees, General Editor. DK
- ↑ [[[:en:MUL.APIN]] "MUL.APIN – Wikipedia, the free encyclopedia"]. En.wikipedia.org. பார்க்கப்பட்ட நாள் 2012-05-16.
{{cite web}}
: Check|url=
value (help) - ↑ Time and Calendars, William Matthew O'Neil