உள்ளடக்கத்துக்குச் செல்

லியாகத் அலி கான் (இயக்குநர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

லியாகத் அலிகான் என்பவர் ஒரு இந்திய திரைப்பட இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். இவர் குறிப்பாக தமிழ் படங்களில் பணியாற்றியுள்ளார். அரசியல் வகையிலான பல படங்களில் முதன்மையாக விசயகாந்து மற்றும் ஆர். கே. செல்வமணியுடன் இணைந்து 1990 களில் செயல்பட்டார். [1]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

2006 ஆம் ஆண்டில், லியாகத் அலிகான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். [2] இவரது நண்பரும் நம்பிக்கைக்குரியவருமான விஜயகாந்து இவரை தான் புதிதாக உருவாக்கிய கட்சியில் இருந்து வெளியேற்றிய பின்னர் இந்த முடிவை எடுத்தார். [3] [4] சின்னத்திரை நடிகர்கள் சங்கத் தேர்தல் அதிகாரியாகவும் இவர் நியமிக்கப்பட்டார். [5]

திரைப்படவியல்

[தொகு]
இயக்குனர்
ஆண்டு படம் நடிகர்கள் குறிப்புகள்
1989 பாட்டுக்கு ஒரு தலைவன் விசயகாந்து, சோபனா
1993 எழை ஜாதி விஜயகாந்து, ஜெயபிரதா
1993 கட்டளை சத்யராஜ், பானுப்ரியா
1993 எங்க முதலாளி விஜயகாந்து, கஸ்தூரி
1995 ராணி மகாராணி ரகுவரன், ராதிகா தயாரிப்பாளரும் கூட
1999 சுயம்வரம் பல நட்சத்திரங்கள்
எழுத்தாளர்
  • லியாகத் அலிகான் எழுதிய மேற்கண்டவற்றைத் தவிர பிற திரைப்படங்கள்.

குறிப்புகள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]