உளவுத்துறை (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
உளவுத்துறை
இயக்கம்ரமேஷ் செல்வன்
தயாரிப்புவிஜய் பிரபாகரன்
இசைஷா
நடிப்புவிஜயகாந்த்
மீனா
சங்கவி
ராதாரவி
ஒளிப்பதிவுராஜராஜன்
படத்தொகுப்புஜி.கோபிநாத்
விநியோகம்ஐ.வி.சினி ஆர்ட்ஸ்
வெளியீடு14 ஜனவரி 1998
ஓட்டம்160 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

'உளவுத்துறை' ரமேஷ் செல்வன் இயக்கத்தில் 1998ம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். விஜயகாந்த் கதாநாயகனாக நடித்திருந்தார். விஜய் பிரபாகரன் தயாரிப்பில், ஷா இசையமைப்பில் 1998ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி வெளியானது. விஜயகாந்தின் 125 வது படமாக வெளிவந்து மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்தது. [1][2][3][4]

கதை[தொகு]

சில நபர்கள் மர்மமான முறையில் இறக்க, கடற்படை அதிகாரிகள் சிறந்த அதிகாரியான வசந்த் பெரியசாமியை (விஜயகாந்த்) புலன் விசாரணை செய்ய தேடுகின்றனர்.வசந்த் பெரியசாமி தன் அடையாளத்தை கிருஷ்ணசாமியாக மாற்றி, குடும்ப கஷ்டத்திற்காக கார் ஓட்டுனராக மாறுவேடத்திலிருக்கிறார். கடந்த காலத்தில் படிப்பறிவில்லாத மீனாவை (மீனா) திருமணம் முடித்து ஒரு பெண் குழந்தை ப்ரியா (பேபி ஜெனிபர்) உள்ளது. சில திவீரவாதிகள் மீனாவை கடத்தி வைத்து கொண்டு சிறையில் உள்ள கூட்டாளியை விடுவிக்க கோருகின்றனர். சில ஊழல் அதிகாரிகளின் உதவியுடன் வெளிவருவது மட்டுமில்லாமல் மீனாவையும் கொன்றுவிடுகின்றனர். கடற்படை துறையினரால் வசந்தும் சிறைக்கு செல்வதால், கடற்படை வேலையை மறந்து சாதாரண கார் ஓட்டுனராக இருக்கிறார். பின் கடற்படை வற்புறுத்தலால், வசந்த் பெரியசாமி பணியில் சேர முடிவெடுத்து கண்டுபிடிக்கிறார்.

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

Untitled

ஷா இத்திரைப்படத்திற்கு பின்னணி மற்றும் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். பாடல்கள் 1998ம் ஆண்டு வெளிவந்தது. வைரமுத்து 6 பாடல்களையும் எழுதியிருந்தார். [5][6]

எண் பாடல் பாடியவர்கள் கால அளவு
1 'மீனா உன் கண்ணுக்குள்ளே' சித்ரா, மனோ 5:09
2 'கண்டு பிடித்தாயா ' சுவர்ணலதா 4:23
3 'லவ் லவ்' அனுபமா, ஹரிணி 4:47
4 'நாடு நம் நாடு' மனோ 1:43
5 'நித்தம் உழைக்கின்ற' எஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:58
6 'உள்ளத்தை துறந்து' சித்ரா, மது பாலகிருஷ்ணன் 5:16

மேற்கோள்கள்[தொகு]

  1. "Filmography of ulavuthurai". cinesouth.com. பார்த்த நாள் 2012-07-13.
  2. "Guest List". indolink.com. பார்த்த நாள் 2012-07-13.
  3. "Minnoviyam Gamut - Vijayakanth - The Hero of the Masses". oocities.org. பார்த்த நாள் 2012-07-13.
  4. "GOKUL'S HOME PAGE". reocities.com. பார்த்த நாள் 2012-07-13.
  5. "Ulavuthurai Songs". raaga.com. பார்த்த நாள் 2012-07-13.
  6. "Ulavuthurai By Shah". muzigle.com. பார்த்த நாள் 2012-07-13.