மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
இயக்கம்மனோபாலா
தயாரிப்புவி. என். செல்வராஜ்
கே. கே. பாலசுப்ரமணியன்
கதைலியாகத் அலி கான் (வசனம்)
திரைக்கதைமனோபாலா
இசைஇளையகங்கை
நடிப்பு
ஒளிப்பதிவுராஜராஜன்
படத்தொகுப்புஜி.ஜெயச்சந்திரன்
கலையகம்சேரநாடு மூவி கிரியேஷன்ஸ்
வெளியீடுநவம்பர் 5, 1991 (1991-11-05)
ஓட்டம்125 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் 1991 ஆம் ஆண்டு விஜயகாந்த் மற்றும் ரூபிணி நடிப்பில், மனோபாலா இயக்கத்தில், வி. என். செல்வராஜ் மற்றும் கே. கே. பாலசுப்ரமணியம் தயாரிப்பில், இளையகங்கை இசையில் வெளியான தமிழ் திரைப்படம்[1][2][3].

கதைச்சுருக்கம்[தொகு]

ஆதரவற்ற அனாதைக் குழந்தையை ஒரு ஏழைத்தம்பதி தெருவில் கண்டெடுக்கிறார்கள். அக்குழந்தைக்கு ராபர்ட் (விஜயகாந்த்) என்று பெயரிட்டு வளர்க்கிறார்கள். சிறு வயதிலேயே தன் வளர்ப்புத் தந்தையின் தச்சுத் தொழிலைக் கற்றுக்கொள்கிறான் ராபர்ட். வளர்ந்து பெரியவனானதும் நாகர்கோயிலில் தன் தொழிலை செய்துவருகிறான். அவன் தம்பி பீட்டர் (ஸ்ரீனிவாஸ் வர்மா) சென்னையில் படிக்கிறான். ராபர்ட் தன் வளர்ப்புத் தாய் மேரியுடன் (ஜெயபாரதி) வசித்துவருகிறான்.

படிப்பு முடித்து ஊர் திரும்பும் பீட்டர், அவனுடன் சென்னையில் படித்த ஸ்டெல்லாவை (கீதா விஜயன்) காதலிக்கிறான். ஸ்டெல்லாவின் அண்ணன் அமிர்தராஜா (ஆனந்தராஜ்) தன் எதிரிகளைக் கொலை செய்யவும் துணிந்தவன். தன் தங்கையின் காதலைப் பற்றி அறியும் அமிர்தராஜா தன் ஆட்களை வைத்து அவனை அடித்துவிடுகிறான். தன் தம்பியின் காதலை ஆதரிக்கும் ராபர்ட் அவர்கள் திருமணத்தை நடத்திவைப்பதாக அமிர்தராஜாவிடம் சவால்விடுகிறான். தன் செல்வாக்கைப் பயன்படுத்தி ராபர்ட்டிற்கு பல தொல்லைகளைத் தருகிறான். ராபர்ட் தன் காதல் கதையை பீட்டரிடம் கூறுகிறான்.

ராபர்ட், பார்வதி நம்பூதிரியைக் (ரூபிணி) காதலிக்கிறான். பார்வதியின் தந்தை (திலகன்) அவர்கள் காதலை எதிர்க்கிறார். அவர் சொல்லை மீறும் பார்வதியை அவரே கொல்கிறார். தன் காதலியை இழந்தது தவிக்கும் நிலை தன் தம்பிக்கு வரக்கூடாது என்பதால் அவனுடைய திருமணத்தை நடத்திவைப்பதாக உறுதிகூறுகிறான். அதன்பின் நடந்தது மீதிக்கதை.

நடிகர்கள்[தொகு]

இசை[தொகு]

படத்தின் இசையமைப்பாளர் இளையகங்கை. பாடலாசிரியர் காளிதாசன்.[4][5]

வ. எண் பாடல் பாடகர்கள் காலநீளம்
1 பொட்டு வச்ச பூவே உமா ரமணன், கோகுலன் 5:11
2 சந்தன கிளி ரெண்டு கே. ஜே. யேசுதாஸ், சித்ரா 4:11
3 ஓடம் ஒன்று மனோ, சித்ரா 4:02
4 ஆகாயம் கொண்டாடும் (மகிழ்ச்சி) கே. ஜே. யேசுதாஸ், பி. சுசிலா 5:39
5 ஆகாயம் கொண்டாடும் (சோகம்) கே. ஜே. யேசுதாஸ் 5:20
6 உல்லாச தேரு மயில்சாமி 4:29
7 வானம் சொல்லும் மின்மினி 5:05

மேற்கோள்கள்[தொகு]

  1. "திரைப்படம்". http://spicyonion.com/movie/moondrezhuthil-enn-mootchirukkum/. 
  2. "திரைப்படம்" இம் மூலத்தில் இருந்து 2016-11-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161104075856/http://www.gomolo.com/moonrezhuthil-en-moochirukkum-movie/11561. 
  3. "திரைப்படம்" இம் மூலத்தில் இருந்து 2009-12-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091225195812/http://www.jointscene.com/movies/kollywood/Moondreluthil_En_Moochirukkum/14958. 
  4. "பாடல்கள்". http://www.saavn.com/s/album/tamil/Moondrezhthil-En-Moochirukkum-2014/bT1ct7T8Gr4_. 
  5. "பாடல்கள்" இம் மூலத்தில் இருந்து 2017-11-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171122065527/http://mio.to/album/Ilayagangai/Moondrezhthil+En+Moochirukkum+(1980).