உள்ளடக்கத்துக்குச் செல்

முலைத் தட்டையாக்கல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முலைத் தட்டையாக்கல் ( breast flattening) அல்லது முலைத் தேய்த்தல் (breast ironing)[1]) சிறுமியரின் மார்பகம் பெரிதாகும்போதே கடினமான அல்லது சூடான பொருட்களைக் கொண்டு அடித்தோ அல்லது தேய்த்தோ அவை வளர்வதைத் தடுப்பதாகும்.[2][3] இதனை பொதுவாக சிறுமியின் தாய் நிகழ்த்துகிறார்; சிறுமியை பாலியல் துன்புறுத்தல் மற்றும் வன்கலவியிலிருந்து காக்கவும்[3] இளம் வயதில் கர்ப்பமுற்று குடும்பப் பெயரைக் கெடுக்காதிருக்கவும்[4] அல்லது இளவயது திருமணத்திலிருந்து காப்பாற்றி கல்வியைத் தொடரவும் இவ்வாறு செய்கின்றனர்.[2][4] இது பெரும்பாலும் கமரூன் பகுதிகளில் நடத்தப்படுகிறது; முலை வளர்ந்த பெண்கள் பாலுறவிற்கு தயாரானவர்கள் என்ற கருத்து இங்குள்ள சிறுவர்/ஆண்களிடையே பரவலாக உள்ளது.[2] இது ஆபிரிக்கக் கண்டத்தில் மட்டுமன்றி கமரூன் மக்கள் குடிபெயர்ந்துள்ள, பிரித்தானியா போன்ற இடங்களிலும் நடைபெறுவதாக அஞ்சப்படுகிறது.[5] முலைத் தட்டையாக்க பெரும்பாலும் மரத்தினாலான குழவி பயன்படுத்தப்படுகிறது; இலைகள்,[1] வாழைக்காய், தேங்காய் மூடிகள்,[2] அரவைக் கற்கள், கரண்டிகள், துடுப்புக் கரண்டிகள்,[4] கரி மீது சூடுபடுத்தப்பட்ட சுத்தியல்கள் ஆகியனவும் பயன்படுத்தப்படுகின்றன.[6]

நிகழ்படுகை[தொகு]

முலைத் தட்டையாக்கல் கமரூனின் அனைத்து பத்து மண்டலங்களிலும் கடைபிடிக்கப்படுகிறது.[4] மேற்கு மற்றும் நடு ஆப்பிரிக்கா, பெனின், சாட், கோட் டிவார், கினி-பிசாவு, கினி, கென்யா, டோகோ, சிம்பாப்வே பகுதிகளில் கடைபிடிக்கப்படுகிறது. முலை "துடைத்தல்" தென்னாப்பிரிக்காவில் நடைபெறுவதாக அறியப்படுகிறது.[1] கமரூனின் 200 இனக்குழுக்களும் இதில் ஈடுபடுகின்றன.[7] சமயம், சமூக-பொருளியல் நிலை போன்றவைக்கும் முலைத் தட்டையாக்கலுக்கும் தொடர்பில்லை.[1] சூன் 2006இல் செருமானிய வளர்ச்சி முகவை ஒன்று நடத்திய கருத்துக் கணிப்பின்படி நால்வரில் ஒருவருக்கு முலை தட்டையாக்கப்பட்டிருக்கிறது; ஏறத்தாழ நான்கு மில்லியன் சிறுமிகள் பாதிக்கப்பட்டிருப்பதாக மதிப்பிட்டுள்ளது. இந்தக் கருத்துக் கணிப்பின்படி இது பெரும்பாலும் பாலியல் வன்முறைக்கு வாய்ப்புமிக்க நகரப் பகுதிகளிலேயே நடைபெறுகிறது.[3] கமரூனின் கடற்கரையோர தென்கிழக்குப் பகுதியில் 53 விழுக்காடாக உள்ளது.[6] கிறித்தவர்களும் ஆத்மவாதிகளும் வாழும் தென்பகுதியுடன் ஒப்பிடும்போது முசுலிம்கள் வாழும் வடபகுதியில் குறைவாக உள்ளது. இங்கு 10% பெண்களே பாதிப்பிற்குள்ளாயுள்ளனர்.[3] சிலர் இதற்கு வடக்குப் பகுதிகளில் இளவயது திருமணங்கள் நடப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம் என்கின்றனர்.[1]

அண்மைக் காலத்தில் முலைத் தட்டையாக்கல் கூடுதலாக நடைபெறுவதற்கு கடந்த 50 ஆண்டுகளில் மேம்பட்ட உணவுப் பழக்கவழக்கங்களால் இளவயதில் வயதுக்கு வருவது காரணமாகக் கூறப்படுகிறது.[8] ஒன்பது அகவைக்கு குறைவாகவே வயதுக்கு வந்த கமரூன் பெண்களில் பாதிக்கு மேற்பட்டவர்களுக்கு முலை தட்டையாக்கப்பட்டுள்ளது.[8] 11 வயதில் பெரியவரானவர்களில் 38% பேருக்கு தட்டையாக்கப்பட்டுள்ளது.[3] தவிரவும், 1976 முதல், 19 அகவைக்கு குறைந்து திருமணமானவர்களின் விழுக்காடு 50%இலிருந்து 20%ஆகக் குறைந்துள்ளது; இது வயதுக்கு வருவதற்கும் திருமணத்திற்கும் இடையே உள்ள காலத்தை விரிவாக்கியுள்ளது. திருமண வயது கூடியிருப்பதற்கு கல்வியும் பணியாற்றலும் காரணமாக அமைந்துள்ளன.[1]

இந்த நடைமுறை கமரூன் மக்கள் குடிபெயர்ந்துள்ள பிரித்தானியா போன்ற இடங்களுக்கும் பரவியுள்ளதாக அஞ்சப்படுகிறது.[5] கமரூன் பெண்கள் மற்றும் சிறுமியர் வளர்ச்சி அமைப்பு இலண்டனின் பெருநகரக் காவல்துறையுடன் இணைந்து இந்தப் பிரச்சினை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றது.[5]

இதனையும் காண்க[தொகு]

மேற்சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Rebecca Tapscott (14 May 2012). "Understanding Breast "Ironing": A Study of the Methods, Motivations, and Outcomes of Breast Flattening Practices in Cameroon" (PDF). Feinstein International Center (Tufts University).
  2. 2.0 2.1 2.2 2.3 Randy Joe Sa'ah (23 June 2006). "Cameroon girls battle 'breast ironing'". பிபிசி செய்திகள். http://news.bbc.co.uk/2/hi/africa/5107360.stm. பார்த்த நாள்: 2008-01-02. 
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 Ruth Gidley and Megan Rowling (7 July 2006). "Millions of Cameroon girls suffer "breast ironing"". AlertNet, ராய்ட்டர்ஸ் இம் மூலத்தில் இருந்து 21 மே 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100521013221/http://www.crin.org/violence/search/closeup.asp?infoID=9218.  Reproduced at the Child Rights Information Network. Retrieved 2011-04-02.
  4. 4.0 4.1 4.2 4.3 Sylvestre Tetchiada (13 June 2006). "An Unwelcome 'Gift of God'". IPS News இம் மூலத்தில் இருந்து 2011-06-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110611064154/http://www.ipsnews.net/print.asp?idnews=33603. பார்த்த நாள்: 2008-01-02. 
  5. 5.0 5.1 5.2 Dugan, Emily (26 September 2013). "'Breast ironing': Girls ‘have chests flattened out’ to disguise the onset of puberty". London: Independent. http://www.independent.co.uk/life-style/health-and-families/health-news/breast-ironing-girls-have-chests-flattened-out-to-disguise-the-onset-of-puberty-8842435.html. பார்த்த நாள்: 27 September 2013. 
  6. 6.0 6.1 "Campaign launched to counter "breast ironing"". PlusNews. 28 June 2006 இம் மூலத்தில் இருந்து 2012-02-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120213002019/http://www.plusnews.org/report.aspx?reportid=39711. பார்த்த நாள்: 2008-01-01. 
  7. Nkepile Mabuse (July 27, 2011). "Breast ironing tradition targeted in Cameroon". CNN இம் மூலத்தில் இருந்து 2012-01-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120118053130/http://articles.cnn.com/2011-07-27/world/cameroon.breast.ironing_1_breast-cameroonian-mothers?_s=PM%3AWORLD. பார்த்த நாள்: 2012-02-17. 
  8. 8.0 8.1 "Breast Ironing". Current TV. 26 February 2008. Archived from the original on 2008-04-10. பார்க்கப்பட்ட நாள் 2011-04-02.{{cite web}}: CS1 maint: unfit URL (link)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முலைத்_தட்டையாக்கல்&oldid=3484539" இலிருந்து மீள்விக்கப்பட்டது