களவளாவல் ஏமாற்றுகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

களவளாவல் ஏமாற்றுகை (Dating abuse) அல்லது களவளாவல் வன்முறை (dating violence) என்பது களவளாவல் அல்லது காதலிக்கும்போது திருமணமாகாத இணையரில் ஒருவரால் மற்றவருக்கு நிகழ்த்தப்படும் அல்லது அச்சுறுத்தப்படும் வன்முறை செயலாகும். ஒருவர் மற்றவர் மீது நிந்தித்தல்/வன்முறை மூலம் தனது செல்வாக்கை நிலைநாட்டுவதும் ஆகும். இந்த நிந்தனை/வன்முறை பல வடிவங்களில் இருக்கலாம். பாலியல் வன்முறை, பாலியல் தொந்தரவு, அச்சுறுத்தல்கள், உடல்ரீதியான வன்முறை, திட்டுச்சொற்கள், உளவியல் வன்முறை, அல்லது உணர்ச்சிபூர்வ நெருக்குதல்கள், சமூகநிலை குலைப்பு, மற்றும் எங்கும் பின்தொடரல்.[1]

களவளாவல் வன்முறை அனைத்து நிற, வயது, பொருளியல்நிலை சமூகங்களிலும் நடைபெறுகின்றது. தொடர்பாடலில் நிந்தனை விழிப்புணர்விற்கான மையம் இதனை "முற்கால அல்லது தற்கால நெருங்கிய கூட்டாளியிடம் அதிகாரத்தையும் கட்டுப்பாட்டையும் நிலைநிறுத்த பயன்படுத்தப்படும் ஏமாற்று, வலுக்கட்டாய நடத்தைகள்" என்கின்றது.[2] களவளாவல் வன்முறையின் அறிகுறிகளை சிங்கப்பூரின் குடும்பம் & சமூகம் வளர்ச்சிக் குழுமத்தின் இசிட்டிசன் விவரிக்கிறது.

மேற்சான்றுகள்[தொகு]

  1. "Family and Community Development @eCitizen. Warning Signs of Abusive Relationship". Archived from the original on 2011-09-30. பார்க்கப்பட்ட நாள் 2015-03-18.
  2. http://www.stoprelationshipabuse.org/signs.html

வெளியிணைப்புகள்[தொகு]

கனடிய வளங்கள்
ஐக்கிய இராச்சிய வளங்கள்
அமெரிக்க வளங்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=களவளாவல்_ஏமாற்றுகை&oldid=3548595" இலிருந்து மீள்விக்கப்பட்டது