களவளாவல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பொருத்தம் பார்த்தல் என்பது மேற்கத்திய முறையில் (Dating) என்றழைக்கப்படுகின்றது. இந்த பொருத்தல் பார்த்தல் என்பது தனக்கு ஏற்ற துணையை தானே, தனது விருப்புக்கு அமைவாக தேர்ந்தெடுத்துக்கொள்ளும் வகையில், இருவரும் ஒரு பொதுவான இடத்தில் ஒரு குறிப்பிட்ட திகதியில் சந்தித்து தமக்கு இடையேயான பொருத்தம் பார்த்துக்கொள்வதைக் குறிக்கும். இருப்பினும் இவற்றில் நாடுகளுக்கு இடையேயான சிற்சில வேறுபாடுகளையும் கொண்டுள்ளன.

சொல்விளக்கம்[தொகு]

"Dating" எனும் ஆங்கிலச் சொல்லின் நேரடிப்பொருள் திகதியிடல் என்பதாகும். இருப்பினும் இச்சொல்லுக்கான வெவ்வேறு பொருள்கள் உள்ளன. காதல் மற்றும் உறவுடன் கூடிய பயன்பாட்டில் இச்சொல்லின் பொருளானது "பொருத்தம் பார்த்தல்" என்றே பயன்படும். அத்துடன் இந்த "dating" எனும் சொல், பொருத்தம் பார்த்தலுக்கான சந்திக்கும் திகதியை குறிப்பதால் "பொருத்தம் பார்த்தலுக்கான திகதியிடல்" என்றும் குறிப்பிடலாம். அதேவேளை ஏற்கனவே அறிமுகமான இருவர் அல்லது இல்லற வாழ்வில் இணைந்த இருவரின் உறவு நிலையின் போதான நிகழ்வுகள் அல்லது சந்திப்புகள் "பொருத்தம் வலுப்படுத்தல்" என்று பொருட்படும்.

மேற்கத்தியப் பண்பாட்டில் பொருத்தம் பார்த்தல்[தொகு]

ஐரோப்பிய நாடுகள் மற்றும் வடக்கு கிழக்கு ஆசிய நாட்டவர்கள் ஹொங்கொங் உட்பட ஒரு வயது எல்லைக்குப்பின் தமக்குப் பொருத்தமான துணையைத் தாமே தேடிக்கொள்ளும் முழு உரிமையை இந்த சமுதாயக் கட்டமைப்புகள் கொண்டுள்ளன. அது போன்றே ஒருவர் தனக்கு ஏற்ற துணையை "பொருத்தம் பார்த்தல்" ஊடாக சந்தித்து இருவருக்குமான பொருத்தம் இல்லை எனும் நிலையில், குறிப்பிட்ட அவர்களின் சந்திப்பு அன்றுடன் முற்றுப்படும். சிலவேளை சிலநாட்களாக அல்லது சிலகாலமாக தொடர்ந்து பின்னர் "பொருத்தம் இல்லை" என பிரிந்து விடுவதும் உண்டு. தமிழர் பண்பாட்டில் சாதகப் பொருத்தம் சரிவராவிட்டால் வேறு சாதகம் தேடுவது போன்றே, மேற்கத்திய பண்பாட்டிலும் ஒருவருடன் பொருத்தம் இல்லையாயின் தமக்கு ஏற்ற வேறு துணையைத் தேடத் தொடங்கிவிடுவர். பொருத்தம் பார்த்தோம் எனும் ஒரே காரணத்திற்காக ஒருவரை ஒருவர் வற்புறுத்துதல் போன்ற விடயங்களுக்கு அரச சட்டங்கள் இடமளிப்பதில்லை.

பொருத்தம் பார்த்தலுக்கான அரச சட்டங்கள்[தொகு]

குறிப்பிட்ட வயது ஒருவர் தனக்கு ஏற்ற துணையை எவரின் இடையூறும் இன்றி தேடிக்கொள்வதற்கான முழுமையான உரிமையையும் மேற்கத்தையை நாட்டு அரச சட்டங்கள் வழங்குகின்றன. அத்துடன் தமக்கு பொருத்தமான ஒருவரை தேடிக்கொள்வதில் அல்லது தேடிக்கொண்டவரை தனது வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொள்வதில் எவருடைய தலையீடுக்கும் மேற்கத்தைய சட்டங்களில் இடமில்லை. குறிப்பாக பெற்றோர்கூட தலையிட முடியாது. வேண்டுமானால் ஆலோசனை வழங்கலாம்.

கீழேத்தேய நாடுகளிலும் தனக்கு ஏற்ற துணையைத் தானே தேடிக்கொள்ளும் சட்டங்கள் இருந்தாலும் அவை இறுக்கமான முறைகளைக் கொண்டதாக இல்லை.

பொருத்தம் பார்த்தலின் வகைகள்[தொகு]

இந்த பொருத்தம் பார்த்தலில் பலவகைகள் உள்ளன. இளம் வயதினர் மேற்கொள்ளும் பொருத்தம் பார்த்தல், வயதானோரின் பொருத்தம் பார்த்தல், தன்னின சேர்க்கையாளர்களின் பொருத்தம் பார்த்தல், திருமணம் எனும் பந்தத்திற்குள் நுழையாமல் பாலியல் ரீதியான உறவுகளை பேணும் வகையில் மட்டுமே வைத்துக்கொள்வதற்கான பொருத்தம் பார்த்தல் என பலவேறு வகைகள் உள்ளன. இதை கீழ்காணும் தலைப்பிலும் பிரிக்கலாம்

 • சாதாரண பொருத்தம் பார்த்தல் (Regular date).
 • இரட்டை வழிப் பொருத்தம் (Double date) - இரு தம்பதியினர் டேட் செய்தல்.
 • குழு பொருத்தம் பார்த்தல்(Group date) - பலர் டேட் செய்தல்.
 • அறியாப் பொருத்தம் பார்த்தல் (Blind date) - ஒருவரை ஒருவர் தனிப்பட்ட முறையில் அறியாத நிலையில்(புகைப்படத்தில் முன்னர் பார்த்திருப்பினும்) ஒரு நிறுவனம் மூலம் இணைய தளம் மூலமோ நிகழ்வது.
 • தொலைதூர பொருத்தம் பார்த்தல் (Long Distance Date) - இருவரும் மிகுந்த தூரத்தில் இருப்பதால், விடுமுறை நேரத்தில் மட்டும் குறைந்த காலத்துக்கு ஒன்றாக நேரத்தைச் செலவழித்தல்.

முதல் பொருத்தம் பார்த்தல்[தொகு]

முதல் பொருத்தம் பார்த்தல் என்பது ஒருவர் தான் எதிர்பார்க்கும் எதிர்காலத் துணையை தனக்கு ஏற்றவரா என பார்க்கப்படும் முதல் "பொருத்தம் பார்த்தல்" நிகழ்வாகும். அவ்வாறு முதல் பொருத்தம் பார்த்தல் நிகழ்வு என்பது பலருக்கு வாழ்க்கையில் மறக்கமுடியாத நிகழ்வுகளாகி விடுகின்றன. அவை குறித்த ஏராளமான அனுபவ குறிப்புகளும் இணையத்தில் குவிந்து கிடக்கின்றன. அத்துடன் முதல் பொருத்தம் பார்த்தலுக்கான அறிவுரை குறிப்புகளும் நிறைய உள்ளன.[1][2][3]

பொருத்தம் வலுப்படுத்தல்[தொகு]

இந்த பொருத்தம் பார்த்தல் நிகழ்வுகள், ஏற்கனவே புரிந்துணர்வுகளைக் கொண்ட இருவரின் உறவை வலுப்படுத்தும் வகையில் சந்தித்தல், சுற்றுலா செல்லல், நிகழ்ச்சிகளில் பங்குக்கொள்ளல், உணவகங்கள் செல்லல் போன்ற நிகழ்வுகளையும் உள்ளடக்கியது ஆகும். இங்கே "பொருத்தம் வலுப்படுத்தல்" எனப் பார்க்கப்படுகிறது.

பொருத்தம் பார்த்தலின் மோசடிகள்[தொகு]

இந்த "பொருத்தம் பார்த்தல்" செயல்கள் ஊடாக பல மோசடிகளும் இடம் பெறுகின்றன. ஏற்கனவே வாழ்க்கைத் துணையைக் கொண்ட ஒருவர், பொய்யான காரணங்களைக் காட்டி இன்னொருவரைக் கவருதல் போன்ற மோசடிகளும் நடக்கின்றன.

பொருத்தங்களை ஏற்பாடு செய்தல்[தொகு]

 • இணைய பொருத்தம் பார்த்தல்: இணைய தளம் மூலம் சந்தித்தல்
 • வேகப் பொருத்தம் பார்த்தல் (Speed Dating): குறிப்பிட்ட நபர்கள் ஒரு பொது இடத்தில் ஒருவரை பற்றி ஒருவர் அறிந்து கொள்ள கூடுவர். ஒரு நபர் இன்னொரு நபருடன் ஒரு குறிப்பிட்ட நேரம் வரை அளவளாவுவர் பிறகு ஆவர்கள் சரியான துணை கிடைக்கும் வரை வேறு நபர்களுடன் இதை முறையை தொடர்வர்
 • நகர்பேசி பொருத்தம் பார்த்தல்: இங்கு ஒருவர் மீதான இன்னொருவரின் ஈடுபாட்டையும் புரிதலையும் குறுஞ்செய்திகள் மூலம் பரிமாரிக்கொள்ளுதல்
 • கணினி வழி பொருத்தம் பார்த்தல்: கணினி வீடியோ கேம் அவதார்களை கொண்டு வீடியோ கேம் பயனர்கள் ஒருவருடன் இன்னொருவர் கணினி உலகில் நேரத்தை செலவழிப்பர். விருப்பம் இருப்பின், நிகழ்நேரத்தில் பிறகு சந்தித்து கொள்வர்
 • விழாக்கள் வழிப் பொருத்தம் பார்த்தல் (Singles Events): துணையற்ற ஒரு குறிப்பி்ட்ட நபர்கள் புதிய நபர்களை அறிந்து கொள்ள விழாக்கள், விளையாட்டுகள் முதலியவற்றை ஏற்பாடு செய்வர். இதன் மூலமும் டேட்டிங் நடைபெறும்

ஆதாரம்[தொகு]

 • Glencoe/McGraw-Hill. (2000). Whitney, DeBruyne, Sizer-Webb, Health: Making Life Choices (pp. 499–500)
 • Capstone Press. (2000). Havelin, Kate., Dating: What Is a Healthy Relationship?

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=களவளாவல்&oldid=3238932" இருந்து மீள்விக்கப்பட்டது