கட்டாயத் திருமணம்
கட்டாயத் திருமணம் (Forced marriage) மணமகன் அல்லது மணமகள் அல்லது இருவருடைய ஒப்புதலையும் பெறாது நடத்தப்பெறும் திருமணம் ஆகும். இருவருடைய ஒப்புதலையையும் பெற்று பெற்றோர் அல்லது மூன்றாமவர் ( மண இணைப்பாளர்) உதவியுடன் நடைபெறும் ஏற்பாட்டுத் திருமணத்திலிருந்து வேறுபட்டது; இருப்பினும் இவை இரண்டிற்கும் இடையேயுள்ள வேறுபாடு தெளிவற்று உள்ளது. உடல் வன்முறையிலிருந்து மன வன்முறை வரையிலான பலவித அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு திருமணம் கட்டாயப்படுத்தப்படுகின்றது.[1] பல பண்பாடுகளில், குறிப்பாக தெற்கு ஆசியா, ஆப்பிரிக்கப் பகுதிகளில், இன்றளவும் கட்டாயத் திருமணம் நடைபெறுகின்றது. சிலர் திருமணம் என்பது கருத்தொருமித்தவர் வாழ்வு என்ற கோட்பாட்டிற்கே இது புறம்பாக இருப்பதால், சட்டபூர்வ சொல்லான திருமணம் என்ற சொற்பயன்பாட்டை (கட்டாயத் திருமணம் என்றழைப்பதை) எதிர்க்கின்றனர்.[2] இவர்கள் இதனை கட்டாய மணவாழ்விற்குரிய இணைதல், மணவாழ்வு அடிமைத்தனம் எனக் குறிப்பிட விரும்புகின்றனர்.[3][4]
தன்விருப்புக் கொள்கை, தனியார் தன்னிச்சை கோட்பாடுகளை மீறுவதால் கட்டாயத் திருமணத்தை ஐக்கிய நாடுகள் அவை மனித உரிமைகள் மீறலாகக் கருதுகின்றது. உலக மனித உரிமைகள் சாற்றுரை மகளிர் தம் இணையை தேர்வு செய்து திருமணம் செய்யும் உரிமை அவர்களது வாழ்விற்கும் தன்மானத்திற்கும் சட்டத்தின்படியான சமநிலைக்கும் முதன்மையான உரிமையாக குறிப்பிடுகின்றது.[5] கத்தோலிக்க திருச்சபை மணமுறிவு வழங்குவதற்கான ஒரு காரணமாக கட்டாயத் திருமணத்தை ஏற்கின்றது; கட்டற்ற இருவரின் ஒப்புதலும் திருமணம் செல்லுபடியாக முதன்மை காரணியாக உள்ளது. அடிமைகள் ஒழிப்பு மாநாடு பெற்றோர், குடும்பம், மற்றவர்களின் விருப்பத்திற்கேற்ப நடத்தப்படும் திருமணத்தை மணப்பெண் நிராகரிக்கும் உரிமை இல்லாத திருமணத்தை தடை செய்கின்றது.[6] தவிரவும் இதனைச் செயற்படுத்த திருமணத்திற்கான குறைந்த வயதையும் வரையறுக்கின்றது.[7]
இந்துக்கள் முற்காலம் தொட்டு பல கட்டாயத் திருமணங்களை ஆதரித்து வந்துள்ளனர். குறிப்பாக பெண்களின் கழுத்தில் கட்டுகின்ற தாலிக்கு இருக்கும் மகத்துவத்தை தவறாக பயன்படுத்தி வந்த நிகழ்வுகளும் உள்ளன. இதில் கூடுதலாக பெண்கள் தான் பாதிக்கப்பட்டனர். மணப்பெண்ணின் விருப்பம் இல்லாத போது அவளது பெற்றோர், குடும்பம், மற்றவர்களின் விருப்பத்திற்கேற்ப மணமகன் வலுக்கட்டாயமாக மணமகளின் கழுத்தில் தாலி கட்டி அவளுக்கு திருமண வாழ்க்கையை திணித்த சம்பவங்கள் நடந்திருக்கின்றன. ஆனால், இப்போதைய சட்ட ரீதியாக இப்படிப்பட்ட கட்டாய திருமணங்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.
1969இல், சியேரா லியோனின் சிறப்பு நீதிமன்றம் "கட்டாயத் திருமணத்திற்காக" கடத்துகையும் பிடித்து வைத்திருப்பதும் போர்க்காலங்களில் மாந்தத்திற்கு எதிரான புதிய குற்றமாக கண்டறிந்தது.[8][9][10]
2013இல் முதல் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் மன்றத்தின் தீர்மானம் சிறுவர், இளமை மற்றும் கட்டாயத் திருமணத்திற்கு எதிராக நிறைவேற்றப்பட்டது; சிறுவர், இளமை மற்றும் கட்டாயத் திருமணங்கள் மனித உரிமை மீறலாக ஏற்றுக் கொண்டது; இவை “தனிநபர்கள் தங்கள் வாழ்வினை அனைத்துவித வன்முறைகளிலிருந்தும் கல்வியுரிமை, பாலுறவு மற்றும் கருத்தரிப்பு உடல்நலம் உட்பட்ட மிக உயர்ந்த உடல்நலம் பேணும் உரிமை பொன்ற மனித உரிமைகளை பாதிக்கின்ற செயற்பாடுகளிலிருந்தும் விடுபட்டு வாழ்தைத் தடுக்கின்றன" என்றும் “2015க்குப் பிறகான மேம்பாட்டு நிகழ்ச்சிகளில் சிறுவர், இளமை, கட்டாயத் திருமணங்களை ஒழிக்கும் முறைகள் விவாதிக்கப்பட வேண்டும்” எனவும் கூறியுள்ளது.[11][12][13]
கட்டாயத் திருமணத்திற்கான காரணங்கள்
[தொகு]ஓர் பண்பாட்டில் கட்டாயத் திருமணத்தை ஏற்கவும் செயற்படுத்தவும் பல காரணங்கள் அமைகின்றன. இவற்றில் சில: குடும்பப் பிணைப்புகளை வலுப்படுத்துதல் அல்லது விரிவுபடுத்துதல்; விரும்பத்தகாத நடத்தையையும் பாலின வேட்கையையும் கட்டுப்படுத்துதல்; 'விரும்பத்தகாத' உறவுகளை தடுத்தல்; ஏற்றுக்கொண்ட பண்பாட்டு அல்லது சமயக் கோட்பாடுகளை பாதுகாக்கவும் கடைபிடிக்கவும்; விரிவுபடுத்தியக் குடும்பத்தில் செல்வத்தை தக்க வைத்துக் கொள்ளுதல்; திருமணத்தால் ஏற்படும் கருத்தரிப்புக் குறித்த பிரச்சினைகளைத் தவிர்த்தல்; திருமணத்தை நடத்துவதை பெற்றோரின் கடமையாகக் கொள்ளுதல்; வறுமைக்கு எதிரான உத்திரவாதமாக; குடியுரிமை பெறுதல்.[14][15]
விளைவுகள்
[தொகு]பாதிக்கப்பட்டவர்களுக்கும் சமூகத்திற்கும்
[தொகு]இளமைக்காலத் திருமணங்களும் கட்டாயத் திருமணங்களும் பாதிக்கப்பட்டவர்களை, குறிப்பாக சிறுமிகளை, வறுமைச் சுழலிலும் அதிகாரமற்ற நிலையிலும் வைத்திருக்கின்றது. பெரும்பாலோர் வன்முறை, இழித்தல் மற்றும் கட்டாயப் பாலுறவு போன்றவற்றை எதிர்கொள்கின்றனர். இளமைக்காலத்தில் திருமணம் செய்விக்கப்பட்ட பெண்கள் தங்கள் கணவர்களால் ஆதிக்கம் செலுத்தப்படுகின்றனர். தவிரவும் தரம் குறைந்த பாலுறவையும் நலமற்ற கருத்தரிப்பையும் எதிர்கொள்கின்றனர். இளம் மனைவியர் எச்.ஐ.வியால் பாதிப்படையக்கூடும்; கட்டாயத் திருமணத்திற்கு ஆளானோர் கல்வியறிவை இழக்கின்றனர். திருமணத்திற்கு முன்பே பள்ளிகளிலிருந்து வெளியேறுகின்றனர்.[16]
சட்டப் பாதிப்புகள்
[தொகு]கட்டாயத் திருமணம் சில நாடுகளில் இல்லாநிலை திருமணமாகவும் சில நாடுகளில் தவிர்தகு திருமணமாகவும் சட்டத்தின்படி கருதப்படுகின்றது. பாதிக்கப்பட்டோர் செயலிழப்பு செய்தோ திருமண முறிவு மூலமோ தீர்வு காணவியலும். இங்கிலாந்து, வேல்சில் 1973ஆம் ஆண்டு திருமணச் சட்டத்தின்படி கட்டாயத் திருமணம் தவிர்தகு திருமணமாகும்.[17] சில நாடுகளில் கட்டாயத் திருமணம் செய்வித்தோர் குற்றவியல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.[18][19][20]
புள்ளிவிவரங்கள்
[தொகு]குறிப்பிட்ட வயதிற்கு முன்பாக கட்டாயத் திருமணத்திற்கு உட்படுத்தப்பட்ட சிறுமிகளின் விழுக்காடு:[21]
- தெற்காசியா, 18 வயதிற்கு முன்பாக: 48%
- வங்காளதேசம், 15 வயதிற்கு முன்பாக: 27.3%
- ஆபிரிக்கா, 18 வயதிற்கு முன்பாக: 42%
- நைஜர், 15 வயதிற்கு முன்பாக: 26%
- கிர்கிசுத்தான், 18 வயதிற்கு முன்பாக: 21.2%
- கசக்ஸ்தான், 18 வயதிற்கு முன்பாக: 14.4%
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2017-08-10. பார்க்கப்பட்ட நாள் 2015-03-10.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2014-04-03. பார்க்கப்பட்ட நாள் 2015-03-10.
- ↑ http://papers.ssrn.com/sol3/papers.cfm?abstract_id=1563842
- ↑ http://papers.ssrn.com/sol3/papers.cfm?abstract_id=1757283
- ↑ BBC (Ed.). (n.d.). Introduction: Forced Marriage. Retrieved December 16, 2012, from http://www.bbc.co.uk/ethics/forcedmarriage/introduction_1.shtml
- ↑ Supplementary Convention on the Abolition of Slavery, Article 1, (c)
- ↑ Supplementary Convention on the Abolition of Slavery, Article 2
- ↑ http://papers.ssrn.com/sol3/papers.cfm?abstract_id=824291
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-04-06. பார்க்கப்பட்ட நாள் 2015-03-10.
- ↑ http://papers.ssrn.com/sol3/papers.cfm?abstract_id=2014731
- ↑ Stuart, Hunter (16 October 2013). "Country With The Most Child Brides Won't Agree To End Forced Child Marriage". Huffington Post. http://www.huffingtonpost.com/2013/10/16/india-child-marriage-un-resolution-sponsor_n_4108408.html.
- ↑ http://reproductiverights.org/en/feature/un-takes-major-action-to-end-child-marriage
- ↑ http://www.girlsnotbrides.org/states-adopt-first-ever-resolution-on-child-marriage-at-human-rights-council/
- ↑ http://www.bbc.co.uk/ethics/forcedmarriage/motives_1.shtml
- ↑ http://www.justice.gc.ca/eng/rp-pr/cj-jp/fv-vf/fm-mf/p2.html
- ↑ Early and Forced Marriage- Facts, Figures and What You Can Do. (n.d.). Retrieved December 7, 2012, from Plan website: http://www.plan-uk.org/ early-and-forced-marriage/
- ↑ http://www.legislation.gov.uk/ukpga/1973/18
- ↑ http://www.legislation.gov.uk/asp/2011/15/contents/enacted
- ↑ http://www.bbc.com/news/uk-27830815
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-11-11. பார்க்கப்பட்ட நாள் 2015-03-10.
- ↑ Harden, S. (2012, August 8). Arranged/ Forced Marriage Statistics. Retrieved December 10, 2012, from Statistic Brain website: [1]
வெளியிணைப்புகள்
[தொகு]- European Immigrants Continue to be Forced Into Marriage World Politics Watch 31 January 2007
- Forced Marriage, Another Perspective
- Interview with Serap Cileli World Politics Watch 1 February 2007
- Forced Marriage Among Europe's Immigrants: Hülya Kalkan's Story World Politics Watch 8 February 2007
- Freedom Charity, UK charity raising awareness of forced marriage and 'dis-honour' based violence.
- BBC News story: Forced marriage 'could be banned'
- The UK Government's joint Home Office/Foreign & Commonwealth Office Forced Marriage Unit: Forced Marriage Unit பரணிடப்பட்டது 2007-09-14 at Archive.today
- Akhtar Amin (November 13, 2006). "Swara practised with impunity in tribal areas". Daily Times. பார்க்கப்பட்ட நாள் 2008-06-05.
- Declan Walsh (June 5, 2008). "15 child brides used to settle Pakistan feud". London: The Guardian. http://www.guardian.co.uk/world/2008/jun/05/pakistan.humanrights?gusrc=rss&feed=networkfront. பார்த்த நாள்: 2008-06-05.
- Ashfaq Yusufzai (April 1, 2006). "Blood Feuds Trap Girls in 'Compensation Marriages'". Inter Press Service. Archived from the original on 2008-06-11. பார்க்கப்பட்ட நாள் 2008-06-05.
- "Swara---A Bridge over troubled waters". Ethnomedia. Archived from the original on 2008-12-04. பார்க்கப்பட்ட நாள் 2008-06-05.
- "Virtual Slavery: The Practice of "Compensation Marriages"". United Nations Population Fund. Archived from the original on 2012-02-14. பார்க்கப்பட்ட நாள் 2008-06-05. (Microsoft Word document)