அமிலத் தாக்குதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அமிலத் தாக்குதல் என்பது வன்முறை தாக்குதல்களில் ஒன்று. அமிலங்களைக் கொண்டு எதிரிகளின் முகம், மற்றும் உடல் உறுப்புகளை சிதைத்தல், உருக்குலைத்தல், முடமாக்குதல்/ஊனமாக்குதல், தோற்றத்தை விகாரமாக்குதல் போன்றவதை இதன் நோக்கங்களாக, விளைவுகளாக இருக்கின்றன. சில நேரங்களில் உயிரிழப்புகளும் நேர்கின்றன. பெரும்பாலும் முகத்தை சிதைக்கும் நோக்கிலேயே உற்றப்படுகின்றன. தோல்களையும், திசுக்களையும் பொசுக்கி விடும், சிலநேரங்களில் எலும்புகளையும் சேதப்படுத்துகின்றன. இத்தாக்குதல்களுக்கு சல்பூரிக், நைட்ரிக் அமிலங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அய்ட்ரோகிளோரிக் அமிலமும் சில நேரங்களில் பயன்படுத்தப்படுகின்றன, என்றாலும் அதன் பாதிப்புகள் குறைவானது. இத்தாக்குதல்களின் நீண்ட நாளைய பாதிப்புகளில் கண் பார்வை பறிபோதல், முகம் மற்றும் உடல் விகார தோற்றமளித்தல் மட்டுமின்றி, சமூக விளக்கம், உளவியல் பாதிப்புகள் , பொருளாதார சிக்கல் போன்றவைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அமிலத்தாக்குதல் உலகம் முழுவதும் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அமிலத்_தாக்குதல்&oldid=2223838" இருந்து மீள்விக்கப்பட்டது