கட்டாயக் கருக்கலைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கட்டாயக் கருக்கலைப்பு (forced abortion) அச்சுறுத்தியோ வலியுறுத்தியோ பலவந்தமாகவோ அல்லது பெண்ணால் மறுக்க இயலாததை பயன்படுத்தியோ ஏற்படுத்தப்படும் கருக்கலைப்பு ஆகும். மருத்துவ சிகிச்சையால் தேவைப்படாத நேரத்தில் நிகழும் கருக்கலைப்புகளும் இதில் அடங்கும். கட்டாயக் கருவளக்கேடு போலவே கட்டாயக் கருக்கலைப்பும் பெண் இனப்பெருக்கத் தொகுதியின் மீதான உடலக தாக்கமாக கருதப்படுகின்றது.

சில நியூரம்பெர்க் தீர்ப்பாயங்களில் தன்விருப்பான அல்லது தன்விருப்பற்ற கருக்கலைப்புகள் மானுடத்துக்கு எதிரான குற்றங்களாக வாதிக்கப்பட்டுள்ளன.[1][2]

சீன மக்கள் குடியரசு[தொகு]

சீனாவில் ஒரே குழந்தை கொள்கையின் கீழ் நிர்வாகத்தால் கட்டாயப்படுத்தப்பட்ட கருக்கலைப்புகள் நிகழ்ந்துள்ளன; இவை சீனச் சட்டத்திற்கு புறம்பானவை மற்றும் அலுவல்முறையான அரசுக் கொள்கை இல்லை.[3] இவை உள்ளூர் அலுவலர்கள் மீதான அரசு அழுத்தத்தால் நிகழ்ந்துள்ளன.[4] செப்டம்பர் 29, 1997 அன்று ஐக்கிய அமெரிக்க சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட கட்டாயக் கருக்கலைப்பு கண்டனச் சட்டம் "இத்தகையோரை ஐக்கிய அமெரிக்காவிற்கு பயணிக்கவோ தங்கவோ அனுமதிக்காது கட்டாயக் கருக்கலைப்பை நிறைவேற்றிய சீனப் பொதுவுடமைக் கட்சி அலுவலர்கள், சீன அரசு மற்றும் பிறரை கண்டிக்கிறது".[5] 2012ஆம் ஆண்டில் சூன் மாதத்தில் பெங் ஜியான்மெய் ஒரே குழந்தை கொள்கையை பின்பற்றாததற்கு அபராதம் கட்டாததால் ஏழு மாத கருவை வலுக்கட்டாயமாக கலைத்தனர்.[3] சாப்பிள்ளையின் ஒளிப்படங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டதால் சீனாவில் இவ்வழக்கு இணையத்தில் பரவலாக உரையாடப்பட்டது.[6] கட்டாயக் கருக்கலைப்பிற்கு பதினைந்து நாட்கள் கழித்தும் அவரை அலுவலர்கள் துன்புறுத்தினர்.[7] சூலை 5 அன்று ஐரோப்பிய நாடாளுமன்றம் குறிப்பாக இந்த வழக்கையும் பொதுவாக ஒரே குழந்தை கொள்கைக்காக கட்டாயக் கருக்கலைப்புகளை மேற்கொள்வதையும் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியது.[8]

"வெற்றுக்கால் வழக்கறிஞரும்" செயற்பாட்டாளருமான சென் குவாங்செங்கின் பணிகளில் இத்தகைய விதிமீறல்களுக்கு எதிரான போராட்டங்களும் அடங்கியிருந்தன.[9] 2012இல் இத்தகைய நிகழ்வுகள் குறைந்துவிட்ட நிலையிலும் கட்டாயக் கருக்கலைப்பிற்கு எதிராக பொதுமக்கள் வெறுப்பு வலுப்பெற்றதாலும் பிற காரணங்களாலும் ஒரே குழந்தைக் கொள்கையை திரும்பிப் பெற சிலவிடங்களில் விவாதிக்கப்பட்டது.[4][10]

வட கொரிய அடைக்கலவாதிகள் சீனாவிலிருந்து திரும்புதல்[தொகு]

வடகொரியாவிலிருந்து சட்டத்திற்கு புறம்பாக உட்புகுந்த குடியேறிகளை சீன மக்கள் குடியரசு சிறைபிடித்து சிலகாலத்திற்குப் பின்னர் திரும்ப அனுப்புகின்றது. இவர்களில் சீனர்களால் கருவுற்றதாக ஐயமுறப்படும் பெண்களுக்கு கட்டாயக் கருக்கலைப்பு நிகழ்த்தப்படுகின்றது; உயிருடன் பிறந்த குழந்தைகள் கொல்லப்படுகின்றன.[11] முழுநிலை அடைந்த கருவின் கலைப்பு ஊசிமருந்துகள் மூலம் தூண்டப்படுகின்றன; உயிருள்ள குறைப்பிரசவ குழந்தைகள் அல்லது முழுநிலை பிரசவ குழந்தைகள் கொல்லப்படுகின்றன.[12]

மேற்சான்றுகள்[தொகு]

 1. Congressional Record, V. 144, Pt. 10, June 25, 1998 to July 14, 1998, page 15137
 2. "Nuremberg and the Crime of Abortion". U. Toledo. L. Rev. 42: 283. http://digitalcommons.liberty.edu/cgi/viewcontent.cgi?article=1047&context=lusol_fac_pubs. பார்த்த நாள்: 12 July 2014. 
 3. 3.0 3.1 David Barboza (June 15, 2012). "China Suspends Family Planning Workers After Forced Abortion". The New York Times. http://www.nytimes.com/2012/06/16/world/asia/china-suspends-family-planning-workers-after-forced-abortion.html. பார்த்த நாள்: June 27, 2012. 
 4. 4.0 4.1 Edward Wong (July 22, 2012). "Reports of Forced Abortions Fuel Push to End Chinese Law". The New York Times. http://www.nytimes.com/2012/07/23/world/asia/pressure-to-repeal-chinas-one-child-law-is-growing.html. பார்த்த நாள்: July 23, 2012. 
 5. "H.R. 2570 (105th): Forced Abortion Condemnation Act". Govtrack.us. பார்க்கப்பட்ட நாள் 27 April 2012.
 6. Evan Osnos (June 15, 2012). "Abortion and Politics in China" (Blog by reporter in reliable source). The New Yorker. http://www.newyorker.com/online/blogs/evanosnos/2012/06/abortion-and-politics-in-china.html. பார்த்த நாள்: June 27, 2012. 
 7. Edward Wong (June 26, 2012). "Forced to Abort, Chinese Woman Under Pressure". The New York Times. http://www.nytimes.com/2012/06/27/world/asia/chinese-family-in-forced-abortion-case-still-under-pressure.html. பார்த்த நாள்: June 27, 2012. 
 8. "EU Parliament condemns China forced abortions". Philippine Daily Inquirer. Agence France-Presse. July 6, 2012. http://newsinfo.inquirer.net/224353/eu-parliament-condemns-china-forced-abortions. பார்த்த நாள்: July 7, 2012. 
 9. Pan, Philip P. (8 July 2006). "Chinese to Prosecute Peasant Who Resisted One-Child Policy". Washington Post. http://www.washingtonpost.com/wp-dyn/content/article/2006/07/07/AR2006070701510.html. பார்த்த நாள்: 28 April 2010. 
 10. Forced abortion sparks outrage, debate in China CNN, June 2012
 11. James Brooke (June 10, 2002). "N. Koreans Talk of Baby Killings". The New York Times. http://www.nytimes.com/2002/06/10/world/n-koreans-talk-of-baby-killings.html. பார்த்த நாள்: August 3, 2012. 
 12. David Hawk (2012). The Hidden Gulag Second Edition The Lives and Voices of "Those Who are Sent to the Mountains" (PDF) (Second edition ed.). Committee for Human Rights in North Korea. pp. 111–155. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0615623670. பார்க்கப்பட்ட நாள் September 21, 2012. {{cite book}}: |edition= has extra text (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கட்டாயக்_கருக்கலைப்பு&oldid=2718363" இலிருந்து மீள்விக்கப்பட்டது