உள்ளடக்கத்துக்குச் செல்

நியூரம்பெர்க் தீர்ப்பாயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


நியூரம்பெர்க் தீர்ப்பாயம் (Nuremberg Trials) நாசி ஜெர்மனியின் தொடர் அரசியல் கொலைகள், இராணுவ செயல்பாடுகள் மற்றும் அதன் முரண்பாட்டுத் தலைமைச் செயல்பாடுகளை விசாரணை செய்ய இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியின் தோல்விக்குப்பின் ஏற்படுத்தப்பட்ட விசாரணை ஆணையம் தான் நியூரம்பெர்க் தீர்ப்பாயம்.

பன்னாட்டு இராணுவ நடுவர் மன்றம்

ஜெர்மனி நியூரம்பெர்க் நகரில் 1945 க்கும் 1946 க்குமிடையே நீதி அரண்மணையில் (ஜஸ்டிஸ் பேலஸ்-Palace of the Justice) ஏற்படுத்தப்பட்டது. இந்த தீர்ப்பாயத்தால் அமைக்கப்பட்ட சர்வதேச இராணுவ நடுவர் மன்றத்தின் (International Military Tribunal) முன் ஏராளமான யுத்த விதி மீறல் குற்றவாளிகள் நிறுத்தப்பட்டனர்.

முதல் விசாரணை

இதன் முதல் விசாரணையில், குறிப்பிடத்தக்கவர்களாக , பிடிபட்ட நாசி ஜெர்மனித் தலைவர்கள் 21 பேர் குற்றவாளிகளாக நிறுத்தப்பட்டனர். முதல் விசாரணைக் கூட்டம் நவம்பர் 20, 1945, முதல் அக்டோபர் 1, 1946, வரை நடைபெற்றது.

இரண்டாவது விசாரணை

இதன் இரண்டாவது விசாரணை குறைந்த குற்றம் புரிந்தவர்களாகக் கருதப்பட்ட குற்றவாளிகளை ஐக்கிய நாடுகள் நியூரம்பெர்க் இராணுவ நடுவர் மன்றம் சட்ட எண் 10 ன் கீழ் நிறுத்தப்பட்டனர். இந்த ஆணையம் மருத்துவர்கள் தீர்ப்பாயம் மற்றும் நீதிபதிகள் தீர்ப்பாயங்களை உள்ளடக்கியது.

கருத்து வேறுபாடு

சமீபத்தில் ஜனவரி 2, 2006 அன்று பிரித்தானிய யுத்தக் குழு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் மூன்று நாடுகளுக்கும் எழுந்த மூக்கூட்டு ஒப்பந்த சர்ச்சைகள் போன்றவைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. விசாரணைக் குறித்து மூன்று நாட்டுத் தலைவர்களும் கருத்து வேறுபாடுகள் கொண்டிருந்தனர் என்பதை தெளிவக்கியுள்ளது.

சர்ச்சிலின் மனிதநேயம்

பல நேரங்களில் வின்சன்ட் சர்ச்சில் யுத்தக்குற்றத் தண்டணையளிப்பில் கருத்து வேறுபாடுகள் கொண்டிருந்தார். அவருடைய நோக்கம் மனித நேயம் கொண்டதாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட்டும், ஜோசப் ஸ்டாலினும் ஜெர்மானியர் பலரை தண்டிப்பதிலேயே இருந்தது என்று கூறப்படுகிறது.