பிராங்க்ளின் ரூசவெல்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பிராங்கிளின் ரோசவெல்ட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பிராங்கிளின் டெலானோ ரூஸ்வெல்ட்
Franklin Delano Roosevelt
FDR in 1933.jpg
ஐக்கிய அமெரிக்காவின் 32வது குடியரசுத் தலைவர்
பதவியில்
மார்ச் 4, 1933 – ஏப்ரல் 12, 1945
துணை குடியரசுத் தலைவர் ஜோன் கார்னர் (1933–1941),
ஹென்றி வொலஸ் (1941–1945),
ஹாரி எஸ். ட்ரூமன் (1945)
முன்னவர் ஹேர்பேர்ட் ஹூவர்
பின்வந்தவர் ஹாரி எஸ். ட்ரூமன்
நியூயோர்க்கின் 48வது ஆளுநர்
பதவியில்
ஜனவரி 1, 1929 – டிசம்பர் 31, 1932
Lieutenant ஹேர்பேர்ட் லேமன்
முன்னவர் அல்பிரட் ஸ்மித்
பின்வந்தவர் ஹேர்பேர்ட் லேமன்
தனிநபர் தகவல்
பிறப்பு சனவரி 30, 1882(1882-01-30)
ஹைட் பார்க், நியூயோர்க்
இறப்பு ஏப்ரல் 12, 1945(1945-04-12) (அகவை 63)
வோர்ம் ஸ்ப்றிங்ஸ், ஜோர்ஜியா
அரசியல் கட்சி ஜனநாயகக் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) எலனோர் ரூஸ்வெல்ட்
படித்த கல்வி நிறுவனங்கள் ஹார்வர்டு பல்கலைக்கழகம்
பணி வழக்கறிஞர்
சமயம் எபிஸ்கோபல் தேவாலயம்
கையொப்பம்

பிராங்கிளின் டெலானோ ரூஸ்வெல்ட் (Franklin Delano Roosevelt, ஜனவரி 30, 1882 – ஏப்ரல் 12, 1945), 32வது ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஆவார். அரசுத் தலைவராக 1933 முதல் 1945 வரை நான்கு முறை இவர் தெரிவுசெய்யப்பட்டார். இரு தடவைகளுக்கு மேல் அமெரிக்கத் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டவர் இவர் ஒருவரே. உலகளாவிய பொருளாதார நெருக்கடி, மற்றும் இரண்டாம் உலகப் போர் ஆகியவற்றில் நேரடிப் பங்கு வகித்த இவர் 20ம் நூற்றாண்டின் முக்கிய அரசியல் தலைவராகவும் ஐக்கிய அமெரிக்காவின் மூன்று முக்கிய குடியரசுத் தலைவர்களில் ஒருவராகவும் கணிகக்ப்படுகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

இவர் நியூயார்க்கில் ஹைடி பார்க் நகரில் பிறந்தார். இவரது தந்தை ஜேம்ஸ் ரூஸ்வெல்ட் வணிகத் தொழில் செய்தார். ஜேம்ஸ் ரூஸ்வெல்ட், சாரா ஆன் திலானோ ஆகியோர் இவரது பெற்றோர். இவரது பெற்றோரின் குடும்பத்தார் பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவர்கள். இளவயதில் அதிக முறை ஐரோப்பாவிற்குச் சென்று வந்ததால், பிரெஞ்சு, ஜெர்மன் மொழிகளில் பேசக் கற்றார். குதிரையேற்றம், போலோ, டென்னிஸ் உள்ளிட்ட விளையாட்டுகளைக் கற்றுத் தேந்தார். பதின்வயதில் கோல்ப் விளையாட்டில் தேர்ச்சி பெற்றார். மாசாசூசெட்ஸ் குரோடன் பள்ளியில் படித்தார். பள்ளியின் தலைமையாசிரியர் எண்டிகோட் பீபாடி இவருக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தார். இவரின் திருமணத்தின் பொழுதும், அதிபராகப் பதவியேற்ற நிகழ்ச்சியிலும் பங்கேற்றுச் சிறப்பித்தார். இவர் ஹார்வர்டு கல்லூரியில் பயின்றார். ஹார்வர்டு கிரிம்சன் என்ற நாளேட்டின் முதன்மை ஆசிரியராகவும் விளங்கினார். இவர் எலியனேர் என்ற பெண்ணைத் திருமணம் செய்தார். இவரது இளவயது திருமணத்தை இவரது தாயார் ஏற்கவில்லை. எலியனேரின் மாமா திருமணத்தை நடத்தினார். இவர்களுக்கு ஆறு குழந்தைகள் பிறந்தன. இவருக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]