கௌரவக் கொலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கௌரவக் கொலை என்பது பல நாடுகளில் தங்கள் குடும்பத்திற்கு மானமிழப்பு வகையில் நடந்து கொண்ட பெண்ணை கொலை செய்யும் வழக்கம் ஆகும். பெண்கள் குடும்பமோ அல்லது சமுதாயமோ தடை செய்யப்பட்ட மனிதனுடன் ஆசையோ, நட்போ, காமமோ கொண்டால் அப்பெண்ணை பயங்கர தண்டனைக்கு உள்ளாக்கி, கொலை செய்யத் தூண்டுகிறது இவ்வழக்கம். பொதுவாக அக்குடும்பத்தார் அப்பெண்ணிடம் உறவு கொண்ட ஆணையும் அவ்வாறே தண்டனைக்கு உள்ளாக்குவர். மனித உரிமை காப்பு கௌரவக் கொலையை இவ்வாறு வறையருக்கிறது.[1] கௌரவக்கொலை பொதுவாக ஒரு குடும்பத்தினரால் அக்குடும்பத்தின் பெண்ணின் மீது, குடும்ப மானபங்கம் ஆனது என்ற காரணத்தால், கொலை ஆகும் அளவு தாக்குதல் செய்வதாகும். இக்காரணம் பெரியோர்களால் நிச்சயம் செய்யப்பட்ட திருமணத்தை மறுப்பதிலிருந்து, கற்பழிப்பு முயற்சிக்கு ஆளாகுவதற்கும், கொடுங்கோல் கணவனிடமிருந்து திருமண ரத்து கோரியதும், மற்ற ஆண்களிடம் நட்போ, காம இச்சையோ நாடுவது வரை ஆகும். பொதுவாக அப்பெண்ணின் செய்கை மானபங்கம் ஏற்பட காரணம் என்ற உணர்வு தாக்குதலுக்கு சாக்காக போதும்.

பெண்களும் சமூகமும்[தொகு]

கௌரவக்கொலை குடும்பத்தின் தனி விவகாரம் என கருதப்பட்டு, காவல் நிலையங்களில் புகார் கொடுப்பதோ, நீதிமன்றங்களுக்கு முன் வருவதோ இல்லை. பல நாடுகளில் நீதி முறைகளும் இக்கொலைகாரகர்களுக்கு சாதகமாக உள்ளன. இந்த முறை மனித உரிமைகள் ஆணையத்தின் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. இவை பெண்களின் சுதந்திரத்தையை பாதித்து, அவர்களை பயமுறுத்தி கட்டுக்குள் வைத்துள்ளன. மனிதயியலாளர் பேரா.ஷரீப் கனான படி "கௌரவக்கொலை தந்தைவழி, பிதாமாக சமூகங்களில் குடும்ப அதிகாரங்களை கறாராக அமைத்து, பெண்களை அடக்குவதற்கு உதித்தன. தந்தைவழி சமூகங்களில் குடும்பம், கூட்டம், ஜாதி முதலியவற்றில் ஆண்கள் சந்ததி உற்பத்தியை கட்டுப்படுத்த முயல்கிறார்கள். இச்சமூகங்களில் பெண்கள் ஆண்களுக்கு மகவு பெரும் தொழிற்சாலைகளே. கௌரவக்கொலை காமசெய்கைகளை கட்டுப்படுத்துவதில்லை. (கௌரவக்கொலைக்கு) பின்னணி பெண் மகவள சக்தியையும், சந்ததி உற்பத்தியையும் கட்டடக்குவதே"

எந்த அளவு?[தொகு]

இது பொதுவாக மத்திய ஆசிய , வடக்கு ஆப்பிரிக்க நாடுகளிலும் , அல்பேனியா, பாகிஸ்தான், பங்களாதேசம் போன்ற முஸ்லிம் நாடுகளிலும், நடப்பதாக தெரிகிறது.

சட்டமுறைகள்[தொகு]

சட்டமுறைகள் கௌரவக்கொலைக்கு சாதகமாக உள்ள நாடுகள்:

ஜார்டன்: தண்டனை ஒழுங்கின் 240ம் ஷரத்தின்படி "எந்த நயாராவது அவர் மனைவியோ, குடும்பப் பெண்ணோ மற்ற ஆண்களுடன் கள்ளக்காதல் கொள்வது தெரிந்து அவளை கொன்றால் அல்லது காயப் படுத்தினால், அவர் தண்டனையிலிருந்து நீக்கம் அடைவர்."

சிரியா: ஷரத்து 548 படி "ஒரு ஆண் தன் குடும்பத்தின் பெண்ணை கள்ள காதல் செய்கைகளில் பிடித்து, மரணமோ, கொலையோ ஏற்பட்டல், அவர் தண்டனையிலிருந்து நீக்கம்"

மொராக்கொ: தண்டனை ஒழுங்கு ஷரத்து 548 "கொலை, அடித்தல், காயமேற்படுத்தல் இவை ஒரு கணவனால் கள்ளக்காதலுடைய மனைவியின் மேலேயோ அவள் காதலன் மேலேயோ செய்தால், அச்செய்கைகள் மன்னிக்கப்படும்"

ஹைடி: தண்டனை ஒழுங்கு ஷரத்து 269 " ஒரு கணவன் தன் மனைவியையோ அல்லது (பெண்) சகவசிப்பவரையோ கள்ளப் காம செய்கைகளில் கண்டுபிடித்து கொலை செய்தால், அவருக்கு மன்னிப்பு"

துருக்கி: துருக்கியில் கௌரவக்கொலை செய்தால் ஆயுள் தண்டனை கிடைக்கும்

இந்நாடுகளில் கௌரவக்கொலை சட்டத்திற்கு புரம்பானது ஆனால் மிகப்பரவல்

பாகிஸ்தான்: கௌரவக்கொலை பாகிஸ்தானில் காரி-காரோ என்றழைக்கப் படுகிறது. இந்தக் குற்றம் சாதாரனமான கொலையாக கருதப்படுகிரது; ஆனால் நடத்துமுறையில் போலீஸும், நீதிமன்றங்களும் இக்கொலையை புரக்கணித்து, எடுத்துக் கொள்வதில்லை. சர்வதேச வேண்டுகோள்களுக்கு இணங்க பாகிஸ்தான் டிசம்பர் 2004ல், இக்கொலையை தடுக்கும்படி சட்டம் ஏற்றியது; அது கொலையாளர் கொலை செய்யப் பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு 'தண்டனைப் பணம்' கொடுக்க ஏற்பாடு செய்கிறது. பாகிஸ்தானிய மாது சங்கங்கள் இந்த சட்டம் ஒரு கேலிக்கூத்தென்று ஏளனம் செய்கிறனர் ஏனென்றால் வழக்கமாக ஒரு பெண்ணின் குடும்பத்தினரே அவலை கொலை செய்கிறனர். பாகிஸ்தானிய மனித உரிமை கமிஷன் அறிக்கை அறிக்கையின் படி, 1998ல் பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் 286 கௌரவக்கொலைகள் செய்யப்பட்டன. உண்மையான, தகவலறியப்படாத குற்றங்கள் இதற்கு மேல் பல மடங்கு. 4 வருடங்களுக்கு முன் முக்தர் மாய் என்ற பெண் 'கௌரவ கற்பழிப்பு'க்கு ஆளானார். [1].

பாலஸ்தின்: பாலஸ்தின் பெண்ணுரிமை அறிக்கையின் படி காசா, மேற்கு கரைகளில் 1998 மட்டுமே 20 பெண்கள் கொலை செய்யப்பட்டனர். ஆனால் தகவல் இல்லாமல் மேலும் பல பெண்கள் 'கௌரவ' கொலைக்கு ஆளாவதாக நம்பப்படுகிரது

தமிழர் கதைப்பாடலில்[தொகு]

தமிழர் நாட்டாறியல் கதைப் பாடல்களில் எண்ணற்ற கதைகள் சாதியின் கட்டுப்பாட்டினை மீறியமைக்காக கொல்லப்பட்டவர்களைப் பற்றி விவரிக்கிறது.

காத்தவராயன், மதுரை வீரன், முத்துப்பட்டன், சின்ன நாடன், கௌதல நாடன் ஆகியோர் சாதியின் சட்டதிட்டங்களுக்கு எதிராக காதல் செய்தமையால் இறந்து போனவர்கள்.[2] இவர்களை இந்து சமயம் சிறு தெய்வங்களாக வணங்குகிறது. இவர்களுக்கு தனித்த வழிபாடுகளும், விழாக்களும் உள்ளன.

இதையும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. "Integration of the human rights of women and the gender perspective: Violence Against Women and "Honor" Crimes". Human Rights Watch. 6 ஏப்ரல் 2001. பார்க்கப்பட்ட நாள் 09 மே 2012. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  2. http://www.dinamani.com/weekly_supplements/sunday_kondattam/2013/06/30/360-%25E0%25AE%259F%25E0%25AE%25BF%25E0%25AE%2595%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AE%25BF/article1660323.ece?service%3Dprint&ei=akqtr-KY&lc=en-IN&s=1&m=49&host=www.google.co.in&ts=1467289496&sig=AKOVD67DoW_CnBjOcUp2dkYrCxHR16pIpw 360 டிகிரி-தினமணி
"https://ta.wikipedia.org/w/index.php?title=கௌரவக்_கொலை&oldid=3929474" இலிருந்து மீள்விக்கப்பட்டது