பெண் சிசுக் கொலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெண் சிசுக் கொலை என்பது ஒரு குழந்தை பெண்ணாகப் பிறக்கும் என அறிந்தால், அல்லது பெண்ணாகப் பிறந்தால் அந்தக் குழந்தையைக் கருக்கலைப்பது அல்லது கொலை செய்வதாகும். இந்தியா, சீனா, கொரியா போன்ற நாடுகளில் இது பரவலாக நடைபெறுகிறது. தமிழ்ச் சமூகத்திலும் குறிப்பாக தமிழ்நாட்டில் இது மிதமாக நடைபெறுகிறது. இந்தியாவில் பிறந்த பெண் குழந்தைகளும் பரவலாக கொல்லப்படுகிறது.[1]

காரணங்கள்[தொகு]

பல ஆசிய சமூகங்கள் ஆண் ஆதிக்க சமூகங்களாக தொடர்ந்து இருந்து வருகின்றன.[சான்று தேவை] ஆண்கள் கூடுதலாக பண்பாட்டு, அரசியல், பொருளாதார வழிகளில் மதிக்கப்படுகிறார்கள். மேலும் பெண் குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவது கூடிய பல தடைகளைக் கொண்டது. இதனால் பல பெற்றோர்கள் ஆண் குழந்தைகளை விரும்புகிறார்கள்.[சான்று தேவை]

சட்டம்[தொகு]

இது அனைத்து நாடுகளிலும் பெரும் தண்டனைக்கு உரிய குற்றம் என்றாலும், கருக்கலைப்பது, சிசுக் கொலை போன்றவற்றை கண்டுபிடித்துத் தண்டிப்பது நடைமுறையில் மிக அரிதாகவே நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் பெண் சிசுக் கொலையும் தடுக்கும் நடவடிக்கைகளும்[தொகு]

பெண் சிசுக் கொலை தமிழ்நாட்டில் மிதமாக இருக்கின்றது.[சான்று தேவை] இதனைத் தடுப்பதற்காக தொட்டில் குழந்தை திட்டம் என்ற ஒரு திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டது.[சான்று தேவை]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.dw.de/female-infanticide-in-india-mocks-claims-of-progress/a-15900828 Female infanticide in India mocks claims of progress

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெண்_சிசுக்_கொலை&oldid=3438124" இலிருந்து மீள்விக்கப்பட்டது