சிறுவர் திருமணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிறுவர் திருமணம் அல்லது குழந்தைத் திருமணம் என்பது திருமண வயதை அடையாத ஆண், பெண் இரு பாலினத்தவருக்கும் நடத்தப்படும் திருமணம் ஆகும். இதில் திருமண வயது என்பது நாடுகளுக்கிடையில் சட்டங்களின் அடிப்படையில் மாறுபடுகிறது.

இந்தியத் திருமண வயது[தொகு]

இந்திய நாட்டுச் சட்டப்படி பெண்ணிற்கு என்றால் 18 வயதும், ஆணிற்கு 21 வயதும் முடிவடைந்திருக்க வேண்டும். இந்தியாவில் திருமண வயதை அடையாத நிலையில் நடத்தப்படும் திருமணங்கள் குற்றமாகக் கருதப்பட்டு தண்டனைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறுவர்_திருமணம்&oldid=2222595" இலிருந்து மீள்விக்கப்பட்டது