மாணவகன் முற்றுகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
abcdefgh
8
a8 black rook
c8 black bishop
d8 black queen
e8 black king
f8 black bishop
h8 black rook
a7 black pawn
b7 black pawn
c7 black pawn
d7 black pawn
f7 white queen
g7 black pawn
h7 black pawn
c6 black knight
f6 black knight
e5 black pawn
c4 white bishop
e4 white pawn
a2 white pawn
b2 white pawn
c2 white pawn
d2 white pawn
f2 white pawn
g2 white pawn
h2 white pawn
a1 white rook
b1 white knight
c1 white bishop
e1 white king
g1 white knight
h1 white rook
8
77
66
55
44
33
22
11
abcdefgh
மாணவகன் முற்றுகை - கருப்புக்கு இறுதி முற்றுகை.
மாணவகன் முற்றுகையை விளக்கும் இயங்கு படம்

சதுரங்க விளையாட்டில் மாணவகன் முற்றுகை (Scholar’s mate ) பின்வரும் நகர்வுகளால் அடையப்படுகிறது.

1. e4 e5
2. Qh5 Nc6
3. Bc4 Nf6??
4. Qxf7#

மேற்கண்ட நகர்வுகள் முன்னுக்குப் பின்னாக வெவ்வேறு வரிசை முறைகளிலும் சில வித்தியாசங்களுடன் ஆடப்படுவதுண்டு. ஆனால் அடிப்படை உத்தி ஒன்றேயாகும். இராணியும் அமைச்சரும் இணைந்து f7 சதுரத்தில் முற்றுகை தாக்குதல் நடத்தியோ, அல்லது கருப்பு ஆட்டக்காரராக இருந்தால் f2 சதுரத்தில் முற்றுகை தாக்குதல் நடத்தியோ வெற்றி பெறுவதே இந்த உத்தி.

இதை சில நேரங்களில் நான்கு நகர்வு முற்றுகை என்றும் அழைப்பதும் உண்டு. ஆனால், நான்கு நகர்வுகளில் ஆட்டத்தை முடிக்க வேறு முறைகளும் உள்ளன என்பதால், மேற்கண்ட நகர்வுகள் உள்ள வரிசையே மாணவகன் முற்றுகை எனப்படுகிறது.

மாணவகன் முற்றுகையை தவிர்த்தல்[தொகு]

abcdefgh
8
a8 black rook
c8 black bishop
d8 black queen
e8 black king
f8 black bishop
h8 black rook
a7 black pawn
b7 black pawn
c7 black pawn
d7 black pawn
f7 black pawn
h7 black pawn
c6 black knight
f6 black knight
g6 black pawn
e5 black pawn
c4 white bishop
e4 white pawn
f3 white queen
a2 white pawn
b2 white pawn
c2 white pawn
d2 white pawn
f2 white pawn
g2 white pawn
h2 white pawn
a1 white rook
b1 white knight
c1 white bishop
e1 white king
g1 white knight
h1 white rook
8
77
66
55
44
33
22
11
abcdefgh
1.e4 e5 2.Qh5 Nc6 3.Bc4 g6 4.Qf3 Nf6,என்ற நகர்வுகளுக்குப் பின்னர் கருப்பு வெற்றிகரமாக மாணவகன் முற்றுகையைத் தவிர்த்துள்ளது.
abcdefgh
8
a8 black rook
b8 black knight
c8 black bishop
e8 black king
g8 black knight
h8 black rook
a7 black pawn
b7 black pawn
c7 black pawn
d7 black pawn
e7 black queen
f7 black pawn
g7 black pawn
h7 black pawn
c5 black bishop
e5 black pawn
h5 white queen
c4 white bishop
e4 white pawn
a2 white pawn
b2 white pawn
c2 white pawn
d2 white pawn
f2 white pawn
g2 white pawn
h2 white pawn
a1 white rook
b1 white knight
c1 white bishop
e1 white king
g1 white knight
h1 white rook
8
77
66
55
44
33
22
11
abcdefgh
1.e4 e5 2.Bc4 Bc5 3.Qh5,நகர்வுகளுக்குப் பின்னர் கருப்பு 3...Qe7!விளையாடி தடுக்கிறார்.

எல்லா நிலைகளிலும் ஆட்டத்தில் எப்போதாவது நிகழும் முட்டாளின் இறுதி முற்றுகையைப் போலில்லாமல் மாணவகன் முற்றுகை பொதுவாக ஆரம்பநிலை ஆட்டக்காரர்கள் நிலையில் ஏற்படுகிறது. 1. e4 e5 2. Qh5 Nc6 3. Bc4 நகர்த்தல்களுக்குப் பின்னர் கருப்பு ஒருவேளை 3... Nf6?? என்று நகர்த்தினால் வெள்ளை உடனடியாக 4. Qxf7#. என்று விளையாடி இறுதி முற்றுகையை நிகழ்த்திவிடுவார். எனவே இந்த அச்சுறுத்தலில் இருந்து விடுபட கருப்பு 3...Qe7 அல்லது 3...g6 என்று விளையாடலாம். கருப்பு 3...g6 என்று விளையாடினால் வெள்ளை மீண்டும் அதே 5. Qxf7# அச்சுறுத்தலை உண்டாக்க விரும்பி 4. Qf3 என்று விளையாடுவார். இதை கருப்பு எளிதாக 4... Nf6 என்று விளையாடி தடுக்கலாம். (படம்) பின்னர் f8- அமைச்சரை (...Bg7) என விளையாடி விலாமடிப்புத் தேர் உருவாக்கி ஆட்டத்தை தொடரலாம்.

வெள்ளை ஆட்டக்காரர் அமைச்சர் திறப்பு என்ற வேறு வரிசை முறையிலும் மாணவகன் முற்றுகைக்கு முயற்சிக்கலாம். 1. e4 e5 2. Bc4 Bc5 3. Qh5 ( f7 சதுரத்தில் மாணவகன் முற்றுகைக்கான அச்சுறுத்தல் ) இப்பொழுது கருப்பு 3... Qe7! ஆடலாம். ( படம் ); மாறாக இச்சமயத்தில் 3...g6? விளையாடுவது மிகப்பெரும் தவறாகும். ஏனெனில் 4.Qxe5+ மற்றும் 5.Qxh8) ஆடும் வாய்ப்பு வெள்ளை ஆட்டக்காரருக்கு ஏற்பட்டு கருப்பு ஆட்டக்காரருக்கு பாதுகாப்பு இல்லாமல் போகும். எனவே கருப்பு 2...Bc5 ஆடுவதற்குப் பதிலாக 2...Nf6 ஆடுவது சிறந்ததாகும்.

திறப்புகள்[தொகு]

f7 சதுரத்தில் விரைவான முற்றுகை நிகழ்கிறது என்றாலும் இத்தகைய முடிவு தொடக்க நிலை ஆட்டக்காரர்களைத் தாண்டி பிறநிலைகளில் ஒருபோதும் நிகழ்வதில்லை. f7 கட்டத்திற்கு கருப்பு இராசா மட்டுமே பாதுகாப்பு என்பதால் இம்முற்றுகை உத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறது. இதனடிப்படையில் பல சதுரங்க திறப்பு நகர்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன. உதாரணமாக 1. e4 e5 2. Nf3 Nc6 3. Bc4 Nf6 என்ற ந்கர்வுகளுக்குப் பின்னர் ( இரண்டு குதிரைகள் தடுப்பாட்டம் ) வெள்ளை ஆட்டக்காரருக்கு உள்ள சிறந்த நகர்வு 4. Ng5 ஆகும். மாணவகன் முற்றுகைக்கான f7 சதுரத்தை தாக்குகிறார். வெறுக்கத்தக்க இந்த தாக்குதலை கருப்பு எதிகொள்ள வேண்டியது கட்டாயமாகிறது. பிரைடுலிவர் தாக்குதல் விளையாட்டுக்குள் f7 சதுரத்தில் வெள்ளைக் குதிரையின் தியாகமும் அடங்குகிறது.

வேவார்டு இராணி தாக்குதல் (1. e4 e5 2. Qh5?!) என்ற திறப்பாட்டம் மற்றும் நெப்போலியன் திறப்பு (1. e4 e5 2. Qf3?!) என்ற திறப்பாட்டம் இரண்டும் அடுத்த நகர்வை (3. Bc4) உத்தியுடன் மாணவகன் முற்றுகையை நோக்கியே நகர்த்தப்படுகின்றன. உயர்நிலைப் போட்டிகளில் நெப்போலியன் திறப்பு எப்போதும் ஆடப்படவில்லை. வேவார்டு திறப்பு எப்போதாவது அபூர்வமாக முயற்சி செய்யப்படுகிறது. கிராண்ட்மாஸ்டர் இக்காரு நாகமுரா வெள்ளை ஆட்டக்காரருக்கு நடு ஆட்டத்தில் சில அனுகூலங்களை எதிர்நோக்கி நடைமுறையில் மாணவகன் முற்றுகையை முயற்சித்துள்ளார்.

மற்ற மொழிகளில் மாணவகன் முற்றுகை[தொகு]

  • பிரெஞ்சு, துருக்கி, செருமன், டச்சு, எசுப்பானியம், போர்த்துகீசியம் போன்ற மொழிகளில் : செப்பேர்டு மேட்
  • இத்தாலிய மொழியில் : பார்பெர்சு மேட்
  • பெர்சியன், கிரீக் மற்ரும் அராபியன் மொழியில் : நெப்போலியன் பிளான்
  • உருசிய மொழியில் : சில்ரன்சு மேட்
  • போலந்து மொழியில் : ( முட்டாளின் இறுதி அறிஞர் முற்றுகையாக கருதப்படுகிறது.)
  • டென்மார்க்கு, செருமன், குரொசியா. அங்கேரி, சுலோவீனியன், சுலோவாகியன், இப்ரூ மொழிகளில்: சூமேக்கர் மேட்
  • பின்லாந்து, சுவீடன், நார்வே மொழிகளில்: சுகூல் மேட்

மேற்கோள்கள்[தொகு]

  • Hooper, David; Whyld, Kenneth (1992), "Scholar's Mate", The Oxford Companion to Chess (2nd ed.), Oxford University Press, ISBN 0-19-280049-3
  • Kidder, Harvey (1960), Illustrated Chess for Children, Doubleday, ISBN 0-385-05764-4
  • Sunnucks, Anne (1970), "Scholar's Mate", The Encyclopaedia of Chess, St. Martins Press, ISBN 978-0-7091-4697-1

இவற்றையும் காண்க[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=மாணவகன்_முற்றுகை&oldid=2630555" இலிருந்து மீள்விக்கப்பட்டது