சாகீர் உசைன் (இசைக் கலைஞர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜாகீர் ஹூசைன்
ஜாகீர் ஹூசைன்
பிறப்பு9 மார்ச்சு 1951 (1951-03-09) (அகவை 73)
செயற்பாட்டுக்
காலம்
1963 முதல் இன்று வரை
வலைத்தளம்
www.zakirhussain.com

ஜாகீர் ஹூசைன் (ஆங்கிலம்: Zakir Hussain இந்தி : ज़ाकिर हुसैन) (9 மார்ச் 1951) இந்தியாவைச் சேர்ந்த தபேலா இசைக் கலைஞர் ஆவார். இவர் தபேலா இசைக் கலைஞர் அல்லா ரக்காவின் மகனாவார்.[1] இவர் இசையமைப்பாளராகவும் மற்றும் நடிகராகவும் அறியப்படுகிறார். இவர் மும்பையில் பிறந்தவர் ஆவார். தனது ஏழாவது வயதில் தபேலா வாசிக்கத் தொடங்கினார். 1970 ஆம் ஆண்டு இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக அமெரிக்கா சென்றார். ஆண்டிற்கு 150 இசை நிகழ்ச்சிகளுக்கு மேல் நடத்தியுள்ளார்.[2]

கௌரவம்[தொகு]

1996இல் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இந்தியன் திரைப்படத்தில் இடம்பெற்ற "டெலிஃபோன் மணிபோல்" எனத் தொடங்கும் தமிழ் பாடலில் "ஜாகீர் ஹூசைன் தபேளா இவள்தானா" என்கின்ற வரி இவரை பெருமைப் படுத்தும் விதமாக அமைந்துள்ளது. இப்பாடலை எழுதியவர் கவிஞர் வைரமுத்து.

விருதுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-05-06. பார்க்கப்பட்ட நாள் 2014-04-30.
  2. "Zakir Hussain Moment! Records". Archived from the original on 18 பிப்ரவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 5 February 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)