கொல்லா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கொல்லா இனத்தவர்கள் தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள, தெலுங்கு பேசும் யாதவர்களாக அறியப்படுகிறார்கள். 1931 இல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை அடிப்படையில் இவர்கள் எட்டு லட்சத்து ஆறாயிரத்து நானுறு பேர் உள்ளதாக ஆவணம் தெரிவிக்கின்றது. ஆந்திராவில் இருந்து தமிழகம் வந்த நாயக்கர் மரபினர்களில் இவர்களும் ஒரு குழுவினராக உள்ளனர். இவர்களைப் பொதுவில் நாயுடு அல்லது நாயக்கர் என்று அழைக்கின்றனர். இவர்கள் வடக்கில் இருந்து வந்ததால் வடுகர் என்றும் அழைக்கப்படுகின்றனர். தொட்டிய நாயக்கர் பிரிவில் வரும் கொல்லவார் மரபினராகவும் வருகின்றனர் .

பூர்விகம்[தொகு]

மகாபாரதத்தில் வரும் யவதி ராஜா மரபினராகவே கொல்லா மற்றும் இவர்களின் கிளை சாதிகளைக் கூறுகின்றனர். யவதி ராஜாவுக்கு 6 மகன்கள். அதில் கடைசி மகனாகிய கரியவாலாவுக்கு ஒரு மகன். அவரின் பெயர் ஆவுழு அமிர்த்தமையா. இவருக்கு ஒலி ராஜு என்றும் சிம்ஹாதிரி ராஜு என்றும் மகன்கள் இருந்தனர். இந்த மரபில் வந்தவர்கள் பெத்த ராஜு, எருனுக்கா ராஜு, நலனுக்கா ராஜு, போல ராஜு என்பவர்கள். கொல்லா இனத்தவர்கள் மகாபாரதத்தில் வரும் இந்த ராஜாக்களின் வாரிசுகளாக தங்களைக் கூறுகின்றனர் . மேலும் கிருஷ்ணர் வழிவந்தவர்கள் என்றும் நம்புகின்றனர் .

பிரிவுகள்[தொகு]

கோபாலா (பசுக்களைக் காக்கும் பொறுப்பு கொண்டோர் ) என்பதில் இருந்து கொல்லா வந்ததாக அறியப்படுகிறது. இவர்கள் தமிழில் இடையர்கள் என்றும், கோனாருழு என்றும் அழைக்கபடுகின்றனர்.

  • அஸ்தாந்திர கொல்லா
  • மொன் கொல்லா
  • காடு கொல்லா
  • ஊரு கொல்லா

இவர்களில் காடு கொல்லா என்பவர்கள் கங்கை நதி தீரத்தில் இருந்து வந்ததாகவும், ஊரு கொல்லா என்பவர்கள் ஆந்திராவை பூர்விகமாக கொண்டவர்கள் என்றும் சொல்லப்படுகிறது. இவர்களுக்குள் எந்த திருமண பந்தமும் கிடையாது. அஸ்தாந்திரம் என்றால் நீதிமன்றம் என்று பொருள்படுவதால் இந்த பிரிவினர் ஆதியில் கொல்லா இனத்தவர்களுக்கு நீதி சொல்லும் மக்களாக இருந்திருப்பார்கள் எனப்படுகிறது. பாரம்பரியமாக ஆநிரைகளை மேய்க்கும் சமூகமாக திகழ்கின்றனர் .

திருமண முறை[தொகு]

திருமணங்களில் பொதுவாக பிராமணர்களைக் கொண்டு இவர்கள் திருமணம் செய்வது கிடையாது. ஊருக்கு வெளியில் மர இலையினால் பந்தல் அமைத்து அதிலேயே திருமணம் செய்கின்றனர். இதனை இவர்கள் திருமண மந்தை என்று கூறுகின்றனர். கோவை போன்ற இடத்தில் தாலி கட்டும் முறை இருகின்றது ஆனால் பிற பகுதிகளில் தாலி கட்டும் வழக்கத்தை மேற்கொள்ளதவர்களாக இருக்கின்றனர். ஊர் நாயக்கர் என்ற ஒருவரை இவர்களே தேர்ந்து எடுத்து அவரின் முன்னிலையில் திருமணம் நடக்கின்றது. வரதட்சணை வாங்குவது பாவமாகக் கருதப்படுகிறது. ஆண்களுக்கு மறுமணம் செய்துகொள்ள உரிமை உண்டு ஆனால் பெண்களுக்கு அந்த உரிமை மறுக்கப்படுகிறது . தொட்டிய நாயக்கர் அல்லது பிற தெலுங்கு கொல்லா சமுதாயத்தவரிடம் திருமணம் பந்தம் செய்து கொள்கின்றனர்.

சமுதாய நிலை[தொகு]

கொல்லா இனத்தவர்களின் இயல்புகளை தனது நூலில் எட்கர் துர்ச்டன் எழுதி உள்ளார். சமுதாயத்தில் மிக உயர்ந்த இடத்தில் இந்த சமுதாய மக்கள் இருந்து வருகின்றனர். இவர்கள் காப்பு , கம்மவர் , பலிஜா நாயுடு சமுதாயத்தவரிடம் பெண் கொடுத்து பெண் எடுக்கும் அளவுக்கு நெருங்கிய மக்கள். பிராமணர்கள் இவர்கள் இடத்தில் எந்தப் பொருளையும் வாங்குவர் . சதாத ஸ்ரீ வைஷ்ணவ என்ற மரபினரையே தங்கள் திருமணங்களை நடத்த பணிப்பர். காப்பு இனத்தவர்களுக்கும் இவர்களுக்கும் எந்தப் பாகுபாடும் கிடையாது . இவர்களுக்குள் ஏற்படும் சண்டை சச்சரவகளை ஜாதி பெத்த என்ற சாதிப் பெரியவரின் முன்னிலையில் தீர்த்து வைக்கின்றனர்.வார்ப்புரு:Cm

குல மரபுகள்[தொகு]

இவர்களுக்குள் நடக்கும் எந்த முக்கிய நடைமுறையையும் தங்கள் ஊர் பெரியவர் முன்னிலையில் தான் நடத்துகின்றனர். இவர்களைக் கம்பளத்தார்கள் என்றும் அழைக்கின்றனர் . கம்பளதார்களுக்கு அதிகமான நிலம் இருக்கும் . இவர்கள் முனீஈஸ்வரர், பெருமாள், சிவன் மற்றும் குல தெய்வங்களை வணங்குகின்றனர். இவர்கள் வட தமிழகத்தில் அதிகம் உள்ளதால் பச்சையம்மன் விழா , திரவௌபதி அம்மன் விழா முதலியவற்றைச் சிறப்பாக செய்கின்றனர் . இவர்களின் விழாக்களில் தெலுங்கில் பாடல்கள் பாடுகின்றனர் .

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொல்லா&oldid=2194894" இருந்து மீள்விக்கப்பட்டது