கம்மவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கம்மவார் நாயக்கர்
கம்மா நாயுடு
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
ஆந்திரப் பிரதேசம், தமிழ் நாடு, கர்நாடகம்,
மொழி(கள்)
தெலுங்கு, தமிழ், கன்னட மொழி
தொடர்புள்ள இனக்குழுக்கள்
ஆரியர்,திராவிடர்

கம்மவார் ஆந்திரா, தமிழகம் மற்றும் கர்நாடகம் மாநிலங்களில் வாழும் ஒரு சமூகமாகும். கொங்கு நாட்டில் ஈரோடு மற்றும் கோவை மாவட்டங்களில், தென் தமிழ்நாட்டில் தேனி, விருதுநகர் மாவட்டங்களிலும் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றனர். நாயக்கர் , சௌதரி, நாயுடு , ராவ், மற்றும் ராயுடு இவர்களது பட்டங்களாகும்.

பிரிவுகள்

கம்மாவின் கிளை சாதியினராக உள்ளவர்கள்

 • பெத்த கம்மா
 • கொடசடு கம்மா
 • இல்லுவெல்லனி கம்மா
 • பங்காரு கம்மா
 • வடுக கம்மா
 • கவளி கம்மா
 • மச்ச கம்மா
 • கந்திகோட கம்மா
 • கம்ப கம்மா

தொடர்புடைய சாதிகள்

 • வேலமாக்கள்
 • காப்புகள்

பேரரச வம்சாவழிகள்

 • துர்ஜய வம்சம்
 • வேல நாட்டி சோழர்கள் வம்சம்
 • காக்கதீய பேரரச வம்சம்
 • கந்திகோட பெம்மசானி வம்சம்
 • முசுனுரி நாயக்க வம்சம்
 • விஜயநகர ராவிள்ள நாயக்க வம்சம்
 • சயப்பனேனி நாயக்க வம்சம்

குறிப்பிடத்தக்க நபர்கள்

அரசியல்வாதிகள்

திரைப்படத்துறை

விளையாட்டுத்துறை

விஞ்ஞானம் மற்றும் அறிவியல் துறை

கல்வி நிறுவனங்கள்

கம்மவார் சாதி அமைப்புகள் மற்றும் கம்மவார் சாதியைச் சேர்ந்தவர்களால் நடத்தப் பெறும் கல்வி நிறுவனங்கள் குறித்த தகவல்கள்

 1. தேனி கம்மவார் சங்க தொழில்நுட்பவியல் கல்லூரி, கொடுவிலார்பட்டி, தேனி
 2. தேனி கம்மவார் சங்க கலை அறிவியல் கல்லூரி, கொடுவிலார்பட்டி, தேனி
 3. தேனி கம்மவார் சங்க கல்வியியல் கல்லூரி, கொடுவிலார்பட்டி, தேனி
 4. தேனி கம்மவார் சங்க பல்தொழில்நுட்பக் கல்லூரி (பாலிடெக்னிக்), கொடுவிலார்பட்டி, தேனி
 5. தேனி கம்மவார் சங்க ஆசிரியப் பயிற்சி நிறுவனம், கொடுவிலார்பட்டி, தேனி
 6. தேனி கம்மவார் சங்க மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, என். ஆர். டி. நகர், தேனி
 7. ஸ்ரீ ரேணுகா வித்யாலயம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, லட்சுமிபுரம், பெரியகுளம்.
 8. சாந்தி நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, முத்துத்தேவன்பட்டி, தேனி.
 9. மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, மதுரை.
 10. ராவிள்ள கே.ஆர்.ஏ வித்யாஸ்ரம், கோவில்பட்டி.
 11. ஸ்ரீ இராமசாமி நாயுடு நினைவு கல்லூரி, கோவை.
 12. ரெங்கநாயகி வரதராஜ் பொறியியல் கல்லூரி, தாயில்பட்டி.

சமஸ்தான ஜமீன்தார்கள்

பெம்மசானி நாயக்கர்கள்

இவர்கள் மதுரைக்கு அருகில் உள்ள 'நெய்காரப்பட்டி' என்னும் பாளையத்தை 1600 முதல் 1950 வரை ஆண்டிருக்கின்றனர். இவர்கள் மதுரை நாயக்கர்கள்களின் படைத்தளபதிகளாக இருந்துள்ளனர்.

மேடசானி நாயக்கர்கள்

இவர்கள் திருநெல்வேலி மாவட்டத்திற்கு உட்பட்ட குருவிகுளம் எனும் ஜமீனை ஆண்டிருக்கின்றனர். இன்றளவும் அவர்கள் இனத்தவருக்கே அவ்வூர் கோவிலில் முன்னுரிமை வழங்கப்படுகின்றது.

இதனையும் பார்க்க

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கம்மவர்&oldid=2099701" இருந்து மீள்விக்கப்பட்டது