உள்ளடக்கத்துக்குச் செல்

திருச்சி இரா. சவுந்தரராசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருச்சி இரா. சவுந்தரராசன்
மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர்
தமிழ்நாடு அரசு
பதவியில்
7 மே 1978 – 17 பிப்ரவரி 1980
முன்னையவர்க. அன்பழகன்
பின்னவர்எச். வி. அண்டே
சத்துணவு துறை அமைச்சர்
தமிழ்நாடு அரசு
பதவியில்
9 செப்டம்பர் 1983 –  15 நவம்பர் 1984
உள்ளாட்சித் துறை அமைச்சர்
தமிழ்நாடு அரசு
பதவியில்
10 பிப்ரவரி 1985 – 18 மார்ச் 1985
முன்னையவர்இராம. வீரப்பன்
பின்னவர்ப. உ. சண்முகம்
சத்துணவு, சமூக நலன் மற்றும் கதர் துறை அமைச்சர்
தமிழ்நாடு அரசு
பதவியில்
18 மார்ச் 1985 – 30 சனவரி 1988
முன்னையவர்ப. விஜயலட்சுமி
கோமதி சீனிவாசன்
பின்னவர்சுப்புலட்சுமி ஜெகதீசன்
சட்டமன்ற உறுப்பினர்
திருவரங்கம்
பதவியில்
1977–1989
முன்னையவர்ஜோதி வெங்கடாசலம்
பின்னவர்ஒய். வெங்கடேசுவர தீட்சிதர்
தொகுதிதிருவரங்கம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1933-12-01)1 திசம்பர் 1933
திருவரங்கம், தமிழ்நாடு, இந்தியா[1]
இறப்பு1 மே 2009(2009-05-01) (அகவை 75)
திருவரங்கம், தமிழ்நாடு
அரசியல் கட்சிஅஇஅதிமுக
பிள்ளைகள்2
பெற்றோர்ராஜகோபால் நாயுடு
வாழிடம்திருவரங்கம்
பணிஅரசியவாதி மற்றும் நடிகர்

திருச்சி இரா. சவுந்தரராசன் (Trichy R. Soundararajan, திசம்பர் 1, 1933 - மே 1, 2009)[2] என்பவர் ஒரு திரைப்பட நடிகரும், தமிழக அரசியல்வாதியும் ஆவார். இவர் தமிழக முன்னாள் அமைச்சரும், திருச்சி புறநகர் மாவட்ட அ.தி.மு.க மாவட்ட செயலாளராக இருந்தவரும் ஆவார். இவர் 1977,[3] 1980 மற்றும் 1984ஆம் ஆண்டு என மூன்று முறை தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், திருவரங்கம் சட்டமன்றத் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4][5][6]

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

இவர் திருவரங்கத்தை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் வணிகவியல் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றார்.[7] இவர் கவரா நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர்.[8] இவரின் தந்தையார் இராஜகோபால் நாயுடு, இரங்கநாத பெருமாள் கோயிலில் அறநிலையத்துறை அதிகாரியாக பணிபுரிந்தார்.[9]

திரையுலக வாழ்க்கை

[தொகு]

நடிப்புக் கலையின் மேல் உள்ள ஆர்வம் காரணமாக முதலில் மேடை நாடகங்களில் நடித்தார். கவிஞர் வாலி எழுதிய கவிஞனின் காதலி நாடகத்தில் அம்பிகாபதி வேடத்தில் நடித்தார்.[10] எம். ஆர். பாலு எழுதிய பேராசை பிடித்த பெரியார் என்ற சமூக நாடகத்தில் தந்தை பெரியாரின் கதாபாத்திரத்தில் நடித்தார்.[11] பின்னர் பல தமிழ் திரைப்படங்களில், குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

தமிழ்த் திரைப்படங்கள்

[தொகு]

திருச்சி இரா. சவுந்தரராசன் தமிழ்த் திரைப்படங்களில், பெரும்பாலும் எம்.ஜி.யார் நடித்த திரைப்படங்களில், குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் குறிப்புகள்
1965 பணம் தரும் பரிசு
1966 தனிப்பிறவி மாடசாமி
1967 நான்
1968 தேர்த் திருவிழா ஒளிப்பதிவாளர்
1968 கண்ணன் என் காதலன் கேப்டன் கோபால்
1968 கணவன்
1968 அன்று கண்ட முகம்
1968 புதிய பூமி ரங்கதுரை
1968 ரகசிய போலீஸ் 115 இரகசிய சேவையின் தலைவர்
1970 தலைவன் கட்டளையிடும் அதிகாரி
1970 பத்தாம் பசலி
1974 சிரித்து வாழ வேண்டும் மாரிமுத்து
1975 இதயக்கனி சிஐடி அதிகாரி
1975 இன்றுபோல் என்றும் வாழ்க குப்புசாமி
1978 மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் மருத்துவர்

அரசியல் வாழ்க்கை

[தொகு]

திருச்சி இரா. சவுந்தரராசன், அகில உலக எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றத்தின் பொதுச் செயலாளராக இருந்தவர்.[12] இவர் 1977, 1980, 1984-ஆம் ஆண்டுகளில் திருவரங்கம் சட்டமன்றத் தொகுதியில் இருந்து தேர்தெடுக்கப்பட்டார். எம். ஜி. ஆர் அமைச்சரவையில் மக்கள் நல்வாழ்வு துறை, சத்துணவு துறை, உள்ளாட்சித் துறை, சமூக நலன் மற்றும் கதர் துறை போன்ற பல துறைகளில் அமைச்சராகப் பணியாற்றினார்.

போட்டியிட்ட தேர்தல்கள்

[தொகு]
ஆண்டு தொகுதி முடிவு வாக்கு சதவீதம் எதிர்க்கட்சி வேட்பாளர் எதிர்க்கட்சி எதிர்க்கட்சி வேட்பாளர் வாக்கு சதவீதம்
1977 திருவரங்கம் வெற்றி 31.31% எம். தர்மலிங்கம் திமுக 25.26%
1980 திருவரங்கம் வெற்றி 53.48% வி. சுவாமிநாதன் காங்கிரஸ் 46.52%
1984 திருவரங்கம் வெற்றி 56.52% சி. இராமசாமி உடையார் ஜனதா கட்சி 36.87%

மேற்கோள்கள்

[தொகு]
  1. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை - யார் - எவர் 1985. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை. 1985. p. 349.
  2. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை - யார் - எவர் 1985. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை. 1985.
  3. Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1977. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. November 1977. p. 408-409.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
  4. 139 - ஸ்ரீரங்கம். தி ஹிந்து தமிழ் நாளிதழ். 2016.
  5. Former TN Minister No More. Outlook. 2009.
  6. எம்.ஜி.ஆர் எப்போதும் விரும்பும் திருச்சி. நம்ம திருச்சி இதழ். 28 Nov 2016. Archived from the original on 19 அக்டோபர் 2018. Retrieved 26 சூலை 2020.
  7. கலைமாமணி கருப்பையா, ed. (1993). நாளிதழ் ஆசிரியர். திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம். p. 273.
  8. தமிழ்நாடு கவரா நாயுடு நல சங்கத்தினர் செய்தியாளர் சந்திப்பு.
  9. லேனா தமிழ்வாணன், ed. (1987). தமிழக மாவட்ட நூல் வரிசை : திருச்சிராப்பள்ளி மாவட்டம். மணிமேகலைப் பிரசுரம். p. 170.
  10. லேனா தமிழ்வாணன், ed. (1987). திரைப்பாடல்களில் வாலியின் திறம். மணிமேகலைப் பிரசுரம். p. 14. பல ஆண்டுகளுக்கு முன் கவிஞனின் காதலி என்ற ஒரு நாடகத்தை, இளவயதிலேயே அமரரான கவிஞர் தமிழ் ஒளி எழுதினார். அது சக்தி கிருஷ்ணசாமி அவர்களின் குழுவால் நடத்தப் பெற்றது. அதே பெயரில் பல ஆண்டுகளுக்குப் பின் கவிஞர் வாலியும் கவிஞனின் காதலி என்று அம்பிகாவதி கதையை நாடகமாக்கினார். அதில் திரு. சௌந்தரராஜன் அம்பிகாபதியாகவும் திருமதி புலியூர் சரோஜா ( இப்போது நடன இயக்குனர் ) அமராவதியாகவும் நடித்தனர்.
  11. கவிஞர் வாலி, ed. (1995). நானும் இந்த நூற்றாண்டும். கலைஞானம் பதிப்பகம். p. 75. பேராசை பிடித்த பெரியார் என்னும் ஒரு சமூக நாடகத்தை என் நண்பர் திரு.எம்.ஆர்.பாலு என்பவர் எழுதி, அதில் என் சீடனும் மிகச்சிறந்த நடிகனுமான திருச்சி சௌந்தரராஜன் - முன்னாள் அமைச்சர்தான் - பெரியார் வேடம் ஏற்று நடிக்க, அந்த நாடகம் ஸ்ரீரங்கம் வாசுதேவ மன்றத்தில் நடைபெற்றது.
  12. Ingrid Widlund, ed. (2000). Paths to Power and Patterns of Influence: The Dravidian Parties in South Indian Politics. éditeur non identifié. p. 235. ISBN 9789155447649. The manrams formed part of the International MGR Association, which was set up as such in 1974 with one of MGR's co - actors, R. 'Trichy' Soundarajan, as general secretary. The Association had, according to Soundarajan, branches all over India and in Singapore, Sri Lanka and Malaysia.