பணம் தரும் பரிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பணம் தரும் பரிசு
இயக்கம்எம். கிருஷ்ணசுவாமி[1]
தயாரிப்புஎம். எம். ஏ. சுப்பையா தேவர்
சூர்யா பிலிம்ஸ்
இசைசெல்லதுரை
டி. எஸ். ரமேஷ்
நடிப்புதிருச்சி சௌந்தராஜன்
வி. ஆர். திலகம்
வெளியீடு1965
நீளம்3965 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பணம் தரும் பரிசு 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். கிருஷ்ணசுவாமி[1] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் திருச்சி சௌந்தராஜன், எஸ். எம். ராமன், வி. என். இராமலிங்கம், எம். கே. மணவாளன், ஏ. வி. பிரபாகர், வி. ஆர். திலகம், இரமணதிலகம், இரத்னாதேவி, கமலா தேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர். செல்லத்துரை, டி. எஸ். நடேஸ் ஆகியோர் இசையமைக்க டேப் ராதாமாணிக்கம், தஞ்சைவாணன், அ. க. சுப்பையா, தமிழன்பன், திருப்பனந்தாள் மணியம் ஆகியோர் பாடல்களை யாத்தனர்.

சாண்டோ சின்னப்பா தேவரின் சகோதரரான எம். எம். ஏ. சுப்பையா தேவர் படத்தைத் தயாரித்ததுடன் கதை, வசனங்களையும் அவரே எழுதினார்.

இத்திரைப்படத்தில் நடித்த ரமணதிலகம் என்ற நடிகையை கவிஞர் வாலி பின்னர் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Ashish Rajadhyaksha & Paul Willemen (in ஆங்கிலம்). Encyclopedia of Indian Cinema. Oxford University Press, New Delhi, 1998. பக். 625. https://indiancine.ma/texts/indiancine.ma%3AEncyclopedia_of_Indian_Cinema/text.pdf. 
  2. கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 2. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039). முதல் பதிப்பு நவம்பர் 2016. பக். 211. 

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பணம்_தரும்_பரிசு&oldid=2706055" இருந்து மீள்விக்கப்பட்டது