உள்ளடக்கத்துக்குச் செல்

காசோவரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Unikonta
காசோவரி
புதைப்படிவ காலம்:5–0 Ma
தொடக்க பிளியோசீன் – அண்மை
காசோவரிகளின் மூன்று இனங்கள்; இடமிருந்து வலமாக: தெற்கு காசோவரி, வடக்கு காசோவரி, குள்ள காசோவரி
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
கசுவாரீபார்மஸ்
குடும்பம்:
Kaup, 1847[1]
பேரினம்:
காசுவாரியசு

Brisson, 1760
மாதிரி இனம்
C. casuarius
லின்., 1758
இனங்கள்
 • Casuarius casuarius
  தெற்கு காசோவரி
 • Casuarius unappendiculatus
  வடக்கு காசோவரி
 • Casuarius bennetti
  குறும் காசோவரி
 • Casuarius lydekkeri
  பிக்மி காசோவரி
வேறு பெயர்கள்
 • Casoarius Bonhote
 • Cela Oken, 1816
 • Cela Moehr, 1752 nomen rejectum
 • Rhea Lacépède, 1800 non Latham 1790
 • Chelarga Billberg, 1828
 • Oxyporus Brookes, 1828
 • Thrasys Billberg, 1828
 • Cassowara Perry, 1811
 • Hippalectryo Gloger, 1842[2]

காசோவரி (Cassowary) என்பது பறக்கவியலாத பறவை இனம் ஆகும். இவை கசுவாரீபார்மசு வரிசையில் கசுவேரியசு (Casuarius) இனத்தைச் சேர்ந்தவை ஆகும். இவை மார்பெலும்புப் பட்டை இல்லாத பறக்க முடியாத பறவைகள் ஆகும். காசோவரிகள் நியூ கினி (பப்புவா நியூ கினி, மேற்கு பப்புவா), ஆரு தீவுகள் (மலுக்கு), வடகிழக்கு ஆத்திரேலியா ஆகிய பகுதிகளின் வெப்ப வலயக் காடுகளுக்கு சொந்தமானவை.[3]

மூன்று காசோவரி இனங்கள் உள்ளன. இவற்றில் மிகவும் பொதுவானது, தெற்கு காசோவரி,[4] இவை உலகின் மூன்றாவது உயரமானதும், இரண்டாவது அதிக எடை கொண்டதுமாகும். தீக்கோழி, ஈமியூ ஆகியவற்றை விடச் சிறியது. ஏனைய இரண்டு இனங்கள் வடக்கு காசோவரி, குள்ள காசோவரி எனக் குறிப்பிடப்படுகின்றன; வடக்கு காசோவரி மிக சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது, இவை மிகவும் அச்சுறுத்தலுக்கு உள்ளானது.[4] இவற்றை விட நான்காவது ஆனால் அழிந்துபோன இனம் பிக்மி காசோவரி எனக் குறிப்பிடப்படுகிறது.

காசோவரிகள் முக்கியமாக பழங்களை (சுமார் 90 சதவீதம்) உண்கின்றன, இருப்பினும் இவை அனைத்துண்ணிகளாகும், பூஞ்சை, முதுகெலும்பிலிகள், முட்டைகள், அழுகுடல், மீன், மற்றும் கொறிணிகள் போன்ற சிறிய முதுகெலும்பிகள், சிறிய பறவைகள், தவளைகள், பல்லி, பாம்பு, மற்றும் தளிர்கள் மற்றும் புல் விதைகள் உட்பட பல தாவர உணவுகளை எடுத்துக்கொள்கின்றன.[5]

காசோவரிகள் வேகமாக ஓடும் இயல்பு உடையது. இதன் இறக்கைகள் மிகவும் சிறியவை. முதலிறகு, துணையிறகு என்று வேறுபடுத்தமுடியாத அளவுக்கு இறகில் நடுநரம்புகள் ஒரே அளவாக உள்ளன. தலையில் புடைப்பு இருக்கும். கால்களில் மூன்று விரல்கள் மட்டுமே உள்ளன. உள் விரல் நகம் உடையது. தலை நீல வண்ணத்துடனும் கழுத்தில் பளபளப்பான சிவப்பு நிறத்துடனும் இருக்கும். தன்னைப் பாதுகாத்துக் கொள்ளா இது எதிரிகளை காலால் உதைத்து தள்ளி விட்டு விரைவாக ஒடி விடும்.

மேற்கோள்கள்[தொகு]

 1. Melville, R. V.; Smith, J. D. D., eds. (1987). Official Lists and Indexes of Names and Works in Zoology. ICZN. p. 17.
 2. "Part 7 - Vertebrates". Collection of group names. 2007. Archived from the original on 2016-10-05. பார்க்கப்பட்ட நாள் 2016-05-04.
 3. (Clements 2007).
 4. 4.0 4.1 "Cassowary". San Diego Zoo Wildlife Alliance. 2022. பார்க்கப்பட்ட நாள் 18 September 2022.
 5. "What Do Cassowaries Eat? (Full Diet, Habits and Behavior)". Birdfact. 2022.
 • அறிவியல் களஞ்சியம் 8, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், பக்கம் எண்: 178

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காசோவரி&oldid=3928746" இலிருந்து மீள்விக்கப்பட்டது