பறக்காத பறவைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பறக்காத பறவைகள் பறக்கும் மூதாதையரிலிருந்து தோன்றியவையாகும். ஏறத்தாழ நாற்பது பறக்காத பறவையினங்கள் இப்பொழுது உலகில் உள்ளன. தீக்கோழி, எமு, கிவி, பென்குயின் என்பன பறக்காத பறவையினங்களில் சிலவாகும். கொன்றுண்ணிகள் அற்ற பிரதேசங்களில் வாழ்ந்தமையாலேயே இப்பறவைகள் தம் பறக்கும் ஆற்றலை இழந்துள்ளன. இதற்கு தீக்கோழி விதிவிலக்காகும். ஆபிரிக்க சவன்னா வெளிகளில் வாழும் தீக்கோழி தன் நகங்களுடைய பலமான கால்களை எதிரிகளைத் தாக்கப் பயன்படுத்துகிறது.

நியூசிலாந்திலேயே அதிக எண்ணிக்கையான பறக்காத பறவைகள் காணப்படுகின்றன. இதற்கான காரணம் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன் மனிதன் அங்கு குடியேறாதவரை மூன்று வகையான வௌவால்களைத் தவிர வேறெந்த நிலத்தில் வாழும் பாலூட்டிகளும் காணப்படாமையாகும். பறக்காத பறவைகளின் பிரதான எதிரிகளாக பெரிய பறவைகளே காணப்பட்டன. ஆனால் மனிதக் குடியேற்றத்தின் பின் பெருமளவு பறக்காத பறவையினங்கள் அழிக்கப்பட்டுள்ளன. பெரிய ஓக், டோடோ போன்றவை அவற்றுள் சில.

பறக்காத பறவைகளைப் பிடித்து வளர்ப்பது இலகுவானது. ஏனெனில் அவற்றுக்கு கூண்டுகள் தேவையில்லை. தீக்கோழிகள் இறகு, தோல், இறைச்சி என்பவற்றைப் பெற்றுக் கொள்வதற்காகப் பண்ணைகளில் வளர்க்கப்படுகின்றன. உலகின் மிகப்பெரிய பறக்காத பறவை தீக்கோழி ஆகும். அதுவே உயிர்வாழும் பறவைகளுள்ளும் பெரியது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பறக்காத_பறவைகள்&oldid=2749622" இருந்து மீள்விக்கப்பட்டது