பெரிய ஓக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பெரிய ஓக்
வார்ப்புரு:StatusExtinct
Pinguinus impennis.jpg
அறிவியல் வகுப்புப்பிரிவு
இராச்சியம்: விலங்கினம்
கணம்: கோடேற்றா
வகுப்பு: பறவை
Order: Charadriiformes
குடும்பம்: அல்சிடே
இனம்: பிங்குயினஸ்
வகை: இம்பென்னிஸ்
Binomial பெயர்
பிங்குயினஸ் இம்பென்னிஸ்

75 சதம மீட்டர் நீளமுள்ள, பறக்காத, பெரிய ஓக் (Great Auk) பிங்குயினஸ் இம்பென்னிஸ் அல்லது அல்கா இம்பென்னிஸ்), எல்லா ஓக்குகளிலும் பெரியதாகும். பெரிய ஓக்குகள் வெல்ஷ் மொழியில், அவற்றின் தலையிலுள்ள வெள்ளை நிறத்தை வைத்து, "வெண் தலை" எனப் பொருள்படும் பென் க்வின் என அழைக்கப்பட்டன. இதுவே "பென்குயின்" என்ற பெயருக்கு அடிப்படையாகும். தென்னரைக் கோளத்தில் பெரிய ஓக்கை ஒத்த பறவைகளைக் கண்ட பயணிகள் அவற்றையும் அதே பெயரிலேயே அழைத்தனர்.

பெரிய ஓக்குகள் ஒரு வருடத்தில் ஒரு முட்டையை மாத்திரமே இடுகின்றன. இவை நன்றாக நீந்தக் கூடியவை. தங்கள் சிறகுகளை உபயோகித்து நீருக்கடியில் நீந்த வல்லவை. பெரிய ஓக்குகள் ஒரு காலத்தில், கனடாவுக்கு அப்பாலுள்ள தீவுகளிலும், கிறீன்லாந்து, ஐஸ்லாந்து, நோர்வே, அயர்லாந்து மற்றும் பிரித்தானியா போன்ற இடங்களில் பெரும் எண்ணிக்கையில் காணப்பட்டன.

ஏனைய ஓக்குகளைப் போல, பெரிய ஓக்குகளால் பறக்க முடியாது. இதனால் தான் இப் பறவைகள் மனிதருக்கு இலக்காகக்கூடியனவாக இருந்தன. கி.பி. 8 ஆம் நூற்றாண்டிலிருந்து இப் பறவைகள், உணவுக்காகவும், மெத்தைகள் செய்வதற்காகவும் வேட்டையாடப்பட்டன. காலப்போக்கில் இப் பறவைகள் அழிந்து போகும் வரை வேட்டையாடப்பட்டன. இவ்வினத்தின் கடைசி இணைகள், 1844, ஜூலை 3ல் ஐஸ்லாந்துக்கு அப்பாலுள்ள ஒரு தீவில் வைத்துக் கொல்லப்பட்டன.

பின் வருவனவற்ரையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரிய_ஓக்&oldid=1996725" இருந்து மீள்விக்கப்பட்டது