கிவி (பறவை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Unikonta
Kiwi
North Island brown kiwi
(Apteryx mantelli)
உயிரியல் வகைப்பாடு e
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
உயிரிக்கிளை: Novaeratitae
வரிசை: கிவி (பறவை)
Haeckel, 1866
குடும்பம்: கிவி (பறவை)
Gray, 1840[1]
பேரினம்: கிவி (பறவை)
Shaw, 1813[1]
மாதிரி இனம்
Apteryx australis
Shaw & Nodder, 1813
இனம் (உயிரியல்)

Apteryx haastii Great spotted kiwi
Apteryx owenii Little spotted kiwi
Apteryx rowi Okarito brown kiwi
Apteryx australis Southern brown kiwi
Apteryx mantelli North Island brown kiwi

The distribution of each species of kiwi
வேறு பெயர்கள்

Stictapteryx Iredale & Mathews, 1926
Kiwi Verheyen, 1960
Pseudapteryx Lydekker 1891[2]

கிவி (Kiwi) என்பது நியூசிலாந்தில் வாழும், அப்டெரிக்ஸ் (அப்டெரிகைடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரே இனம்) இனத்தைச் சேந்த சிறிய, பறக்காத, ஏதாவதொரு வகைப் பறவையைக் குறிக்கும். ஒரு வீட்டுக் கோழியின் அளவைக் கொண்ட கிவிகளே வாழுகின்ற றட்டைட்களில் மிகச் சிறியனவாகும். இவை கசோவரிகள் அல்லது மோவாக்களுக்கு நெருக்கமான உறவையுடையனவாகக் கருதப்பட்டாலும், இவற்றின் பரிணாமத் தோற்றம் உறுதியாகத் தெரியவரவில்லை. பல கிவி வகைகள் அழியும் ஆபத்தை எதிர் நோக்கியுள்ளன.

சுமார் 1300 CE அளவில், மனிதர்கள் வருவதற்குமுன், நியூசிலாந்தில் முள்ளந்தண்டுள்ள விலங்குகள் எதுவும் இருக்கவில்லை. உலகின் ஏனைய பகுதிகளில், குதிரைகள், ஓநாய்கள், எலிகள் எனப் பல்வேறுபட்ட பிராணிகளால் நிரம்பியிருந்த ecological niches, நியூசிலாந்தில், பறவைகளால் (குறைந்த அளவு ஊர்வனவற்றாலும்) நிரம்பியிருந்தன.

கிவிகள் வெட்கம் கொண்ட, nocturnal பிராணிகளாகும். இவை சிறப்பாக வளர்ச்சி பெற்ற முகர்ச்சிப் புலனைக் கொண்டுள்ளதுடன், பறவைகளில் வழமைக்கு மாறாக இவற்றின் மூக்குகள் கூரான சொண்டின் நுனியில் அமைந்துள்ளன. இவை தங்கள் சொண்டுகளை நிலத்துக்குள் செலுத்திப் புழுக்கள், பூச்சிகள், முள்ளந்தண்டற்ற ஏனைய பிராணிகள் முதலியவற்றைத் தேடி உண்கின்றன. இவை பழங்களையும் கூட உண்கின்றன. சந்தர்ப்பம் ஏற்பட்டால், இவை, சிறிய crayfish, நீரிலும் நிலத்திலும் வாழும் பிராணிகள் மற்றும் eels போன்றவற்றையும் உணவாகக் கொள்கின்றன.

கிவிகளில் நிலத்தில் வாழ்வதற்கான இசைவாக்கம் விரிவானது. ஏனைய எல்லா ratites போலவே, மார்பெலும்புகளில், சிறகுத் தசைகளைப் பொருத்துவதற்கான keel மற்றும் சிறகுகளோகூட இல்லை. சிறகுகள் இருந்ததற்கான அடையாளம் கூட, மிகவும் சிறிதாக, கிவியின் உரோமங்களைப் போன்ற, இரண்டாகக் கிளைத்த இறகுகளுக்கு அடியில் மறைவாக உள்ளது. பொதுவாகப் பறவைகளுக்குப் பறப்பதற்கு வசதியாக, நிறையைக் குறைப்பதற்காக, உள்ளீடற்ற எலும்புகளே காணப்படுகின்றன. கிவியில், பாலூட்டிகளைப்போல எலும்புகளில் மச்சை (marrow) உண்டு.

கிவிகளில் மூன்று வகைகளும், அவற்றிலொன்றில் ஒரு துணை வகையும் உண்டு:

  • வட தீவு மண்ணிறக் கிவி அப்டெரிக்ஸ் அவுஸ்திரேலிஸ் மண்டெல்லி (Apteryx australis mantelli) , வடதீவின் மூன்றிலிரண்டு பகுதியில் பரந்துள்ளது. சுமார் 35,000 மீந்துள்ள இக் கிவியே மிகவும் பொதுவான கிவியாகும். இவற்றில் பெண் கிவிகள் 400 மிமீ உயரமும், 2.8 கிகி நிறையும் கொண்டவை. ஆண்கள் 2.2 கிகி நிறையுள்ளவை. இக் கிவிகள் குறிப்பிடத்தக்க resiliance ஐ வெளிப்படுத்துகின்றன. இவை பலதரப்பட்ட வாழிடங்களுக்குத் தங்களை இசைவாக்கிக் கொண்டுள்ளன. பெண் கிவிவிகள் பொதுவாக இரண்டு முட்டைகலை இடுகின்றன. இவற்றை ஆண் கிவிகள் அடைகாக்கின்றன.
  • ஒக்காரிட்டோ மண்ணிறக் கிவி அப்டெரிக்ஸ் அவுஸ்திரேலிஸ் அவுஸ்திரேலிஸ் (Apteryx australis australis), வட தீவு மண்ணிறக் கிவியின், அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு துணை வகையாகும். கொஞ்சம் அளவிற் சிறியது. உடம்பில் சாம்பல் நிறச் சாயை கொண்டதுடன் சிலசமயம் முகத்தில் வெண்ணிற இறகுகளும் இருக்கும். பெண், ஒரு முட்டையிடும் காலத்தில் மூன்று முட்டைகளையிடும். ஒவ்வொன்றும் வெவ்வேறு கூடுகளில் இடப்படுகின்றன. ஆண், பெண் இரண்டுமே அடைகாக்கின்றன. பிராண்ஸ் ஜோசேப்பின் (Franz Josef) வடபகுதியின் தாழ்நிலக் காட்டுப்பகுதியில் சுமார் 140 பறவைகள் மட்டுமே வாழ்கின்றன.
  • பெரிய புள்ளிக் கிவியே அப்டெரிக்ஸ் ஹாஸ்தீ (Apteryx hastii) மிகப் பெரிய கிவியாகும். பெண், 450 மிமீ உயரமும், 3.3 கிகி நிறையும் உடையது. ஆண் கிவிகள் 2.4 கிகி நிறையுள்ளவை. இவை சாம்பல் கலந்த உடல் நிறமும், மங்கலான பட்டைகளையும் கொண்டவை. பெண் ஒரு முட்டை மட்டுமேயிட, ஆணும், பெண்ணும் அடைகாக்கின்றன. வடமேற்கு நெல்சனின் மலைப்பகுதிகள், வடபகுதியின் மேற்குக் கரை, மற்றும் தென் அல்ப்ஸ் பகுதிகளில் சுமார் 20,000 கிவிகள் வரை பரந்துள்ளன.
  • சிறிய புள்ளிக் கிவி அப்டெரிக்ஸ் ஓவெனீ (Apteryx owenii) மிகவும் சிறியது. இறக்குமதி செய்யப்பட்ட பன்றிகள், stoats மற்றும் பூனைகளினால் வேட்டையாடப்பட்டு, தலை நிலத்தில் முற்றாக அழிந்துவிட்டது. எல்லாக் கிவிகளிலும் கூடிய அபாய நிலையிலுள்ளது இதுவே. சுமார் 1000 வரை கப்பிட்டி தீவில் மீந்துள்ளன. ஊனுண்ணும் விலங்குகளில்லாத வேறு தீவுகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டு, ஓரளவு நிலைபெற்று வருவது போல் தெரிகின்றது. 250 மிமீ உயரம்கொண்டது. பெண் பறவை 1.3 கிகி நிறையுள்ளது. பெண் ஒரு முட்டை மட்டுமேயிட ஆண் பறவை அடைகாக்கின்றது.

உசாத்துணை[தொகு]

  1. 1.0 1.1 Brands, Sheila (14 August 2008). "Systema Naturae 2000 / Classification, Family Apterygidae". Project: The Taxonomicon. Archived from the original on 24 ஜூலை 2011. பார்க்கப்பட்ட நாள் 4 February 2009. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. Gill (2010). "Checklist of the birds of New Zealand, Norfolk and Macquarie Islands, and the Ross Dependency, Antarctica" (PDF) (4th ed.). Te Papa Press. பார்க்கப்பட்ட நாள் 22 May 2016.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Apterygidae
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிவி_(பறவை)&oldid=3549802" இலிருந்து மீள்விக்கப்பட்டது