பழந்தின்னி
பழந்தின்னிகள் என்பது பழங்களை முதன்மை உணவாகக் கொள்ளும் தாவர உண்ணிகளையும் அனைத்துண்ணிகளையும் குறிக்கும். ஏறத்தாழ 20% பாலூட்டும் தாவர உண்ணிகள் பழங்களை உண்பதால் பழந்தின்னிகள் பாலூட்டிகளிலேயே பொதுவாகக் காணப்படுகிறது. பழந்தின்னிகள் பழம் தரும் தாவரங்களுக்கு விதை பரவுதலுக்கு உதவுதல் மூலம் நன்மையும் விதைகளைத் தின்று செரித்து விடுவதன் மூலம் தீமையும் செய்கின்றன.