உள்ளடக்கத்துக்குச் செல்

கங்கார் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கங்கார் (P002)
மலேசிய மக்களவைத் தொகுதி
பெர்லிஸ்
Kangar (P002)
Federal Constituency in Perlis
கங்கார் மக்களவைத் தொகுதி
(P002 Kangar)
மாவட்டம் பெர்லிஸ்
வாக்காளர்களின் எண்ணிக்கை74,859 (2022)[1][2]
வாக்காளர் தொகுதிகங்கார் தொகுதி
முக்கிய நகரங்கள்கங்கார், ஆராவ்
பரப்பளவு141 ச.கி.மீ[3]
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1974
கட்சி      பெரிக்காத்தான் நேசனல்
மக்களவை உறுப்பினர்சக்ரி அசன்
(Zakri Hassan)
மக்கள் தொகை100,755 (2020)[4]
முதல் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 1974
இறுதித் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2022[5]




2022-இல் கங்கார் தொகுதியின் வாக்காளர்களின் இனப் பிரிவுகள்

  சீனர் (14.8%)
  மலாயர் (82.3%)
  இதர இனத்தவர் (1.1%)

கங்கார் (மலாய்: Kangar; ஆங்கிலம்: Kangar; சீனம்: 袋鼠; என்பது மலேசியா, பெர்லிஸ் மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P002) ஆகும்.

கங்கார் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. 31 அக்டோபர் 2022-இல் வெளியிடப்பட்ட மத்திய அரசிதழின் படி, கங்கார் தொகுதி 31 தேர்தல் மாவட்டங்களாக (Polling Districts) பிரிக்கப்பட்டு உள்ளது.[6] இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1974-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.

1986-ஆம் ஆண்டில் இருந்து கங்கார் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[7]

பொது

[தொகு]

கங்கார் (Kangar) மாநகரம், மலேசியா, பெர்லிஸ் மாநிலத்தின் தலைநகரம் ஆகும்.[8] இதன் மக்கள் தொகை 48,898. பரப்பளவு 2,619.4 எக்டர். இந்த நகரம் தீபகற்ப மலேசியாவின் ஆக வடக்கில் பெர்லிஸ் ஆற்றின் அருகில் அமைந்து உள்ளது.[9][10] காங்கோக் (Kangkok) அல்லது (Spizaetus Limnaetu) எனும் கழுகின் பெயரில் இருந்து கங்கார் நகரத்தின் பெயர் உருவானது.

கங்கார் நகரம்

[தொகு]

கங்கார் நகரம் ஒரு சிறிய நகரமாக இருந்தாலும் அழகான அமைதியான நகரம். பழைய கடைகளும் புதிய கடைகளும் கலந்த ஒரு கலவை நகரமாகக் காட்சி அளிக்கின்றது. இங்கு ஒரு நேர்த்தியான காலனித்துவக் காலத்துக் கட்டிடம் உள்ளது. பெர்லிஸ் மாநில செயலகக் கட்டிடம். தவிர 1930-ஆம் ஆண்டுகளில் கட்டப்பட்ட ஒரு கடிகாரக் கோபுரம் உள்ளது. இதுவும் பிரித்தானியா காலனித்துவக் காலத்தில் கட்டப்பட்ட கட்டமைப்பு தான்.

கங்கார் நகரத்தின் மையத்தில் சேனா மாவட்டாரம் (Sena Province) உள்ளது. கங்கார் நகரம் மலேசியாவிலேயே மிகச் சிறிய மாநிலத் தலைநகரம் ஆகும். இந்த நகரத்தின் மக்கள் பெரும்பாலும் விவசாயிகள்; அரசு ஊழியர்கள்.

கங்கார் நகரத்தின் முக்கியத் தொழில்கள்: பைஞ்சுதை தயாரிப்பு; மரப் பலகை தயாரிப்பு; ரப்பர் உற்பத்தி; காகிதத் தயாரிப்பு; சீனி தயாரிப்பு; இறால் மீன்களைப் பதப்படுத்துதல் ஆகியவையாகும்.[11]

கங்கார் மக்களவைத் தொகுதி

[தொகு]
கங்கார் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1974 - 2022)
நாடாளுமன்றம் ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
1974-ஆம் ஆண்டில் கங்கார் தொகுதி உருவாக்கப்பட்டது
4-ஆவது மக்களவை 1974–1978 சாரி ஜுசோ
(Shaari Jusoh)
பாரிசான் நேசனல்
(அம்னோ)
5-ஆவது மக்களவை 1978–1982
6-ஆவது மக்களவை 1982–1986 முகமது ரட்சி சேக் அகமது
(Mohd Radzi Sheikh Ahmad)
7-ஆவது மக்களவை 1986–1990
8-ஆவது மக்களவை 1990–1995 இசாக் அர்சாத்
(Ishak Arshad)
9-ஆவது மக்களவை 1995–1999 முகமட் இசா சாபு
(Md Isa Sabu)
10-ஆவது மக்களவை 1999–2003 அப்துல் அமீத் பாவன்தே
(Abdul Hamid Pawanteh)
2003–2004 காலி
11-ஆவது மக்களவை 2004–2008 முகமது ரட்சி சேக் அகமது
(Mohd Radzi Sheikh Ahmad)
பாரிசான் நேசனல்
(அம்னோ)
12-ஆவது மக்களவை 2008–2013
13-ஆவது மக்களவை 2013–2018 சகாருதீன் இசுமாயில்
(Shaharuddin Ismail)
14-ஆவது மக்களவை 2018–2022 நூர் அமீன் அகமது
(Noor Amin Ahmad)
பாக்காத்தான் அரப்பான்
(மக்கள் நீதிக் கட்சி)
15-ஆவது மக்களவை 2022–தற்போது சக்ரி அசன்
(Zakri Hassan)
பெரிக்காத்தான் நேசனல்
(பெர்சத்து)

கங்கார் தேர்தல் முடிவுகள்

[தொகு]
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ∆%
பெரிக்காத்தான் நேசனல் சக்ரி அசன்
(Zakri Hassan)
24,562 43.70% + 43.70% Increase
பாரிசான் நேசனல் பதுல் பாரி மாட் சகாயா
(Fathul Bari Mat Jahya)
15,370 27.35% - 6.91%
பாக்காத்தான் அரப்பான் நூர் அமின் அகமது
(Noor Amin Ahmad)
15,143 26.94% - 19.86%
தாயக இயக்கம் நூர் சுலைமான் சொல்கப்ளி
(Nur Sulaiman Zolkapli)
708 1.26% + 1.26% Increase
சபா பாரம்பரிய கட்சி ரொகிமி சாபி
(Rohimi Shapiee)
417 0.74% + 1.26% Increase
செல்லுபடி வாக்குகள் (Valid) 56,200 100%
செல்லாத வாக்குகள் (Rejected) 660
ஒப்படைக்காத வாக்குகள் (Unreturned) 108
வாக்களித்தவர்கள் (Turnout) 56,968 76.10% - 5.60%
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) 74,859
பெரும்பான்மை (Majority) 9,192 16.35% + 3.81% Increase
பெரிக்காத்தான் நேசனல் வெற்றி பெற்ற கட்சி (Hold)
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்[12]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Semakan Keputusan Pilihan Raya". Semakan Keputusan Pilihan Raya. பார்க்கப்பட்ட நாள் 16 June 2024.
  2. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 2018-04-16. p. 5. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  3. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  4. "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
  5. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 21. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  6. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022. Archived from the original (PDF) on 19 நவம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 9 ஏப்ரல் 2023. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  7. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A) Polling Hours For the General Eelection of the Legislative Assembly of the State of Kelantan" (PDF). Attorney General's Chambers. 15 July 2023.
  8. "Kangar Background | Kangar Municipal Council". Majlis Perbandaran Kangar (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-23.
  9. LLC, General Books (2010-11-24). Geography of Perlis: Cities, Towns and Villages in Perlis, Perlis Geography Stubs, Rivers of Perlis, Kangar, Wang Kelian, Padang Besar (in ஆங்கிலம்). General Books LLC. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-158-07754-0.
  10. Information, Malaya Department of (1957). Fact Sheets on the Federation of Malaya (in ஆங்கிலம்). The Department.
  11. "Kangar | Malaysia". Encyclopedia Britannica (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-23.
  12. "MySPRSemak". mysprsemak.spr.gov.my. பார்க்கப்பட்ட நாள் 1 June 2024.

மேலும் காண்க

[தொகு]