உள்ளடக்கத்துக்குச் செல்

இரைப்பைப் புற்றுநோய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரைப்பைப் புற்றுநோய்
Stomach cancer
ஒத்தசொற்கள்Gastric cancer
உயிரகச்செதுக்கு மூலம் புற்றுநோய் என அறிவிக்கப்பட்ட வயிற்றுப் புண் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது
சிறப்புபுற்றுநோயியல்
அறிகுறிகள்ஆரம்பம்: நெஞ்செரிவு, மேல் வயிற்றுவலி, குமட்டல், பசியின்மை.[1]
பின்னர்: எடை இழப்பு, தோல் மஞ்சள் மற்றும் கண்களின் வெள்ளை வாந்தி, விழுங்கற்கடுமை, மலத்தில் இரத்தம்[1]
வழமையான தொடக்கம்பல ஆண்டுகள்[2]
வகைகள்இரையகப் புற்று, நிணநீர்ப்புற்றுநோய், இடைநுழைக் கட்டி[3]
காரணங்கள்எலிக்கோபேக்டர் பைலோரி, மரபியல்[3][2]
சூழிடர் காரணிகள்புகைத்தல், காய்கறி ஊறுகாய் போன்ற உணவுக் காரணிகள், உடற் பருமன்[3][4]
நோயறிதல்உள்நோக்கியியலின் போது நடத்தப்படும் உயிரகச்செதுக்கு[1]
தடுப்புநடுநிலக்கடல் உனவுகள், புகைத்தலை நிறுத்தல்[3][5]
சிகிச்சைஅறுவை மருத்துவம், வேதிச்சிகிச்சை, கதிர் மருத்துவம், இலக்கு சிகிச்சை[1]
முன்கணிப்புஐந்தாண்டு உயிர்வாழும் வீதம் < 10% (உலகளாவிய),[6]
28% (அமெரிக்கா),[7] 65% (தென் கொரியா)[3]
நிகழும் வீதம்3.5 மில். (2015)[8]
இறப்புகள்783,000 (2018)[9]

இரைப்பைப் புற்றுநோய் (Stomach cancer, அல்லது gastric cancer) என்பது இரைப்பைச் சுவர்களில் இருந்து உருவாகும் ஒரு புற்று நோய் ஆகும்.[10] வயிற்றுப் புற்றுநோய்களில் பெரும்பாலானவை இரைப்பைப் புற்றுநோய்கள் ஆகும், அவை இரைப்பை காளப்புற்றுக்கள் உட்பட பல துணை வகைகளாக பிரிக்கப்படுகின்றன.[3] நிணநீர்ப்புற்றுநோய், இடைநிலைப் புற்று ஆகியவையும் இரைப்பையில் உருவாகக்கூடும்.[3] ஆரம்ப அறிகுறிகளில் நெஞ்செரிவு, மேல் வயிற்று வலி, குமட்டல், பசியின்மை ஆகியவை அடங்கும்.[1] பிற்கால அறிகுறிகளில் எடை இழப்பு, சருமத்தின் மஞ்சள், கண்களின் வெண்மை, வாந்தி, விழுங்குவதில் சிரமம் மற்றும் மலத்தில் இரத்தம் ஆகியவை அடங்கும்.[1] புற்றுநோய் வயிற்றில் இருந்து உடலின் மற்றப் பகுதிகளுக்குக், குறிப்பாக கல்லீரல், நுரையீரல், எலும்புகள், அடிவயிற்றின் புறணி மற்றும் நிணநீர்க்கணுக்கள் வரை பரவக்கூடும்.[11]

உணவுச் செரிமான மண்டலத்தில் இரைப்பை ஒரு முக்கிய உறுப்பாகும். செரிமான மண்டலத்தின் பிற முக்கிய உறுப்புகளாவன: வாய், நாக்கு, உணவுக்குழல், சிறுகுடல், பெருங்குடல், மலக்குடல், ஆசனவாய் ஆகியவை அடங்கும். இரைப்பை மூன்று அடுக்குத் தசைகளால் ஆனது. உண்ணும் உணவு இரைப்பையில் நன்றாக அரைக்கப்பட்டு கூழ் போல் மாற்றப்படுகிறது. இக்கூழ் பின் சிறு குடலுக்குச் செலுத்தப்படுகிறது. இரைப்பைச் சுவர் எல்லாவிதமான இனிப்பு, காரம், புளிப்பு, உப்பு போன்ற பொருட்களுடனும் தொடர்பில் உள்ளது. இவைகளில் புற்று ஊக்கிகளும் உள்ளன.

மதுவும், புகையிலையும் முக்கிய தூண்டுபொருட்களாக உள்ளன.[4] கருவாடு, புகையில் பதப்படுத்திய மீன், இறைச்சி ஆகியவைகளிலும் புற்றூக்க வேதிப்பொருட்கள் உள்ளன. இந்நோயினைக் கண்டுகொள்வது எளிதாக இல்லை. ஒரு அறிகுறியாக வயிற்று வலி இருக்கும். புற்றுநோய் வந்தவர்கள் கூட இவ்வலியை பெரிதுபடுத்துவதில்லை. இதன் காரணமாக நோய் முற்றிய நிலையிலேயே மருத்துவரை அணுகுகின்றனர்.[6] நோய் முற்றிய நிலையில் மலத்துடன் இரத்தம் கலந்து காணப்படும். பேரியம் உணவு, மீயொலி, சி.டி.எக்சு கதிர் படம் முதலியன உதவக்கூடும்.

பச்சைக் காய்கறிகள், பழ வகைகள் மிகவும் நல்ல உணவாகும் நோயினைத் தவிர்க்க உதவும். வளர்ந்து வரும் நாடுகளில் இந்நோய் அதிகம் காணப்படுகிறது. இரைப்பைச் சுவரில் தோன்றி அங்கேயே வளரக்கூடும். இரத்தம் ஊநீர் மூலம் பிற உறுப்புகளுக்கும் பரவக்கூடும். ஏ+ வகை இரத்தம் உள்ளவர்களிடம் சற்று அதிகம் காணப்படுகிறது.

ஆரம்பநிலையில் அறுவை மருத்துவம் நல்ல பலனைக் கொடுக்கிறது. கூடவே கதிர் மருத்துவமும், தேவைப்படின் வேதி மருத்துவமும் மேற்கொள்ளப்படுகின்றன. நீர்கோத்தப் பைகள் போல் முதலில் இரைப்பை சுவர்களில் தோன்றக்கூடும். இது புற்றாக மாறக்கூடும்.

சைவ உணவு, விட்டாமின் ஏ, சி ஆகியவை போதிய அளவு உணவில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவேண்டும். அசுத்தமான நீர் கூட புற்றுநோயினை ஏற்படுத்தும். நவீன மருத்துவம் நோயின் வீரியத்தினைக் குறைப்பதுடன் வாழ்நாளையும் கூட்ட உதவியுள்ளது.

உலகளவில், வயிற்றுப் புற்றுநோய் ஐந்தாவது முன்னணிப் புற்றுநோயும், புற்றுநோய் இறப்புகளுக்கு மூன்றாவது முக்கிய காரணமாகவும் உள்ளது.[12] 2018 ஆம் ஆண்டில், இவ்வகைப் புற்றுநோய் புதிதாக 1.03 மில்லியன் மக்களைப் பாதித்தது. அத்துடன் 783,000 இறப்புகளை ஏற்படுத்தியது.[9] 1930களுக்கு முன்னர், பெரும்பாலான மேற்கத்தைய வளர்ந்த நாடுகள் உட்பட உலகின் பெரும்பகுதிகளில், புற்றுநோயால் இறப்பதற்கு இது மிகவும் பொதுவான காரணமாக இருந்தது.[13][14][15] அதன் பின்னர் உலகின் பல பகுதிகளில் இறப்பு விகிதம் குறைந்து வருகிறது.[3] உணவை குளிரேற்றல் மூலம் பசுமையாக வைத்திருத்தல், குறைந்த உப்பு மற்றும் ஊறுகாய்களாக உள்ள உணவுகளை உண்பது போன்றவை இதற்கு காரணம் என்று நம்பப்படுகிறது.[16] கிழக்காசியா, கிழக்கு ஐரோப்பா பகுதிகளில் வயிற்றுப் புற்றுநோய் பொதுவாக ஏற்படுகிறது.[3] இது பெண்களை விட ஆண்களில் இரு மடங்கு அதிகமாக நிகழ்கிறது.[3]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "Gastric Cancer Treatment (PDQ®)". NCI. 2014-04-17. Archived from the original on 5 July 2014. பார்க்கப்பட்ட நாள் 1 July 2014.
 2. 2.0 2.1 "Role of bacteria in oncogenesis". Clinical Microbiology Reviews 23 (4): 837–57. October 2010. doi:10.1128/CMR.00012-10. பப்மெட்:20930075. 
 3. 3.00 3.01 3.02 3.03 3.04 3.05 3.06 3.07 3.08 3.09 World Cancer Report 2014. World Health Organization. 2014. pp. Chapter 5.4. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9283204299.
 4. 4.0 4.1 "Gastric cancer: epidemiologic aspects". Helicobacter 18 (Suppl 1): 34–8. September 2013. doi:10.1111/hel.12082. பப்மெட்:24011243. 
 5. "Stomach (Gastric) Cancer Prevention (PDQ®)". NCI. 2014-02-27. Archived from the original on 4 July 2014. பார்க்கப்பட்ட நாள் 1 July 2014.
 6. 6.0 6.1 "Treatment of gastric cancer". World Journal of Gastroenterology 20 (7): 1635–49. February 2014. doi:10.3748/wjg.v20.i7.1635. பப்மெட்:24587643. 
 7. "SEER Stat Fact Sheets: Stomach Cancer". NCI. Archived from the original on 6 July 2014. பார்க்கப்பட்ட நாள் 18 June 2014.
 8. GBD 2015 Disease and Injury Incidence and Prevalence Collaborators (October 2016). "Global, regional, and national incidence, prevalence, and years lived with disability for 310 diseases and injuries, 1990–2015: a systematic analysis for the Global Burden of Disease Study 2015". Lancet 388 (10053): 1545–1602. doi:10.1016/S0140-6736(16)31678-6. பப்மெட்:27733282. 
 9. 9.0 9.1 Bray, F; Ferlay, J; Soerjomataram, I; Siegel, RL; Torre, LA; Jemal, A (November 2018). "Global cancer statistics 2018: GLOBOCAN estimates of incidence and mortality worldwide for 36 cancers in 185 countries.". CA: A Cancer Journal for Clinicians 68 (6): 394–424. doi:10.3322/caac.21492. பப்மெட்:30207593. 
 10. "Stomach (Gastric) Cancer". NCI. January 1980. Archived from the original on 4 July 2014. பார்க்கப்பட்ட நாள் 1 July 2014.
 11. Ruddon, Raymond W. (2007). Cancer biology (4th ed.). Oxford: Oxford University Press. p. 223. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780195175431. Archived from the original on 15 September 2015.
 12. "Chapter 1.1". World Cancer Report 2014. World Health Organization. 2014. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9283204299.
 13. Hochhauser, Jeffrey Tobias, Daniel (2010). Cancer and its management (6th ed.). Chichester, West Sussex, UK: Wiley-Blackwell. p. 259. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781444306378. Archived from the original on 15 September 2015.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
 14. Khleif, Edited by Roland T. Skeel, Samir N. (2011). Handbook of cancer chemotherapy (8th ed.). Philadelphia: Wolter Kluwer. p. 127. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781608317820. Archived from the original on 18 September 2015. {{cite book}}: |first1= has generic name (help)CS1 maint: multiple names: authors list (link)
 15. Joseph A Knight (2010). Human Longevity: The Major Determining Factors. Author House. p. 339. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781452067223. Archived from the original on 16 September 2015.
 16. Moore, edited by Rhonda J.; Spiegel, David (2004). Cancer, culture, and communication. New York: Kluwer Academic. p. 139. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780306478857. Archived from the original on 15 September 2015. {{cite book}}: |first1= has generic name (help)

வெளி இணைப்புகள்[தொகு]

வகைப்பாடு
வெளி இணைப்புகள்


"https://ta.wikipedia.org/w/index.php?title=இரைப்பைப்_புற்றுநோய்&oldid=3582402" இலிருந்து மீள்விக்கப்பட்டது