குமட்டல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1681 ஆம் ஆண்டு ஓவியம்

குமட்டல் (இலத்தீன்: Nausea, நாசியா, கிரேக்கம்: ναυσίη, நாசையி, "கடல் சுகவீனம்") என்னும் குமட்டல் , மேல் வயிறு மற்றும் தலை ஆகிய உறுப்புகளில் அசௌகரியம் மற்றும் சுகவீனம் ஆகியவற்றை உணர்ந்து வாந்தி எடுக்கும் ஒரு தூண்டுதல் உணர்வை அளிப்பதாகும். நாசியாவின் தாக்குதல் குவாம் என்று அறியப்படுகிறது. வயிற்றைப் புரட்டும் குமட்டல் உணர்வு சில சமயங்களில் வாம்பிள் என்றழைக்கப்படுகிறது.

காரணங்கள்[தொகு]

குமட்டல், பல மருந்துகளுக்கு, குறிப்பாக ஓபியேடுகளுக்கு, எதிரிடை விளைவாக ஏற்படுவதாகும். மேலும் இது சர்க்கரை சார்ந்த உணவுப் பொருட்களை அதிக அளவில் உட்கொள்வதன் பக்க விளைவாகவும் இருக்கலாம்.

நாசியா என்பது ஒரு நோயல்ல, ஆனால், பல நிலைகளுக்கு ஓர் அறிகுறியாகும். இவற்றில் பல வயிற்றுக்குத் தொடர்பில்லாதவையாகவும் இருக்கலாம். நாசியா பல முறை உடலில் வேறு ஏதோ ஒரு பகுதியில் உள்ளார்ந்து இருக்கும் நிலையைச் சுட்டிக் காட்டுவதாக அமைகிறது. அசைவாக உணரப்படுவது மற்றும் உண்மையான அசைவு ஆகியவற்றிற்கு இடையிலான குழப்பத்தினால் விளையும் அசைவு சுகவீனம் என்பது இதற்கான ஓர் உதாரணமாகும்: நடுநிலை உணர்வானது செவியில் உள்ளது; இது கண்பார்வையுடன் இணைந்து இயங்குகிறது. இந்த இரண்டும் உடல் எந்த அளவுக்கு அசைகிறது என்பதைப் பற்றி ஒத்துப் போகாதபோது, இந்த நிலையில் வயிற்றிற்கு எந்த விதமான தொடர்பும் இல்லை என்றாலும், இதற்கான அறிகுறி குமட்டலாக வெளிப்படுகிறது. உடலில் நச்சுப் பொருள் செலுத்தப்பட்டதால், இவற்றில் ஒரு புலன் பிரமை கொள்கிறது என்று மூளை முடிவு கட்டுவதே வயிற்றிற்கான தொடர்பு இந்த நிலையில் ஏற்படுவதன் காரணம்.

மருத்துவத்தில், வேதியியல் சிகிச்சை விதிமுறைகளின் போதும் பொது உணர்வகற்றல் நடைமுறைக்குப் பின்னரும் குமட்டல் ஒரு பிரச்சினையாகக் கூடும். கர்ப்ப காலத்தில் "காலை சுகவீனம்" என அறியப்படும் ஒரு நிலைக்கும் குமட்டல் ஒரு பொதுவான அறிகுறியாகும். கர்ப்ப காலத்தில் அனுபவிக்கப்படும் லேசான குமட்டல் உணர்வு சாதாரணமானதுதான். இதனை ஓர் உடனடி எச்சரிக்கையாகக் கருதி அஞ்சத் தேவையில்லை.

குமட்டலின் காரணங்கள் கீழ்க்காண்பவற்றை உள்ளடக்கும், ஆனால் இவை மட்டுமே ஆகாது:

  • தீவிர ஹெச்ஐவி தொற்று
  • அடிசன் நோய்
  • சாராயம்
  • பதற்றம்
  • குடல் வால் அழற்சி
  • மூளைக் கட்டி
  • கஃபைன்
  • புற்று நோய்
  • அம்மை நோய்
  • நாள்பட்ட சோர்வு நோய்க்குறித் தொகுப்பு
  • உட்காயக் கலக்கம்
  • கிரான்'ஸ் நோய்
  • மனச் சோர்வு
  • நீரிழிவு நோய்.
  • தலை சுற்றல்
  • மருந்துகள், இவை மருத்துவம், பொழுதுபோக்கு, நோக்கத்துடன் மற்றும்/ அல்லது நோக்கமற்று என எந்தக் காரணங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டாலும்.
  • உடற்பயிற்சி
  • சளிக்காய்ச்சல் (இது குழந்தைகளில் பொதுவாகவும், வயது வந்தவர்களில் அரிதாகவும் வருவது; இதனை "வயிற்றுப் பொருமல்" இரைப்பைக் குடல் அழற்சி என்பதுடன் குழப்பிக் கொள்ளக் கூடாது)
  • உணவு நஞ்சாதல்
  • இரைப்பைக் குடல் அழற்சி
  • இரைப்பை அமில பின்னோக்கு நோய்
  • இரைப்பை வாதம்
  • மாரடைப்பு
  • நீர் கபாளம்
  • ரத்தத்தில் அதிக அளவு பொட்டாஷியம்
  • அதிகரித்த [[உட்கிரானியல் அழுத்தம்
  • மிகு உணர்வுக் குடல் நோய்க்குறித் தொகுப்பு
  • சிறுநீரகச் செயலிழப்பு
  • சிறு நீரகக் கற்கள்
  • மெனியரி'ஸ் நோய்
  • மூளை உறை அழற்சி
  • மாத விடாய்
  • ஒற்றைத் தலைவலி
  • காலை சுகவீனம்
  • போதைப் பொருட்கள்
  • நரம்புத் தளர்ச்சி
  • நோரா வைரஸ்
  • கணைய அழற்சி
  • இரைப்பைக் குடற் புண்
  • நுரையீரல் அழற்சி
  • கருத்தரிப்பு
  • உறக்கம் குன்றுதல்
  • மன அழுத்தம்
  • உயர்நிலை மெசென்ட்ரிக் தமனி நோய்க்குறித் தொகுப்பு
  • துல்லியோ நிகழ்வு
  • ஒதுங்கல் நோய்க்குறித் தொகுப்பு
  • தலைச் சுழற்றல்
  • செவி முன்றில் சமநிலைக் கோளாறு
  • வைரல் ஹெபாடிடிஸ்

சிகிச்சை[தொகு]

குறைந்த கால அளவிலான குமட்டல் மற்றும் வாந்தி எடுத்தல் ஆகியவை தீங்கற்றவையாக இருப்பினும், சில சமயங்களில் அவை மேலும் தீவிரமான சீலியக நோய் போன்ற ஒரு நிலையை சுட்டிக் காட்டுவதாக இருக்கலாம். தொடர்ந்த வாந்தி எடுத்தலுடன் இது தொடர்புடையதாகும்போது, இதன் விளைவான நீரிழப்பு மற்றும்/அல்லது ஆபத்தான மின்பகுளி அசம நிலைகளுக்குக் கொண்டு செல்லலாம்.

குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவற்றிற்கான அறிகுறிகளின் அடிப்படையிலான மருத்துவம் திட உணவுப் பொருட்களின் சிறு அளவுகளை ஈடுபடுத்தலாம். பொதுவாக இது எளிதானதல்ல; மேலும், குமட்டல் எப்போதுமே பசியின்மையுடன் தொடர்புடையதாகவே உள்ளது. நோயாளிக்கு நீரிழப்பு ஏற்பட்டு விட்டால், வாய்வழி அல்லது நரம்பு வழி மின்பகுளிக் கரைசல்கள் அளிக்கப்படும் நடைமுறையான மறு நீரளிப்பு அவசியமாகும். நொறுக்கப்பட்ட பனிக் கட்டிகளை விழுங்குவதும் திறன் கொண்டதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.[சான்று தேவை]அசைவு சுகவீனம் குமட்டலின் காரணமாக இருந்தால், அசைவற்ற ஒரு சூழலில் அமர்வதும் உதவலாம்.

வாந்தியடக்கிகளில் பல வகைகள் உள்ளன; ஆராய்ச்சியாளர்கள் மேலும் திறனுள்ள சிகிச்சைகளைக் கண்டறிவதைத் தொடர்ந்து வருகின்றனர். அறுவை சிகிச்சைக்குப் பின்னர் நோயாளிகளுக்குப் பொதுவாகப் பயன்படுத்தப்படும் வகைகள் ஓண்டன்ஸெட்ரான், டெக்ஸாமெதாசோன், ப்ரோமெதாஜைன், டிமென்ஹைட்ரினேட் மற்றும் (சிறிய அளவுகளில்) ட்ராபெரிடால். கர்ப்பம் தொடர்பான குமட்டலுக்கு டோக்சிலமைன் தேர்ந்தெடுக்கப்படும் மருந்தாக உள்ளது. மரிஜுவானாவை விழுங்கும்போதோ அல்லது நுகரும்போதோ அது பெரும்பாலான பயனர்களில் குமட்டலைக் குறைப்பதாகக் காட்டப்பட்டுள்ளது.[1] மனச்சோர்வு எதிர் மருந்தான மிர்டாஜாபைன் மருந்தும் சிறந்த வாந்தியடக்கி விளைவுகளை அளிக்கிறது. ஊடுருவல் தேவையில்லாத (ஆனால் பல சமயங்களில் சோதிக்கப்படாத) வகையிலான இயந்திரக் கருவிகளும் அசைவு சுகவீனத்தால் உருவாகும் குமட்டலைக் கட்டுப்படுத்தக் கிடைக்கப் பெறுகின்றன.

இஞ்சி மற்றும் மிளகுக்கீரை போன்ற காரச்சுவைப் பொருட்கள் குமட்டலுக்கான பாரம்பரிய குணத் தீர்வாக நூற்றுக்கணக்கான ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அண்மையிலான ஆய்வுகளும் இந்த சிகிச்சை முறைகளின் செல்லுமையை நிரூபித்துள்ளன.[2] மேலும் எலுமிச்சைப் பழமும் குமட்டலைத் தணிப்பதாக பெரும் அளவில் கருதப்பட்டது.[3]

பிஸ்மத் எனப்படும் வெள்ளி நிறக் கனிம உப்பும் மற்றொரு பொதுவான குணவூக்கியாகும். இது, குறிப்பாக பெப்டோபிஸ்மால் போன்ற, வயிறு தொடர்பான பல மருந்துகளில் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Drug Policy Alliance (2001). "Medicinal Uses of Marijuana: Nausea, Emesis and Appetite Stimulation". Archived from the original on 2007-08-05. பார்க்கப்பட்ட நாள் 2007-08-02. {{cite web}}: |author= has generic name (help); Unknown parameter |= ignored (help)
  2. University of Maryland Medical Center (2006). "Ginger". Archived from the original on 2007-04-06. பார்க்கப்பட்ட நாள் 2007-08-02.
  3. சிட்ரான்#ப்ளினி தி எல்டர்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குமட்டல்&oldid=3550521" இலிருந்து மீள்விக்கப்பட்டது