விழுங்கற்கடுமை
ஐ.சி.டி.-10 | R13. |
---|---|
ஐ.சி.டி.-9 | 438.82, 787.2 |
நோய்த் தரவுத்தளம் | 17942 |
MedlinePlus | 003115 |
ஈமெடிசின் | pmr/194 |
MeSH | D003680 |
விழுங்கற்கடுமை (Dysphagia) என்றால் திடமான உணவுகளையும் நீர்ம உணவுகளையும் வாயில் இருந்து இரைப்பைக்கு விழுங்குவதில் உள்ள கடினத்தைக் குறிக்கும் நோயின் உணர்குறியாகும்.[1][2][3][4] இவை நோயின் உணர் அறிகுறிகளாக அ.நோ.வ - 10 [5] இல் வகைப்படுத்தப்பட்டிருப்பினும் சிலவேளைகளில் தனித்துவமான சந்தர்ப்பமாகக் கருதப்படுவதுண்டு.[6][7][8] விழுங்கற்கடுமையால் பாதிக்கப்பட்டிருப்போர் சிலவேளைகளில் அதனைப் பற்றி உணருவதில்லை.[9][10]
விழுங்கற்கடுமை போல வேறு உணர்குறிகள் உண்டு; அவற்றுள் விழுங்கல்வலி எனப்படுவது உணவு விழுங்குகையில் உணரப்படும் வலியைக்குறிக்கும்,[11] பிறிதொன்று "தொண்டையில் உருண்டை" (Globus pharyngis) எனப்படும் தொண்டைப்பகுதியில் ஏதோ ஒரு கட்டி ஒன்று அடைப்பதைப் போன்ற உணர்வைக் குறிக்கும். தொண்டையில் உருண்டை அழற்சி காரணமாகவோ அல்லது உளவியல் சம்பந்தமானதாகவோ ஏற்படலாம். உணவை விழுங்குவதற்கு ஏற்படக்கூடிய பயமான உணர்வு விழுங்கற்பயம் அல்லது ஃபாகோபோபியா (phagophobia) என அறியப்படுகின்றது.
வகைகள்
[தொகு]- வாய்த்தொண்டை விழுங்கற்கடுமை
- உணவுக்குழலிய விழுங்கற்கடுமை
- செயற்பாட்டு விழுங்கற்கடுமை
இணைந்த அறிகுறிகள்
[தொகு]விழுங்கற்கடுமை உள்ளோரில் இருமல், மூச்சடைத்தல் போன்றவை பொதுவாகக் காணப்படும். இந்நோயாளிகள் உணவு தொண்டையில் அல்லது மேல் நெஞ்சில் ஒட்டி இருப்பது போன்ற உணர்வைக் கொண்டிருப்பர், இந்த நிலை உணவு விழுங்கும்போது ஏற்படுகின்றது. சில நோயாளிகள் தமக்கு விழுங்கற்கடுமை இருப்பதை அறிந்திருப்பதில்லை. சிகிச்சை வழங்கப்படாத விழுங்கற்கடுமை ஆபத்தானது. இத்தகைய சந்தர்ப்பங்களில் உணவு, நீர்ம வகைகள் நுரையீரலுக்குள் புகும், இது உறிஞ்சல் நுரையீரல் அழற்சி (அசுப்பிரேசன் நியுமோனியா) எனப்படும். இருமல் உறிஞ்சல் நுரையீரல் அழற்சி இருப்பதைக் காட்டும் அறிகுறியாகும், எனினும் சிலருக்கு இருமலும் இருப்பதில்லை.
காரணங்கள்
[தொகு]- பக்கவாதம் (Stroke) அல்லது மூளைக்காயங்கள்
- இயக்க நரம்பணு நோய்கள் (அமையோட்ரோபிக் லேட்டரல் ஸ்க்லெரோசிஸ்)
- நடுக்குவாதம் (பார்கின்சன் நோய்)
- இளம்பிள்ளை வாதம்
- மல்ட்டிபிள் ஸ்களீரோசிஸ்
- தலை, கழுத்து அறுவைச்சிகிச்சை
- வயது (முதிர்ந்தோர்)
- உணவுக்குழாய் பிறப்புக் குறைபாடுகள், நோய்கள், புற்றுநோய்கள்
- கதிர்வீச்சு நோய்
அறுதியிடல்
[தொகு]உடற்பரிசோதனை மூலம் நரம்பு சம்பந்தமான நோய்கள் அறியப்படும், உதாரணமாக, ஒரு நபரது வாய் மூடித் திறப்பது; உணவை அரைத்து மெல்லுவது போன்றவை அவதானிக்கப்படும். உணவு விழுங்கும்போது அவதானிப்பதற்காக ஒரு குவளை தண்ணீர் நோயாளிக்குக் குடிக்கக் கொடுக்கப்படும், பின்னர் இயலுமானால் சில உணவுவகைகள் உட்கொள்ளும்போது விழுங்குவது அவதானித்தல் மேற்கொள்ளப்படும். விழுங்கும்போது அதிகளவிலான உமிழ்நீர் உண்டாகுதல், தாமதமான ஆரம்ப விழுங்கல், இருமல், ஈரலிப்பான குரல், கரடுமுரடான குரல் போன்றவை விழுங்கற்கடுமை இருப்பதை உணர்த்துகின்றது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ eMedicine அகரமுதலியில் dysphagia
- ↑ Smithard DG, Smeeton NC, Wolfe CD (2007). "Long-term outcome after stroke: does dysphagia matter?". Age Ageing 36 (1): 90–4. doi:10.1093/ageing/afl149. பப்மெட்:17172601. https://archive.org/details/sim_age-and-ageing_2007-01_36_1/page/90.
- ↑ Brady A (2008). "Managing the patient with dysphagia". Home Healthc Nurse 26 (1): 41–6; quiz 47–8. doi:10.1097/01.NHH.0000305554.40220.6d. பப்மெட்:18158492.
- ↑ Sleisenger, Marvin H.; Feldman, Mark; Friedman, Lawrence M. (2002). Sleisenger & Fordtran's Gastrointestinal & Liver Disease, 7th edition. Philadelphia, PA: W.B. Saunders Company. pp. Chapter 6, p. 63. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0721600107.
{{cite book}}
: Unknown parameter|nopp=
ignored (help)CS1 maint: multiple names: authors list (link) - ↑ "ICD-10:". Archived from the original on 2009-01-13. பார்க்கப்பட்ட நாள் 2008-02-23.
- ↑ Boczko F (2006). "Patients' awareness of symptoms of dysphagia". J Am Med Dir Assoc 7 (9): 587–90. doi:10.1016/j.jamda.2006.08.002. பப்மெட்:17095424. http://linkinghub.elsevier.com/retrieve/pii/S1525-8610(06)00377-X.
- ↑ "Dysphagia at [[University of Virginia]]". Archived from the original on 2004-07-09. பார்க்கப்பட்ட நாள் 2008-02-24.
{{cite web}}
: URL–wikilink conflict (help) - ↑ "Swallowing Disorders - Symptoms of Dysphagia at [[New York University School of Medicine]]". Archived from the original on 2007-11-14. பார்க்கப்பட்ட நாள் 2008-02-24.
{{cite web}}
: URL–wikilink conflict (help) - ↑ Parker C, Power M, Hamdy S, Bowen A, Tyrrell P, Thompson DG (2004). "Awareness of dysphagia by patients following stroke predicts swallowing performance". Dysphagia 19 (1): 28–35. doi:10.1007/s00455-003-0032-8. பப்மெட்:14745643. https://archive.org/details/sim_dysphagia_winter-2004_19_1/page/28.
- ↑ Rosenvinge SK, Starke ID (2005). "Improving care for patients with dysphagia". Age Ageing 34 (6): 587–93. doi:10.1093/ageing/afi187. பப்மெட்:16267184. http://ageing.oxfordjournals.org/cgi/pmidlookup?view=long&pmid=16267184.
- ↑ "Dysphagia at [[University of Texas Medical Branch]]". Archived from the original on 2008-03-06. பார்க்கப்பட்ட நாள் 2008-02-23.
{{cite web}}
: URL–wikilink conflict (help)