நோய் உணர்குறி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நோய் உணர்குறி (symptom) என்பது சாதாரண செயற்பாடுகளில் இருந்தும் உணர்வுகளில் இருந்தும் வேறுபட்டதாக நோயாளி ஒருவரால் தனக்கு இயல்புக்கு மாறாக உடல்நிலை உள்ளதென்பதைச் சுட்டிக்காட்டும், நோயாளியால் உணரப்படும் நோய்க்குறியாகும். நோய் உணர்குறிகள் நோயாளியால் மருத்துவருக்கு தெரிவிக்கப்படுபவையாகும், இவற்றை கருவிகள் கொண்டு அளக்கமுடியாது. குமட்டல், பசியின்மை, களைப்பு என்பன இதற்கு சில உதாரணங்களாகும்.

சில சந்தர்ப்பங்களில், சில நோய்க்குறிகள் உணர்குறிகளாகவும், அறிகுறிகளாகவும் உள்ளன, உதாரணமாக, தோல் அரிப்பு நோயாளியால் உணரப்படும் அதேவேளையில் மருத்துவரால் அறியப்படுகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நோய்_உணர்குறி&oldid=2093682" இருந்து மீள்விக்கப்பட்டது