இரும்பு(IV) ஆக்சிடெட்ராபுளோரோபோரேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரும்பு(IV) ஆக்சிடெட்ராபுளோரோபோரேட்டு
Iron(IV) oxytetrafluoroborate
பெயர்கள்
வேறு பெயர்கள்
  • பெரைல் டெட்ராபுளோரோபோரேட்டு
  • இரும்பு(IV) ஆக்சிசன் டெட்ராபுளோரோபோரேட்டு
இனங்காட்டிகள்
InChI
  • InChI=1S/2BF4.Fe.O/c2*2-1(3,4)5;;/q2*-1;+4;-2
    Key: WGVPZCRPEKZSRI-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • [Fe+4].[O-2].[B-](F)(F)(F)F.[B-](F)(F)(F)F
பண்புகள்
FeO(BF4)2
வாய்ப்பாட்டு எடை 245.456 கி/மோல்
கரையும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

இரும்பு(IV) ஆக்சிடெட்ராபுளோரோபோரேட்டு (IronIron(IV) oxytetrafluoroborate) FeO(BF4)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அரிய வகை அயனியான Fe(IV) அயனி இச்சேர்மத்தில் இடம்பெற்றுள்ளது. முதன்முதலில் 1998 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டாலும் அப்போது சரியாக உறுதிப்படுத்தப்படவில்லை. பின்னர் 2006 ஆம் ஆண்டு மிகவும் நம்பகமான உற்பத்தி அறிவிக்கப்பட்டது.

தயாரிப்பு[தொகு]

இரும்பு(II) டெட்ராபுளோரோபோரேட்டுடன் ஓசோனைச் சேர்த்து வினைபுரியச் செய்து இரும்பு(IV) ஆக்சிடெட்ராபுளோரோபோரேட்டு தயாரிக்கப்படுகிறது.

இயற்பியல் பண்புகள்[தொகு]

இரும்பு(IV) ஆக்சிடெட்ராபுளோரோபோரேட்டு நிலைப்புத் தன்மை அற்றதாகும். விரைவில் இது சிதைவடைந்து Fe(II) அயனியாகி இரும்பு(III) டெட்ராபுளோரோபோரேட்டாகவும் Fe(IV) அணைவுச் சேர்மமாகவும் உருவாகிறது. கந்தகம் போன்ற ஆக்சிசன் ஏற்பிகளுடன் வினையில் ஈடுபட்டாலும் இது சிதைவடந்து கந்தக மோனாக்சைடாகவும் இரும்பு(II) டெட்ராபுளோரோபோரேட்டாகவும் மாற்றமடைகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Ames Laboratory, Iowa State University (2006). "Aqueous Ferryl(IV) Ion:  Kinetics of Oxygen Atom Transfer To Substrates and Oxo Exchange with Solvent Water". ACS Publications (in English). U.S. Department of Energy. doi:10.1021/ic051868z. பார்க்கப்பட்ட நாள் 17 May 2021.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)