இந்திய துணைப் பிரதமர்
இந்திய துணை பிரதமர் இந்திய அரசின் மத்திய அமைச்சரவையில் ஒரு உறுப்பினர் ஆவார். பொதுவாக ஒரு துணை பிரதமர், உள்துறை அமைச்சகம் அல்லது நிதி அமைச்சகம் போன்ற ஒரு முக்கிய அமைச்சரவையை தன் இலாகாவாக வைத்திருப்பார். துணை பிரதம மந்திரி பதவி அதிகாரப்பூர்வமற்றது, இருப்பினும் இது ஒரு கூட்டணி அரசாங்கத்தின் போதும் அல்லது தேசிய அவசர காலங்களிலும், அரசியல் ஸ்திரத்தன்மைக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.[1]
இந்திய துணைப் பிரதமர்களின் பட்டியல்
எண் | படம் | பதவிக்காலம் | கட்சி (கூட்டனி) |
பிரதமர் | |||
---|---|---|---|---|---|---|---|
1 | வல்லபாய் பட்டேல் | 15 ஆகஸ்ட் 1947 | 15 டிசம்பர் 1950 | இந்திய தேசிய காங்கிரசு | ஜவஹர்லால் நேரு | ||
2 | மொரார்ஜி தேசாய் | 21 மார்ச் 1967 | 6 டிசம்பர் 1969 | இந்திய தேசிய காங்கிரசு | இந்திரா காந்தி | ||
3 | சரண் சிங் | 24 மார்ச் 1977 | 28 ஜீலை 1979 | ஜனதா கட்சி | மொரார்ஜி தேசாய் | ||
4 | ஜெகசீவன்ராம் | 24 மார்ச் 1977 | 28 ஜீலை 1979 | ஜனதா கட்சி | மொரார்ஜி தேசாய் | ||
5 | யஷ்வந்த்ராவ் சவான் | 28 ஜீலை 1979 | 14 ஜனவரி 1980 | காங்கிரஸ் (அர்ஸ்) | சரண் சிங் | ||
6 | சவுத்ரி தேவி லால் | 2 டிசம்பர் 1989 | 21 ஜீன் 1991 | ஜனதா தளம் (தேசிய முண்ணனி) |
வி. பி. சிங் சந்திரசேகர் | ||
7 | லால் கிருஷ்ண அத்வானி | 29 ஜீன் 2002 | 22 மே 2004 | பாரதிய ஜனதா கட்சி (தேசிய ஜனநாயகக் கூட்டணி) |
அடல் பிகாரி வாச்பாய் |
சான்றுகள்
- ↑ "துணைப் பிரதமர் பட்டியல்". பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 21, 2015.