ஆடிக்கிருத்திகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆடிக்கிருத்திகை என்பது ஆடி மாதம் கிருத்திகை நட்சத்திரத்தில் அனுசரிக்கப்படும் இந்து சமயப் பண்டிகையாகும். இந்தப் பண்டிகை தினத்தில் முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.[1]

தொன்மம்[தொகு]

முருகன் பிறந்தது விசாக நக்ஷத்திரம் என்று சொல்லப் பட்டாலும், அவனைப் பாலூட்டி வளர்த்தது ஆறு கார்த்திகைப் பெண்கள் “கார்த்திகை” நட்சத்திரமாக மாறி அன்றைய தினத்தை ஆடிக் கிருத்திகையாக விரதமிருந்து வழிபடுகிறார்கள்.[2] முருகனுக்கு திதிகளில் சஷ்டியும், கிழமைகளில் வெள்ளிக்கிழமையும், நக்ஷத்திரங்களில் கிருத்திகையும் சிறப்பு. ஆடி மாதத்தில் இருந்து தொடங்கி ஆறுமாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து தை மாதக் கார்த்திகையில் விரதத்தை முடிக்கலாம்.

விரதமுறைகள்[தொகு]

விரதம் இருப்பவர்கள் கடைப்பிடிக்கவேண்டிய பொதுவான விரதமுறைகளே இதற்கும் பொருந்தும் என்றாலும் கந்தனுக்குரிய விரதங்களில் உப்பு தவிர்க்கப் படுவதை முக்கியமாய்க் கருதுகின்றனர். உப்பில்லா உணவை எடுத்துக் கொண்டு கார்த்திகை விரதமோ, சஷ்டி விரதமோ இருத்தல் சிறப்பாகவும், உயர்வாகவும் கருதப் படுகிறது.

சிறப்பு[தொகு]

மழைக்காலத் தொடக்கமான தக்ஷிணாயனம் பொதுவாக அனைத்து இறை வழிபாடுகளுக்கும் ஏற்றதாகவும், உத்தராயனம் திருமணம், உபநயனம், கிரஹப் பிரவேசம் போன்ற முக்கிய நிகழ்வுகளுக்கு ஏற்றதாகவும் சொல்லப் படுகிறது. ஆடி மாதத்தில் இருந்து வரிசையாக அனைத்துக் கடவுளரையும் வேண்டிச் செய்யும் பண்டிகைகளும், விரதங்களும் வருகின்றன. தேவர்களின் மாலைக்காலம் என்று சொல்லப் படும் இந்த மாதத்தில் வழிபாடுகள் அதனாலேயே நடத்தப் படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "ஆடிக்கிருத்திகை தினத்தன்று முருகனுக்கு விரத வழிபாடு". மாலைமலர். https://www.maalaimalar.com/Devotional/MainFasts/2018/08/04095955/1181606/aadi-krithigai-viratham.vpf. பார்த்த நாள்: 6 April 2021. 
  2. "இன்று ஆடி கிருத்திகை : கர்ம வினைகள் நீங்க முருகன் வழிபாடு!!". தினகரன். https://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=24535. பார்த்த நாள்: 6 April 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆடிக்கிருத்திகை&oldid=3129396" இருந்து மீள்விக்கப்பட்டது