உள்ளடக்கத்துக்குச் செல்

கந்தர் அந்தாதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கந்தர் அந்தாதி (கந்தரந்தாதி) என்னும் நூல் அருணகிரிநாதர் என்பவரால் எழுதப்பட்டது. அருணகிரிநாதர் 15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.

கந்தரந்தாதி நூலில் காப்புச்செய்யுள் உட்பட 102 பாடல்கள் உள்ளன. அனைத்தும் யமகம் முறையில் அமைந்த அந்தாதிப் பாடல்கள். எளிதில் பொருள் விளங்கிக்கொள்ள முடியாத பாடல்கள்; புலமை விளையாட்டுப் பாடல்கள். எனவே ”கந்தரந்தாதியைப் பாராதே, கழுக்குன்றத்து மலையை நினையாதே” என்னும் பழமொழி ஒன்று தோன்றியது. திருக்கழுக்குன்றத்து மலை ஏறுவதற்குக் கடினமானது. அதுபோல கந்தரந்தாதி புரிந்துகொள்ளக் கடினமானது.

அந்தாதிப் பகுதியில் உள்ள 100 பாடல்களும் ”சி, சீ, செ, சே, தீ, தெ, தே” என்னும் 8 எழுத்துக்களில் ஒன்றைக் கொண்டு தொடங்குகின்றன. திருஞானசம்பந்தர் தேவாரத்தில் [1] தலப்பெயருடன் கூடிய மோனையந்தாதி உள்ளது.

இந்த நூலிலுள்ள மோனை எழுத்துக்களும் செந்தில் வாழ் முருகனைக் குறிப்பனவாக இருப்பதால் இந்த நூல் திருச்செந்தூர் முருகப்பெருமான் மீது பாடப்பட்டது என்னும் கருத்து நிலவிவருகிறது.

கருவிநூல்

[தொகு]
  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, பதிப்பு 2005

அடிக்குறிப்பு

[தொகு]
  1. திருமுறை 3: 94-99
"https://ta.wikipedia.org/w/index.php?title=கந்தர்_அந்தாதி&oldid=3286788" இலிருந்து மீள்விக்கப்பட்டது