வள்ளி (தெய்வம்)
தோற்றம்
| வள்ளி | |
|---|---|
வள்ளி தெய்வானையுடன் உற்சவ மூர்த்தியாக முருகன் | |
| தேவநாகரி | பழனிமலை |
| தமிழ் எழுத்து முறை | வள்ளி |
| இடம் | பழனிமலை |
| துணை | முருகன் |
வள்ளி (Valli) தமிழ் கடவுளான முருகனின் மனைவி ஆவார். ஒரு முனிவரின் பார்வையால் பெண்மானின் வயிற்றில் குழந்தையாய்ப் பிறந்தவள் வள்ளி.[சான்று தேவை] குறவர்களால் கண்டெடுக்கப்பட்டு, அவர்கள் குல வழக்கப்படி தினைப்புனம் காத்து வந்த பொழுது முருகப்பெருமான் விருத்த வடிவில் வள்ளியம்மையை மணந்து கொண்டார்.[1]
இவ்வாறு நடந்த இடம் கதிர்காமம் என்னும் இலங்கையின் தென்பால் அமைந்திருக்கும் திருத்தலமாகும். இதற்குச் சான்றாக இன்றும் வேட்டுவ முறைகளிலே இங்கு பூசை வழிபாடுகள் நடந்து வருகின்றன. வள்ளியம்மையாருக்கு தனிக் கோவிலும் அமைக்கப் பெற்றிருத்தலை காணலாம்.
சங்கப்பாடல்களில் வள்ளித்தெய்வம்
[தொகு]வள்ளல் முருகனுக்கு மனைவி என்பதால் வள்ளளின் பெண்பால், வள்ளி-முருகப்பெருமானின் மனைவி,
வள்ளிக்கிழங்குக்காக அகழ்ந்த குழியில் கண்டெடுக்கப்பட்டவள் ஆதலால் வள்ளி.
- தேன் இருக்கும் வள்ளிமலர்[2]
- முருகப்பெருமான் நறுமலர் வள்ளிப்பூ நயந்தவன்[3]
- குறிஞ்சிக் குறவர் மறங்கெழு வள்ளி தமர்(உறவினர்)[4]
- முருகப்பெருமானின் ஆறு முகங்களில் ஒன்று எப்போதும் வள்ளியம்மையைப் பார்த்துப் புன்னகை பூத்துக்கொண்டிருக்குமாம்.[5]
- மலைவேங்கை நறுநிழலின் வள்ளி போல்வீர் (எனக் கண்ணகியை மலைக்குறவர் விளித்தனர்)[6]