உள்ளடக்கத்துக்குச் செல்

கிடங்கூர் சுப்ரமணிய சுவாமி கோயில்

ஆள்கூறுகள்: 9°41′04″N 76°33′59″E / 9.68444°N 76.56639°E / 9.68444; 76.56639
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிடங்கூர் சுப்ரமணிய சுவாமி கோயில்
Kidangoor Subramanya Swami Temple
கிடங்கூர் சுப்ரமணிய சுவாமி கோயில் is located in கேரளம்
கிடங்கூர் சுப்ரமணிய சுவாமி கோயில்
கேரளாவில் கோயிலின் அமைவிடம்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:கேரளா
மாவட்டம்:கோட்டயம்
அமைவு:கிடங்கூர்
ஆள்கூறுகள்:9°41′04″N 76°33′59″E / 9.68444°N 76.56639°E / 9.68444; 76.56639
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:பாரம்பரிய கேரள கட்டிடக்கலை

கிடங்கூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் (Kidangoor Subramanya Temple) என்பது இந்திய மாநிலமான கேரளவின் கோட்டயம் மாவட்டத்தில் அயர்குன்னம் அருகே கிடங்கூரில் அமைந்துள்ள ஒரு பழங்கால இந்து கோயிலாகும். இது கேரளாவின் புகழ்பெற்ற சுப்பிரமண்யர்கோயில்களில் ஒன்றாகும். இது குறைந்தது 1500 ஆண்டுகள் பழமையானது என்று மதிப்பிடப்பட்டுள்ளது. [1]

அமைவிடம்

[தொகு]

இந்த கோயில் மன்னார்காடு - கிடங்கூர் மாநில நெடுஞ்சாலையில், மீனாட்சிலாற்றங் கரையில் அமைந்துள்ளது. இது கிடங்கூரிலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவிலும், ஆயர்குன்னத்திலிருந்து 5 கி.மீ தொலைவிலும் உள்ளது.[2]

தெய்வம்

[தொகு]

'திரிகிடங்கூரப்பன்' என்ற பெயரில் சுப்பிரமணியக் கடவுள் இங்கு இருக்கிறார். கிடங்கூருக்கு 'பரிகாபுரம்' என்ற மாற்றுப் பெயரும் இருப்பதால் கடவுள் 'பரிகாபுரேசன்' என்றும் அழைக்கப்படுகிறார்.[1]

புனைவு

[தொகு]

கிடங்கூர், 64 நம்பூதிரி கிராமங்களில் ஒன்றாகும். இது வடக்கும்கூர் மற்றும் தெக்கும்கூர் இராச்சியங்களின் எல்லையில் இருந்தது. புராணக்கதை என்னவென்றால், சுப்ரமண்யரின் சிலை கௌன முனிவரின் கமண்டத்திலிலிருந்து தண்ணீர் வெளியேறியபோது வெளியே வந்தது. தண்ணீருடன் சேர்ந்து கொண்டு சிலையும் கிடங்கூரில் உள்ள விஷ்ணு சன்னதியை அடைந்தது.

துணைக் கோயில் தெய்வங்கள்

[தொகு]
  • பகவதி : ( புவனேசுவரி) தெய்வம் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. தெய்வத்திற்கு புஷ்பாஞ்சலி, இரக்த புஷ்பாஞ்சலி, குருதி பூசை, வர நைவேத்தியம், கடும்பாயசம், வெல்ல நைவேத்தியம் ஆகியவை தேவிக்கு முக்கிய பிரசாதங்களாகும்.
  • சாஸ்தா : இங்குள்ளா சாஸ்தா சன்னதி தென்மேற்கு மூலையில் வைக்கப்பட்டுள்ளது. தெய்வத்திற்கு புஷ்பாஞ்சலி, நெய்விளக்கு, நீரா
  • விஷ்ணு: இங்கு விஷ்ணுவுக்கும் முக்கியத்துவம் உண்டு. தெய்வம் இங்கு 'வடக்கும்தேவர்' என்ற பெயரில் அழைக்கப்படுகிறாது. இந்த ஆலயம் சுப்பிரமணியரின் கருவறைக்கு வடக்கே வைக்கப்பட்டுள்ளது. இது சுப்பிரமண்யர் கோயிலை விட பழமையானது என்று நம்பப்படுகிறது.[1]
  • கணபதி : இந்து மதத்தில் முதலில் வணங்கப்படும் கடவுளான பிள்ளையாருக்கு ஒரு ஆலயம் கோயிலின் தென்மேற்கு பக்கத்தில் ஒரு தனி கோவிலில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இந்த கோயில் கிடங்கூர் கோயிலின் துணைக் கோயிலாகும். இது, மிக சமீபத்தில் 1995இல் கட்டப்பட்டது.

பண்டிகைகள்

[தொகு]

இந்த கோயில் அதன் வருடாந்திர திருவிழாவை மலையாள மாதமான கும்பத்தில் (அதாவது பிப்ரவரி / மார்ச்) 10 நாட்கள் நீடிக்கும். கேரளாவின் பல கோயில்களைப் போலவே, கார்த்திகை நாளில் கொடியேற்றத்துடன் விழாத் தொடங்குகின்றன. மீனச்சிலாற்றங்கரையில் உள்ள செம்பிலாவு பூங்குன்னத்து மகாதேவர் கோவிலில் ஆராட்டு (புனித குளியல்) நடைபெறுகிறது. இந்த கோவிலில் தலைமை தாங்கும் சிவன் திரிகிடங்கூரப்பனின் தந்தையாக கருதப்படுகிறார். மகர மாதத்தில் தைப்பூசம், 'கந்த சஷ்டி' ஆகியவை மற்ற முக்கியமான பண்டிகைகளாக கொண்டாடப்படுகின்றன.[1]அம்மாவாசைக்கு அடுத்த ஆறாவது நாளில் புனித சஷ்டிவிரதத்தை செய்ய பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த யாத்ரீகர்கள் இங்கு வருகிறார்கள்.[2]

காணிக்கை

[தொகு]

உதசவபலி, துலாபரம், காவடி, சுட்டு விளக்கு, உதய அஸ்தமன பூஜை, முழுகாப்பு, பஞ்சாமிர்த அபிசேகம், பந்தீராழி, கதம்ப பாயசம் ஆகியவை இங்கே வழங்கப்படும் முக்கியமான பிரசாதங்களாகும்.[2]

பட தொகுப்பு

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

 

  1. 1.0 1.1 1.2 1.3 "Kidangoor Subrahmanya Temple Kottayam, Kerala". www.vaikhari.org. பார்க்கப்பட்ட நாள் 2016-12-12.
  2. 2.0 2.1 2.2 "✍pedia - Kidangoor Subramanya Swamy Temple - Kidangoor" (in en-US). ✍pedia. 2011-12-01. http://pedia.desibantu.com/kidangoor-subramanya-swamy-temple/.