உள்ளடக்கத்துக்குச் செல்

ஆசிய பெருமல்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆசிய பெருமல்லி
Jasminum grandiflorum
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
மெய்இருவித்திலி
உயிரிக்கிளை:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
J. grandiflorum
இருசொற் பெயரீடு
Jasminum grandiflorum
L.[1]

ஆசிய பெருமல்லி (தாவர வகைப்பாட்டியல்: Jasminum grandiflorum) என்பது மல்லிப் பேரினத்தைச் சார்ந்த, இருநூற்றிற்கும் மேற்பட்ட மல்லிகை இனங்களில் ஒன்றாகும். இப்பேரினம், பன்னாட்டு பூக்கும் தாவர மரபுநெறிமுறை குழுமத்தின் (APG IV) நான்காவது பதிப்பின் படி[2], முல்லைக் குடும்பத்திலுள்ள 29 பேரினங்களில்[3] ஒன்றாக இடம் பெற்றுள்ளது. இத்தாவரயினம், யாசுமினம் கிரேண்டிப்ளோரம் என்ற தாவரவியல் பெயரால் அழைக்கப்படுகிறது. 1762 ஆம் ஆண்டு இவ்வினத்தினைப் பற்றிய தாவரவியல் முதற்குறிப்பு உள்ளது. யாசுமினம் கிராண்டிப்ளோரம் (Jasminum grandiflorum) என்ற இனத்தில் இரு சிற்றினங்கள் உள்ளன. அவற்றில் இந்த துணையினம் மட்டுமே பல கண்டங்களில் காணப்படுகிறது. மற்ற துணையினம்( Jasminum grandiflorum subsp. floribundum) அரபு நாடுகளிலும், சில ஆப்பிரிக்க நாடுகளிலும் மட்டுமே காணப்படுகிறது.[4][5][6] இங்கிலாந்திலுள்ள கியூ தாவரவியற் பூங்கா, இத்தாவரியினம் குறித்து வெளியிட்ட முதல் ஆவணக் குறிப்பும், ஆண்டும் வருமாறு: "Sp. Pl. ed. 2 : 9 (1762)". இத்தாவரயினத்தை, தனித்துவமுள்ள இனமாக, பன்னாட்டு அறிஞர் ஏற்றுக் கொண்டுள்ளனர். இவ்வினம் மருத்துவ பயன்பாடுகளையும்[7], சுற்றுச்சூழல் பயன்பாடுகளையும்[8] பெற்றுள்ளதாகக் கருதப்படுகிறது.

பேரினச்சொல்லின் தோற்றம்

[தொகு]

அரபி மொழியில், யாச(அ)மின் (ياسمين), என்றும்; இந்த அரபிச்சொல்லுக்கு "இனிய நுறுமணமுள்ள தாவரங்கள்" என்பது பொருளாகும்.[9] பாரசீக மொழியில் யாசுசுமின் (یاسمین) என்றும்; உருது மொழியில் یاسمینی அல்லது یاسمین بو என்றும் அழைப்பர். மேலும், மல்லிப்பூவின் வாசனை எண்ணெக்கான பெயர்கள், சில கிரேக்க சொற்களோடு (iasme, iasmelaion) ஒப்பீடும் செய்யப்படுகிறது. 1570 ஆம் ஆண்டுகளில், பிரஞ்சு மொழியில் jasmin என்ற சொல்லும், அதற்கு முன்னர் jessemin என்ற சொல்லும் பயன்பாட்டில் இருந்துள்ளன. பிரஞ்சு மொழியில் இருந்து, பல செருமானிய மொழிகளில் இச்சொல்லின் வேறுபட்ட வடிவங்கள் தோன்றியது எனலாம். பதினாறாம் நூற்றாண்டில் இத்தாவர வகை இங்கிலாந்தில் முதன்முதலாக வளர்க்கப்பட்டதாக அறிய முடிகிறது.[10]

வாழிடம்

[தொகு]

பிறப்பிடம்: வங்காளதேசம், தென்நடு சீனா, சீபூத்தீ, எரித்திரியா, எத்தியோப்பியா, கென்யா, நேபாளம், ஓமான், பாக்கித்தான், உருவாண்டா, சவூதி அரேபியா, சோமாலியா, சூடான், உகாண்டா, மேற்கு இமயமலை ஆகிய இடங்களை, இத்தாவரயினத்தின் பிறப்பிடங்களாக பன்னாட்டு அறிஞர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.[11]

அறிமுக வாழிடம்: பெலீசு, பொலிவியா, குக் தீவுகள், கோஸ்ட்டா ரிக்கா, கியூபா, டொமினிக்கன் குடியரசு, எல் சால்வடோர், குவாத்தமாலா, கினி, எயிட்டி, ஒண்டுராசு, ஜமேக்கா, சாவகம் (தீவு), லீவர்டு தீவுகள், மாலைத்தீவுகள், மரியானா தீவுகள், மொரிசியசு, தென்கிழக்கு மெக்சிக்கோ, நிக்கராகுவா, பனாமா, புவேர்ட்டோ ரிக்கோ, ரீயூனியன், டிரினிடாட் மற்றும் டொபாகோ, வின்வர்டு தீவுகள் ஆகிய இடங்களை, இத்தாவரயினத்தின் அறிமுக வாழிடங்களாக, பன்னாட்டு அறிஞர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இவற்றையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Jasminum grandiflorum". POWO(Plants of the World Online). Royal Botanic Gardens, Kew. பார்க்கப்பட்ட நாள் 26 அக்டோபர் 2023.
  2. Angiosperm Phylogeny Group (2016), "An update of the Angiosperm Phylogeny Group classification for the orders and families of flowering plants: APG IV", இலின்னேயசு சமூகத்தின் தாவர ஆய்விதழ், 181 (1): 1–20, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1111/boj.12385
  3. முல்லைக் குடும்பம் (Oleaceae Hoffmanns. & LinkFirst published in Fl. Portug. [Hoffmannsegg] 1: 62. 1809 [1 Sep 1809] (as "Oleinae") (1809) nom. cons.)
  4. https://powo.science.kew.org/taxon/urn:lsid:ipni.org:names:952570-1
  5. 1)Jasminum grandiflorum subsp. floribundum (R.Br. ex Fresen.) P.S.Green
  6. 2)Jasminum grandiflorum subsp. grandiflorum
  7. https://pubmed.ncbi.nlm.nih.gov/25847780/
  8. https://patents.google.com/patent/KR20100042090A/en
  9. Gledhill, David (2008). "The Names of Plants". Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780521866453 (hardback), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780521685535 (paperback). pp 220
  10. etymonline
  11. https://powo.science.kew.org/taxon/urn:lsid:ipni.org:names:328130-2#distributions

வெளியிணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Jasminum grandiflorum
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசிய_பெருமல்லி&oldid=3927416" இலிருந்து மீள்விக்கப்பட்டது