புணர்ச்சிப் பரவசநிலை
புணர்ச்சிப் பரவசநிலை (Orgasm) அல்லது பாலின்ப உச்சி (sexual climax) என்பது நெடிய பாலுணர்வுத் தூண்டலின்பின் ஏற்படும் உடல், உளவியல் (psychology), மற்றும் மெய்ப்பாடு (emotion) நிலையிலான நிறைவளிக்கும் தூண்டற்பேற்றைக் குறிக்கும். இது நிகழும்போது விந்து தள்ளல், மேனி சிவத்தல், மற்றும் தானாயியங்கும் தசைச்சுருக்கங்கள் (spasms) ஆகிய உடலியல் விளைவுகள் ஏற்படுகின்றன.
இருபாலரிலும் தூண்டற்பேறு
[தொகு]ஆண்களும் பெண்களும் இவ்வுணர்வைப் பெறுகின்றனர். இருப்பினும் பெருமகிழுணர்வு (euphoria), கீழ் இடுப்புத் தசைகளுக்குக் கூடுதல் குருதியோட்டம், ஒழுங்குடனான (rhythmic) இடுப்புத் தசைச் சுருக்கங்கள், புரோலாக்டின் சுரப்பதால் ஏற்படும் அயர்வு உணர்வு போன்ற சில பொதுவான விளைவுகளைத் தவிர பல வகைகளில் இருபாலரிலும் மாறுபட்ட நிகழ்வுகள் ஏற்படுகின்றன.
ஆண்களில் தூண்டற்பேறு
[தொகு]மனிதரில் ஆண்பாலரில் புணர்ச்சிப் பரவசநிலையின்போது சுக்கியம் (prostate), சிறுநீர்வழி (urethra), மற்றும் ஆண்குறியின் அடிப்பகுதி தசைகள் ஆகியவற்றின் விரைவான, ஓரிசைவுடனான, சுருக்கங்கள் ஏற்படும். பெரும்பாலும் இதே வேளையில் விந்துப் பாய்மம் (semen) ஆண்குறி வழியாக சுற்றிழுப்பசைவு (peristalsis) முறையில் மிகுந்த அழுத்தத்துடன் வெளியேற்றப்படுகிறது. ஒரு பரவசநிலை நிகழ்விற்குப்பின் ஒரு விலக்கு வரம்பு (refractory period) உண்டு. இக்கால வரம்பிற்குள் மற்றொரு பரவசநிலை ஏற்படாது. இருப்பினும், இக்காலவரம்பு ஒருவரின் வயது, மற்றும் தன்னியல்பைப் பொருத்து ஒரு நிமிடத்திற்கும் குறைவான அளவிலிருந்து அரை நாள் வரை மாறுபடலாம்.
பெண்களில் தூண்டற்பேறு
[தொகு]பெண்களில் பரவசநிலைக்கு முன்பு புணர்புழையின் (யோனி, vagina) சுற்றுச்சுவர் சில சுரப்பிகளின் செயலால் நனையும். கூடவே, கூடுதல் குருதியோட்டம் காரணமாக பெண்குறியின் (clitoris) மென்திசுக்களில் குருதி தங்குவதன்மூலம் அது விரிவடைகிறது. சில பெண்களில் உடல் நெடுகிலும் மேல்தோலிற்குக் கூடுதல் குருதி பாய்வதால் நாணம் அடைவது போன்று மேனி சிவக்கிறது. பரவசநிலை அண்மிக்கும்போது பெண்குறி அதன் முகப்பு மூடியின்கீழ் (clitoral hood) சென்று உள்வாங்கிவிடுகிறது. மேலும், சிற்றுதடுகள் (labia minora) இருண்டுவிடுகின்றன. பரவசநிலை மேலும் நெருங்குகையில், புணர்புழை 30 விழுக்காடு வரை சுருங்குவதாலும், பெண்குறியின் திசுக்கள் உள்வருதலாலும் பெரிதும் அடைபட்டுப்போய் ஆண்குறியைக் கவ்விக் கொள்கிறது. அதன் பின் கருப்பை (uterus) தசைகள் சுருக்கம் காண்கின்றன. முழுமையான பரவசநிலையின்போது கருப்பை, புணர்புழை, மற்றும் கீழிடுப்புத்தசைகள் (pelvic muscles) ஆகியவை ஓரிசைவுடன் சுருங்கி விரிகின்றன. ஆண்களைப்போலன்றி பெண்களால் ஒரு புணர்ச்சிப் பரவசநிலையை அடுத்து தொடர்ந்து சிறிய இடைவெளிகளில் பல பரவசநிலைகளைப் பெற முடியும்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Berman, Laura (2006-10-03). "Why Women Can Have Multiple Orgasms (பெண்களால் ஏன் பல பரவசநிலைகளை அடைய முடிகிறது?)". Yahoo! Health. Archived from the original on 2006-10-22. பார்க்கப்பட்ட நாள் 2006-10-07.
{{cite web}}
: Check|authorlink=
value (help); External link in
(help)(ஆங்கில மொழியில்)|authorlink=
வெளி இணைப்புகள்
[தொகு]- பாலுணர்வுப் பரவசநிலை பற்றிய கட்டுரை பரணிடப்பட்டது 2006-06-27 at the வந்தவழி இயந்திரம்