உள்ளடக்கத்துக்குச் செல்

பிரசியோடைமியம்(III) குளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரசியோடைமியம்(III) குளோரைடு
Praseodymium(III) chloride
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பிரசியோடைமியம்(III) குளோரைடு
வேறு பெயர்கள்
பிரசியோடைமியம் குளோரைடு; பிரசியோடைமியம் முக்குளோரைடு
இனங்காட்டிகள்
10361-79-2 Y
InChI
  • InChI=1S/3ClH.Pr/h3*1H;/q;;;+3/p-3
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 66317
  • Cl[Pr](Cl)Cl
UNII [http://fdasis.nlm.nih.gov/srs/srsdirect.jsp?regno=1JB99PM4G8


1JB99PM4G8
] N

பண்புகள்
PrCl3
வாய்ப்பாட்டு எடை 247.24 கி/மோல் (நீரிலி)
373.77 கி/மோல் (எழுநீரேற்று)
தோற்றம் நீலப் பச்சை திண்மம் (நீரிலி)
இளம் பச்சை திண்மம் (எழுநீரேற்று)
அடர்த்தி 4.02 கி/செ.மீ3 (நீரிலி)
2.250 கி/செ.மீ3 (எழுநீரேற்று)
உருகுநிலை 786 °C (1,447 °F; 1,059 K)
கொதிநிலை 1,710 °C (3,110 °F; 1,980 K)
104.0 கி/100 மி.லி (13 °செல்சியசு)
+44.5·10−6செ.மீ3/மோல்
கட்டமைப்பு
படிக அமைப்பு அறுகோணம் (UCl3 type), hP8
புறவெளித் தொகுதி P63/m, எண். 176
ஒருங்கிணைவு
வடிவியல்
மூவுச்சி முக்கோணப் பட்டகம்
ஒன்பது ஒருங்கிணைப்புகள்)
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் எரிச்சலூட்டும்
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் பிரசியோடைமியம்(III) ஆக்சைடு, பிரசியோடைமியம்(III) புளோரைடு
பிரசியோடைமியம்(III) புரோமைடு
பிரசியோடைமியம் அயோடைடு
ஏனைய நேர் மின்அயனிகள் சீரியம்(III) குளோரைடு
நியோடிமியம்(III) குளோரைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

பிரசியோடைமியம்(III) குளோரைடு (Praseodymium(III) chloride) என்பது PrCl3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். மற்ற இலந்தனைடு முக்குளோரைடுகளைப் போலவே, இதுவும் நீரற்ற மற்றும் நீரேற்று வடிவங்களில் காணப்படுகிறது. நீல-பச்சை நிறத்தில் திண்மப் பொருளாக இருக்கும் இச்சேர்மம் ஈரமான காற்றில் வெளிப்படும் போது தண்ணீரை விரைவாக உறிஞ்சி வெளிர் பச்சை நிற எழுநீரேற்றை உருவாக்குகிறது.

தயாரிப்பு

[தொகு]

பிரசியோடைமியத்துடன் ஐதரசன் குளோரைடைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் பிரசியோடைமியம்(III) குளோரைடு உருவாகும்:[1][2]

2 Pr + 6 HCl → 2 PrCl3 + 3 H2.

பிரசியோடைமியம்(III) குளோரைடு பொதுவாக வெற்றிடப் பதங்கமாதல் மூலம் சுத்திகரிக்கப்படுகிறது.[3]

பிரசியோடைமியம்(III) குளோரைடின் நீரேற்றப்பட்ட உப்புகளை பிரசியோடைமியம் உலோகம் அல்லது பிரசியோடைமியம்(III) கார்பனேட்டை ஐதரோகுளோரிக் அமிலத்துடன் சேர்த்து சூடுபடுத்துவதன் மூலம் தயாரிக்கலாம்:

Pr2(CO3)3 + 6 HCl + 15 H2O → 2 [Pr(H2O)9]Cl3 + 3 CO2

PrCl3∙7H2O ஒரு நீருறிஞ்சும் பொருளாகும். ஈரமுலர்த்தியில் உலர்த்தப்படும்வரை இது படிகமாக மாறாது. அம்மோனியம் குளோரைடு பாதை என்று அழைக்கப்படும் அம்மோனியம் குளோரைடு முன்னிலையில் 400 °செல்சியசு வெப்பநிலையில் நீரேற்றை வெப்ப நீரிழப்பு செய்வதன் மூலம் நீரிலி பிரசியோடைமியம்(III) குளோரைடை உருவாக்கலாம்.[3][4][5] மாறாக நீரேற்றை தயோனைல் குளோரைடைப் பயன்படுத்தியும் நீர்நீக்கம் செய்யலாம்.[3][6]

வினைகள்

[தொகு]

பிரசியோடைமியம்(III) குளோரைடு இலூயிசு அமிலமாகும். கடின மற்றும் மென்மையான (இலூயிசு) அமிலங்கள் மற்றும் காரங்கள் கோட்பாட்டின் படி இது கடினமானது என வகைப்படுத்தப்படுகிறது. நீரேற்றை விரைவாக சூடுபடுத்தினால் சிறிய அளவிலான நீராற்பகுப்பை ஏற்படுத்தும்.[3] பிரசியோடைமியம்(III) குளோரைடானது பொட்டாசியம் குளோரைடுடன் வினைபுரிவதன் மூலம் ஒரு நிலையான இலூயிசு அமில-கார அணைவு (K2PrCl5) சேர்மத்தை உருவாக்குகிறது. இச்சேர்மம் சுவாரசியமான ஒளியியல் மற்றும் காந்தப் பண்புகளை காட்டுகிறது.[1]

கரையாத பிரசியோடைமியம்(III) சேர்மங்களைத் தயாரிக்க பிரசியோடைமியம்(III) குளோரைடின் நீர் கரைசல்களைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, பிரசியோடைமியம்(III) பாசுபேட்டு மற்றும் பிரசியோடைமியம்(III) புளோரைடு உப்புகளை முறையே பொட்டாசியம் பாசுபேட்டு மற்றும் சோடியம் புளோரைடு ஆகியவற்றுடன் வினை புரியச் செய்வதன் மூலம் தயாரிக்கலாம்:

PrCl3 + K3PO4 → PrPO4 + 3 KCl
PrCl3 + 3 NaF → PrF3 + 3 NaCl
2PrCl3 + 3 Na2CO3----> Pr2CO3 + 6NaCl

கார உலோக குளோரைடுகளுடன் சேர்த்து சூடாக்கப்படும் போது MPr2Cl7, M3PrCl6, M2PrCl5, and M3Pr2Cl9 இங்குள்ள M = K, Rb, Cs.[7] ஆகிய மூலக்கூற்று வாய்ப்பாடுகளைக் கொண்ட மும்மை (மூன்று வெவ்வேறு கூறுகளைக் கொண்ட சேர்மங்கள்) பொருட்களை உருவாக்குகிறது.

பிரசியோடைமியம் குளோரைடு எழுநீரேற்று வெவ்வேறு வகை ஒளியில்

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 J. Cybinska; J. Sokolnicki; J. Legendziewicz; G. Meyer (2002-07-17). "Spectroscopic and magnetic studies of the ternary praseodymium chloride K2PrCl5". Journal of Alloys and Compounds 341: 115–123. doi:10.1016/S0925-8388(02)00089-0. https://www.semanticscholar.org/paper/Spectroscopic-and-magnetic-studies-of-the-ternary-Cybi%C5%84ska-Sokolnicki/2af96eacdd78d2ec04ac3c0342ca6d875f76130e. 
  2. L.F. Druding; J.D. Corbett (1961-06-01). "Lower Oxidation States of the Lanthanides. Neodymium(II) Chloride and Iodide". J. Am. Chem. Soc. 83 (11): 2462-2467. doi:10.1021/ja01472a010. https://pubs.acs.org/doi/10.1021/ja01472a010. 
  3. 3.0 3.1 3.2 3.3 F.T. Edelmann; P. Poremba (1997). Synthetic Methods of Organometallic and Inorganic Chemistry. Vol. 6. Stuttgart: Georg Thieme Verlag. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-31-319-3921-0.
  4. M.D. Taylor; P.C. Carter (April 1962). "Preparation of anhydrous lanthanide halides, especially iodides". J. Inorg. Nucl. Chem. 24 (4): 387-391. doi:10.1016/0022-1902(62)80034-7. https://www.sciencedirect.com/science/article/abs/pii/0022190262800347. 
  5. J. Kutscher; A. Schneider (September 1971). "Notiz zur Präparation von wasserfreien Lanthaniden-Haloge-niden, Insbesondere von Jodiden" (in de). Inorg. Nucl. Chem. Lett. 7 (9): 815-819. doi:10.1016/0020-1650(71)80253-2. https://www.sciencedirect.com/science/article/abs/pii/0020165071802532. 
  6. J.H. Freeman; M.L. Smith (October 1958). "The preparation of anhydrous inorganic chlorides by dehydration with thionyl chloride". J. Inorg. Nucl. Chem. 7 (3): 224-227. doi:10.1016/0022-1902(58)80073-1. https://www.sciencedirect.com/science/article/abs/pii/0022190258800731. 
  7. Gerd Meyer (1990). "Ternary Chlorides and Bromides of the Rare-Earth Elements". Inorganic Syntheses 30: 72–81. doi:10.1002/9780470132616.ch15. 

மேலும் வாசிக்க

[தொகு]
  1. CRC Handbook of Chemistry and Physics (58th edition), CRC Press, West Palm Beach, Florida, 1977.
  2. N. N. Greenwood, A. Earnshaw, Chemistry of the Elements, Pergamon Press, 1984.
  3. S. Sugiyama, T. Miyamoto, H. Hayashi, M. Tanaka, J. B. Moffatt, "Effects of chlorine additives in the gas- and solid-phases on the oxidative dehydrogenation of ethane over praseodymium oxide", Journal of Molecular Catalysis A, 118, 129-136 (1997).
  4. Druding L. F.; Corbett J. D.; Ramsey B. N. (1963). "Rare Earth Metal-Metal Halide Systems. VI. Praseodymium Chloride". Inorganic Chemistry 2 (4): 869–871. doi:10.1021/ic50008a055.