உள்ளடக்கத்துக்குச் செல்

பிரசியோடைமியம்(III) செலீனேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரசியோடைமியம்(III) செலீனேட்டு
பெயர்கள்
வேறு பெயர்கள்
பிரசியோடைமியம்(III) செலீனேட்டு(VI)
பண்புகள்
Pr2(SeO4)3
வாய்ப்பாட்டு எடை 710.6868 கி/மோல் (நீரிலி)
782.74792 கி/மோல் (நாநீரேற்று)
800.7632 கி/மோல் (ஐந்து நீரேற்று)
836.79376 கி/மோல் (ஏழுநீரேற்று)
854.80904 கி/மோல் (எண்ணீரேற்று)
926.87016 கி/மோல் (பன்னிருநீரேற்று)
தோற்றம் வெளிர் பச்சை நிற படிகங்கள் (ஏழுநீரேற்று)[1]
அடர்த்தி 4.3 கி/செ.மீ3 (நீரிலி)
3.85 கி/செ.மீ3 (நாநீரேற்று)[2]
3.094 கி/செ.மீ3 (எண்ணீரேற்று)
36 கி/100 மில்லிலிட்டர் (0 °செல்சியசு)
3 கி/100 மில்லிலிட்டர் (92 °செல்சியசு)
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் பிரசியோடைமியம்(III) சல்பேட்டு
ஏனைய நேர் மின்அயனிகள் சீரியம்(III) செலீனேட்டு
நியோடிமியம்(III) செலீனேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

பிரசியோடைமியம்((III)) செலீனேட்டு (Praseodymium(III) selenate) Pr2(SeO4)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பிரசியோடைமியத்தின் செலீனிய உப்பு என வகைப்படுத்தப்படும் இந்த உப்பு பிரசியோடைமியமும் செலீனிக் அமிலமும் சேர்ந்து வினைபுரிவதால் உருவாகிறது.

தயாரிப்பு

[தொகு]

பிரசியோடைமியம்(III) ஆக்சைடு சேர்மத்தை செலீனிக் அமிலக் கரைசலில் கரைத்து வினைபுரியச் செய்வதால் பிரசியோடைமியம்((III)) செலீனேட்டு உருவாகிறது:[3]

பண்புகள்

[தொகு]

பிரசியோடைமியம்(III) செலீனேட்டு தண்ணீரில் கரைந்து, நீரேற்றம் செய்யும்போது பச்சை நிற படிகங்களை உருவாக்குகிறது. இந்த படிகங்கள் Pr2(SeO4)3·nH2O என்ற வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படுகின்றன. இவ்வாய்ப்பாட்டிலுள்ள n = 4, 5, 7, 8 மற்றும் 12 என்ற மதிப்புகளை ஏற்கிறது. குளிர்ந்த கரைசல்களிலிருந்து படிகமயமாக்கல் நிகழும்போது எண்ணீரேற்று உருவாகிறது, மேலும் சூடான கரைசல்களிலிருந்து படிகமயமாக்கல் நிகழும்போது ஐந்துநீரேற்றுகள் உருவாகின்றன.

பொட்டாசியம் செலீனேட்டுடனும் மற்ற பிற செலீனேட்டு உப்புகளூடனும் வினைபுரியும்போது பிரசியோடைமியம்((III)) செலீனேட்டு Pr2(SeO4)3·nK2SeO4·4H2O (n = 1 மற்றும் 3) போன்ற இரட்டை உப்புகளை உருவாக்குகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Sc, Y, La-Lu Rare Earth Elements: C 9 Compounds with Se (in ஆங்கிலம்). Springer Science & Business Media. 2013-11-11. p. 455. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-662-06345-3.
  2. Villars, Pierre; Cenzual, Karin; Gladyshevskii, Roman (2013-12-18). Handbook (in ஆங்கிலம்). Walter de Gruyter GmbH & Co KG. p. 1105. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-11-029444-6.
  3. Friend, J. Newton (1932). "352. The solubility of praseodymium selenate in water" (in en). Journal of the Chemical Society (Resumed): 2410. doi:10.1039/jr9320002410. பன்னாட்டுத் தர தொடர் எண்:0368-1769. http://xlink.rsc.org/?DOI=jr9320002410.