பிரசியோடைமியம்(III) அயோடைடு
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
பிரசியோடைமியம் மூவயோடைடு
| |
இனங்காட்டிகள் | |
13813-23-5 | |
ChemSpider | 75566 |
EC number | 237-466-1 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 83744 |
| |
பண்புகள் | |
PrI3 | |
வாய்ப்பாட்டு எடை | 521.619 கி/மோல் 683.75652 கி/மோல் (ஒன்பது நீரேற்று) |
தோற்றம் | நீர் உறிஞ்சும் திறன் பச்சை நிறப் படிகங்கள் |
அடர்த்தி | 5.8 கி/செ.மீ3[1] |
உருகுநிலை | 738 °C (1,360 °F; 1,011 K)[1] |
கொதிநிலை | 1,380 °C (2,520 °F; 1,650 K) |
213.9 கி/100 மி.லி[2] | |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H317, H360 | |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | பிரசியோடைமியம்(III) புளோரைடு பிரசியோடைமியம்(III) குளோரைடு பிரசியோடைமியம்(III) புரோமைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | சீரியம்(III) அயோடைடு நியோடிமியம் அயோடைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பிரசியோடைமியம்(III) அயோடைடு (Praseodymium(III) iodide) என்பது PrI3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பிரசியோடைமியமும் அயோடினும் சேர்ந்து பச்சை நிறப்படிகங்களாக பிரசியோடைமியம்(III) அயோடைடு உருவாகிறது. இச்சேர்மம் தண்ணீரில் கரையும்.
தயாரிப்பு
[தொகு]- மந்த வாயுச் சூழலில் பிரசியோடைமியத்துடன் அயோடினைச் சேர்த்து சூடுபடுத்தினால் பிரசியோடைமியம்(III) அயோடைடு உருவாகும்:[1]
- 2Pr + 3I2 ---> 2PrI3
- பிரசியோடைமியத்துடன் பாதரச(II) அயோடைடைச் சேர்த்து சூடுபடுத்தினாலும் பிரசியோடைமியம்(III) அயோடைடு உருவாகும்:[4]
- 2Pr + 3HgI2 --->2PrI3 + 3Hg
இயற்பியல் பண்புகள்
[தொகு]பிரசியோடைமியம்(III) அயோடைடு பச்சை நிற படிகங்களாக உருவாகிறது. இப்படிகங்கள் தண்ணீரில் கரையும்.[5] செஞ்சாய்சதுரப் படிகங்களாக உள்ள இவை நீருறிஞ்சும் தன்மை கொண்டவை.[1] Cmcm (எண். 63) என்ற இடக்குழுவில் a = 4.3281(6) Å, b = 14.003(6) Å மற்றும் c = 9.988(3) Å. என்ற அணிக்கோவை அளவுருக்களுடன்[6] பிரசியோடைமியம்(III) அயோடைடு PuBr3 வகை படிக உருவத்தை ஏற்றுக்கொண்டுள்ளது.[4][7] இடைநிலை கட்டமான 2PrI3·PrOI மூலம் பிரசியோடைமியம் ஆக்சியயோடைடு மற்றும் பிரசியோடைமியம் ஆக்சைடு (5PrOI·Pr2O3) ஆகியவற்றின் கலவையாக சிதைகிறது.[8]
வினைகள்
[தொகு]- பிரசியோடைமியம்(III) அயோடைடு ஐதரசீனுடன் சேர்ந்து I3Pr·3N2H4·4H2O போன்ற சேர்மங்களை உருவாக்குகிறது. இவை வெளிர் நிறப் மஞ்சள் படிகங்கள் ஆகும். மெத்தனாலில் இவை கரையும். தண்ணீரில் சிறிதளவு கரையும். பென்சீனில் கரையாது. (d20 °C = 2.986 g/cm3)[9]
- யூரியாவுடன் சேர்ந்து I3Pr·5CO(NH2)2 போன்ற சேர்மங்களைக் கொடுக்கிறது. இவை வெளிர் பச்சை நிறப் படிகங்களாகும்.[10]
- தயோயூரியாவுடன் சேர்ந்து I3Pr·2CS(NH2)2·9H2O போன்ற சேர்மங்களைக் (d = 2.27 கி/செ.மீ3) கொடுக்கிறது. இவை பச்சை நிறப் படிகங்களாகும்.[5][11]
- பிரசியோடைமியம்(III) அயோடைடு மற்ற இலேசான அருமண் அயோடைடுகள் (La-Ho) போன்ற அதே அமைப்பை ஏற்றுக்கொள்கிறது இதில் ஒரு முக்கோண மூவுச்சி பட்டகம், ஒன்பது நீரேற்ற அயனி ([Pr(OH2)9]3+ ) மற்றும் அயோடைடு அயனி ஆகியவை உள்ளன.[12]
- பிரசியோடைமியம்(III) அயோடைடு உயர் வெப்பநிலையில் பிரசியோடைமியம் உலோகத்துடன் வினைபுரிந்து பிரசியோடைமியம் ஈரயோடைடைக் கொடுக்கிறது.
- 2 PrI3 + Pr → 3 PrI2
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 Haynes, William M. (2016-06-22). CRC Handbook of Chemistry and Physics (in ஆங்கிலம்). CRC Press. pp. 2016–2652. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4987-5429-3.
- ↑ Solubility_Table_Zh.PDF_version.pdf
- ↑ "Praseodymium triiodide". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்).
- ↑ 4.0 4.1 Asprey, L. B.; Keenan, T. K.; Kruse, F. H. (1964). "Preparation and Crystal Data for Lanthanide and Actinide Triiodides". Inorg. Chem. 3 (8): 1137–1141. doi:10.1021/ic50018a015. https://digital.library.unt.edu/ark:/67531/metadc867868/.
- ↑ 5.0 5.1 "Solubility_Table_Zh" (PDF). 27 August 2016.
- ↑ E. Warkentin, H. Bärnighausen (1979), "Die Kristallstruktur von Praseodymdiiodid (Modifikation V)", Zeitschrift für anorganische und allgemeine Chemie (in German), vol. 459, no. 1, pp. 187–200, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/zaac.19794590120
{{citation}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Wells, A. F. (1984). Structural Inorganic Chemistry (5th ed.). Oxford University Press. p. 421. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-965763-6.
- ↑ Heiniö, Outi; Leskelä, Markku; Niinistö, Lauri; Tuhtar, Dinko; Sjöblom, Johan; Strand, T. G.; Sukhoverkhov, V. F. (1980). "Structural and Thermal Properties of Rare Earth Triiodide Hydrates.". Acta Chemica Scandinavica 34a: 207–211. doi:10.3891/acta.chem.scand.34a-0207. பன்னாட்டுத் தர தொடர் எண்:0904-213X.
- ↑ Uchenye zapiski: Serii︠a︡ khimicheskikh nauk (S.M. Kirov adyna Azărbai̐jan Dȯvlăt Universiteti; 1977), trang 37. Truy cập 1 tháng 1 năm 2021.
- ↑ Russian Journal of Inorganic Chemistry, Tập 18,Phần 2 (British Library Lending Division with the cooperation of the Royal Society of Chemistry, 1973), trang 1655. Truy cập 1 tháng 1 năm 2021.
- ↑ Villars, Pierre; Cenzual, Karin; Gladyshevskii, Roman (24 July 2017). Handbook of Inorganic Substances 2017 (in ஆங்கிலம்). Walter de Gruyter GmbH & Co KG. p. 5090. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-11-043655-6.
- ↑ Timofte, T.; Babai, A.; Meyer, G.; Mudring, A.-V. (2005). "Praseodymium triiodide nonahydrate". Acta Crystallogr. E 61 (6): i94–i95. doi:10.1107/S1600536805012857. Bibcode: 2005AcCrE..61I..94T.