வளர்ப்புச் செம்மறியாடு
| வளர்ப்புச் செம்மறியாடு | ||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
இடாஹோவின் டூபியசுக்கு அண்மையில் காணப்படும் ஐக்கிய அமெரிக்கச் செம்மறியாடுகள் சோதனை நிலையம்.
|
||||||||||||||||
| காப்பு நிலை | ||||||||||||||||
|
கொல்லைப்படுத்தப்பட்டவை
|
||||||||||||||||
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||||||
|
||||||||||||||||
| இருசொற்பெயர் | ||||||||||||||||
| ஆவிஸ் ஏரீஸ் லின்னேயஸ், 1758 |
வளர்ப்புச் செம்மறியாடு (Sheep, Ovis aries) என்பது, நாலுகால், இரைமீட்கும், பாலூட்டியாகும். எல்லா இரைமீட்கும் விலங்குகளையும் போலவே, இதுவும் ஆர்ட்டியோடக்டிலா என்னும் இரட்டைக் குளம்புள்ள விலங்கின வரிசையைச் சேர்ந்தது. செம்மறியாடு என்பது தொடர்புடைய பல இனங்களைக் குறித்தாலும் அன்றாடப் பயன்பாட்டில் இது பெரும்பாலும் ஆவிஸ் ஏரீஸ் என்னும் இனத்தையே குறிக்கிறது. இதனை உள்ளடக்கிய பேரினத்தில் மிக அதிகமாகக் காணப்படுபவை வளர்ப்புச் செம்மறியாடுகளே. உலகில் இவற்றின் எண்ணிக்கை ஒரு பில்லியன் அளவுக்கு இருக்கலாம் என்கின்றனர். இவை ஐரோப்பாவிலும், ஆசியாவிலும் காணப்படுகின்ற மோஃப்லோன் (mouflon) எனப்படும் காட்டுச் செம்மறித் துணை இனத்திலிருந்து தோன்றியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
வேளாண்மைத் தேவைகளுக்காக மிகப் பழங்காலத்திலேயே வளர்ப்பு விலங்கு ஆக்கப்பட்ட இவ்வினம் கம்பளி, இறைச்சி, பால் என்பவற்றுக்காக வளர்க்கப்படுகின்றது. வேறெந்த விலங்கிலும் அதிகமாக செம்மறியாட்டுக் கம்பளியே பயன்படுகின்றது.
பொருளடக்கம் |
பயன்கள் [தொகு]
- இறைச்சியாகப் பயன்படுத்தப்படுகிறது.
- கொழுப்புத் தேவைகளுக்காகவும் பயன்படுகிறது.
- மனிதன் தேவைக்கான கம்பளி ஆடைகளாகவும், கம்பளிப் பொருட்களாகவும் பயன்படுத்தப்படுகிறது.
வகைகள் [தொகு]
- செம்மறியாடுகள் சில இறைச்சிக்காகவும், கொழுப்புக்காகவும் வளர்க்கப்படுகின்றன. சில கம்பளிக்காக வளர்க்கப்படுகின்றன.
- இறைச்சிக்காகவும் கொழுப்புக்காக வளர்க்கப்படும் செம்மறியாடுகளில் வால்சதை ஆடுகள், ஹிஸ்ஸார் ஆடுகள் போன்றவைகளைக் குறிப்பிடலாம்.
- கம்பளிக்காக வளர்க்கப்படும் ஆடுகளில் நுண்மயிருள்ள செம்மறி ஆடுகள், நடுத்தர மயிருள்ள செம்மறி ஆடுகள், பாதி முரட்டு மயிருள்ள செம்மறி ஆடுகள், முரட்டு மயிருள்ள செம்மறி ஆடுகள் என நான்கு முக்கிய வகைகள் உள்ளன.