மேற்குக் கங்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மேற்குக் கங்கர் இந்தியாவில் கர்நடகத்தை ஆண்ட அரச மரபுகளுள் முக்கியமான ஒரு மரபு ஆகும். பிற்காலத்தில் இன்றைய ஒரிசாப் பகுதியில் அரசாண்ட கங்கர்களை வேறுபடுத்துவதற்காக கர்நாடகக் கங்க மரபு மேற்குக் கங்க மரபு எனவும் ஒரிசாப் பகுதிக் கங்க மரபு கிழக்குக் கங்க மரபு எனவும் குறிப்பிடப்படுகின்றது. தென்னிந்தியாவில் பல்லவப் பேரரசின் வலிமை குண்றிய காலத்தில் கர்நாடகப் பகுதியில் இருந்த பல உள்ளூர்க் குலங்கள் தமது தன்னாட்சிகளை நிறுவிக்கொண்டன. இவ்வாறான ஒரு பின்னணியிலேயே மேற்குக் கங்க மரபினரும் தமது ஆட்சியைத் தொடங்கியதாக நம்பப்படுகிறது. இவர்களது ஆட்சி கிபி 350 தொடக்கம் கிபி 550 வரை நிலைபெற்றிருந்தது. முதலில் இவர்கள் கோலாரில் இருந்தும் பின்னர் மைசூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றங்கரையில் உள்ள தலக்காட்டிலிருந்தும் அரசாண்டனர்.


பாதமியிலிருந்து சாளுக்கியப் பேரரசின் எழுச்சியின் பின் கங்கர்கள் சாளுக்கியரின் மேலாண்மையை ஏற்றுக்கொண்டு பல்லவர்களுக்கு எதிராகப் போராடினர். கிபி 753 ஆம் ஆண்டில் தக்காணத்தில் ராட்டிரகூடர்கள் மேலாண்மை பெற்றனர். ஒரு நூற்றாண்டு காலப் போராட்டங்களுக்குப் பின்னர் கங்கர்கள் ராட்டிரகூடர்களின் மேலாண்மையை ஏற்று அவர்களுடன் சேர்ந்து தமது எதிரியான சோழர்களுக்கு எதிராகப் போராடினர். 10 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் துங்கபத்திரை ஆற்றுக்கு வடக்கே ராட்டிரகூடரின் மேலாண்மை வலுவிழக்க மேற்குச் சாளுக்கியப் பேரரசு வலிமை பெற்றது. அதேவேளை காவிரி ஆற்றுக்குத் தெற்கில் சோழர்கள் புதிய வலுவுடன் மேலாண்மை பெற்றனர். கிபி 1000 அளவில் சோழர்களினால் தோற்கடிக்கப்பட்டபோது கங்கர்களின் ஆதிக்கம் அப்பகுதியில் முடிவுக்கு வந்தது.


பரப்பளவில் ஒரு சிறிய நாடாக இருந்தபோதும் இன்றைய தெற்குக் கர்நாடகத்தின் அரசியல், பண்பாடு, இலக்கியம் தொடர்பில் மேற்குக் கங்கர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது ஆகும். கங்க அரசர்கள் எல்லா மதங்களையும் அரவணைத்துச் சென்றபோதும், சமண சமயத்துக்குக் கூடிய ஆதரவு வழங்கினர். இதன் காரணமாக சிரவணபெலாகொலா, கம்பதகள்ளி போன்ற இடங்களில் சமண நிலைவுச் சின்னங்கள் எழுந்தன. இவர்கள் காலத்தில் கன்னட இலக்கியங்களும் சமசுக்கிருத இலக்கியங்களும் செழித்து வளர்ந்தன. பல்வேறு துறைகளையும் சேர்ந்த நூல்கள் பல இக்காலத்தில் இயற்றப்பட்டன.

"http://ta.wikipedia.org/w/index.php?title=மேற்குக்_கங்கர்&oldid=630973" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி