கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(
மராத்தா பேரரசு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மராட்டியப் பேரரசு
Maratha Samrajya
மராட்டியக் கூட்டமைப்பு |
| கூட்டமைப்பு |
← 
|
1674 – 1820 |
→
|
|
|

கொடி
|
|
மராட்டிய சாம்ராஜ்ஜியம் 1760 மஞ்சள் நிறத்தில். |
| தலைநகரம் |
ராய்காட், பிறகு புனே |
| மொழி(கள்) |
மராத்தி |
| அரசு |
முடியாட்சி |
| சத்ரபதி |
| - 1674-1680 |
சிவாஜி |
| - 1681-1689 |
சம்பாஜி |
| - 1689–1700 |
ராஜாராம் |
| - 1700–1707 |
தாராபை |
| - 1707–1747 |
ஷஹு |
| - 1747–1777 |
ராஜாராம் II |
| வரலாறு |
|
| - நிறுவல் |
ஏப்ரல் 21, 1674 |
| - முடிவு |
செப்டம்பர் 21, 1820 |
| பரப்பளவு |
|
28,00,000 கிமீ² (10,81,086 சதுர மைல்) |
| மக்கள்தொகை |
| - 1700 அண். |
15,00,00,000 |
| நாணயம் |
ஹான், ரூபாய், பைசா, மோஹர் |
|
மராட்டியப் பேரரசு அல்லது மராத்தியப் பேரரசு (Maratha Empire) தற்போதைய இந்தியாவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்திருந்தது. இதன் காலம் [[1674 முதல் 1818 வரை. இந்த சாம்ராஜ்ஜியத்தின் கீழ் தெற்கு ஆசியாவின் பல பகுதிகள் 2.8 மில்லியன் சதுர கிமீ பரப்பளவிற்கு மேல் இருந்தன. சிவாஜியால் இந்தப் பேரரசு தோற்றுவிக்கப்பட்டது. முகலாயப் பேரரசன் அவுரங்கசீப்பின் இறப்பை அடுத்து, பேரரசின் தளபதிகளான பேஷ்வாக்களால் விரிவாக்கப்பட்டது. 1761 இல் பானிப்பட் நகரில் ஆப்கானிய மன்னன் அகமது ஷா அப்தாலியுடன் இடம்பெற்ற சண்டையில் தோல்வியடைந்ததை அடுத்து மராட்டிய பேரரசின் விரிவாக்கம் நிறுத்தப்பட்டது. இதன் பின்னர் இப்பேரரசு மரத நாடுகளின் கூட்டமைப்பாகப் பிரிந்து, பின்னர் 1818 ஆம் ஆண்டில் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனியிடம் வீழ்ந்தது.