சீர்காழி வைத்தீசுவரன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வைத்தீசுவரன் கோயில்
அமைவிடம்
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் நாகப்பட்டினம்
ஆளுநர் கொனியேட்டி ரோசையா[1]
முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா[2]
மாவட்ட ஆட்சியர் டி. முனுசாமி [3]
மக்கள் தொகை 7,511 (2001)
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)

வைத்தீசுவரன் கோயில் (ஆங்கிலம்:Vaitheeswarankoil), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

பொருளடக்கம்

மக்கள் வகைப்பாடு [தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 7,511 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 3,789 ஆண்கள், 3,722 பெண்கள் ஆவார்கள். வைத்தீசுவரன் கோயில் மக்களின் சராசரி கல்வியறிவு 81.61% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. வைத்தீசுவரன் கோயில் மக்கள் தொகையில் 13.02% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

சங்கப்பாடல் குறிப்பு [தொகு]

இடையன் நெடுங்கீரனார் என்னும் சங்ககாலப் புலவர் இந்த ஊரிலுள்ள தெய்வம் பொய் சொல்வோர் உயிரைப் பலியாகக் கொள்ளும் என்று குறிப்பிடுகிறார். \ அகநானூறு 166

ஒன்பது கிரகங்களுள் (நவக்கிரகம்) ஒன்றான புதன் கிரகத்தையும் அதனுடன் அங்கராதனையும் சேர்த்து வழிபடும் தளமாகும். அங்காரகன் தொழுநோயை குணப்படுத்தும் வல்லமை கொண்ட கடவுளாக நம்பப்படுகின்றது. நாடி சோதிடர்கள் நிறைந்திருக்கும் புகழ்பெற்ற இடமாகும். இக்கோயில் சிதம்பரத்திலிருந்து 22 கிலோமீட்டர் தொலைவிலும், தஞ்சையிலிருந்து 110 கிலோமீட்டர் தொலைவிலும் மற்றும் மயிலாடுதுறையிலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இத்தலத்தை தொடர்வண்டி மூலம் மயிலாடுதுறையை அடைய மைசூரிலிருந்து மைசூர் விரைவுத் தொடர்வண்டி (வழி) பெங்களூர், சேலம், ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் மார்க்கமாக மயிலாடுதுறையை அடையலாம்.

வைத்தீசுவரன் [தொகு]

வைத்தீசுவரன் என்பது தமிழில் மருத்துவக் கடவுள் என்ற பொருளை உணர்த்துவது ஆகும். இக்கடவுளை வழிபடுவோர் நோய்நொடி நீங்கி வாழ்வர் என்ற நம்பிக்கை மக்களிடையே நிலவுகின்றது. இக்கடவுள் நோய்தீர்க்கும் வல்லவர் என்று போற்றப்படுகின்றார்.

இக்கோயிலில் அமைந்திருக்கும் சித்தாமிர்தக் குளத்தின் நீர் புனித நீராக கருதப்படுகின்றது. இக்குளத்தில் நீராடினால் நோய் நீங்கும் என்று அங்கு வழிபடும் மக்களால் நம்பப்படுகின்றது.

வரலாற்று சிறப்பு மிக்க வைத்தீசுவரன் கோயிலின் தோற்றம்

சம்பாதி, சடாயு, என்ற கழுகரசர் இருவர்களும், தமிழ் கடவுளாம் முருகப்பெருமானும், பூசித்துப் பேறுகளைப் பெற்ற தலமாதலால் இப்பெயர் பெற்றது.

இத்தலத்துச் சிவபெருமானைப்பற்றிய புகழ்ப் பாக்களில்

சடாயு, சம்பாதி இவர்கள் வழிபட்ட செய்திகள் உள்ளன. அவைகள்;

....தள்ளாய சம்பாதி சடாயென்பார் தாமிருவர்

புள்ளானார்க் கரையனிடம் புள்ளிருக்கு வேளூரே.....[5]

என்னும் ஞானசம்பந்தரின்[5] தேவாரப்பகுதியில் பாடப்பெற்றுள்ளது.

புள்ளிருக்குவேளூர் பெயர்க்காரணம் [தொகு]

சடாயு[6] என்னும் புள் [6](பறவை), இருக்கு- வேதம் (ரிக்கு வேதம்[6]), முருகவேள்[6], சூரியனாம் ஊர்[6] ஆகிய நால்வரும் இத்தலத்திற்கு வந்து இறைவனை வணங்கியதால் இத்தல நாயகர் புள்ளிருக்குவேளூர்[6] எனவும் திருபுள்ளிருக்குவேளூர்[6] என தனிச்சிறப்புடனும் அழைக்கப்படுகின்றார்.

தல புராணம் [தொகு]

ஒன்பது கிரகங்களுள் (நவக்கிரகம்) ஒன்றான அங்காரகன் செவ்வாய், தொழுநோயால் மிகத்தீவிரமாக பாதிக்கப்பட்டதின் விளைவாக கடவுள் சிவனார் வைத்தியநாத சுவாமியாக எழுந்தருளி அவரின் பிணிதீர்த்தார். ஆகையால் இக்கோயில் ஒன்பது கிரக கோயில்களில் இது செவ்வாய் கிரகத்தை குறிக்கும் கோயில் தலமாக விளங்குகின்றது.

....மந்திரமும் தந்திரமும் மருந்துமாகித் தீராநோய் தீர்த்தருள வல்லான்....[5]

என்னும் அப்பர்பெருமானின்[5] தேவாரப் பகுதியில் இறைவன் வைத்திய நாதர்[5] என்னும் பெயர் பூண்ட காரணத்தைப் புலப்படுத்துவதாகும்.

திருநாவுக்கரசர் தீவிர வயிற்றுப்பிணியினால் அவதியுற்றபொழுது அவர் தமக்கையார் வைத்தியநாதனை நினைந்து பிணிநீக்க தொழுதிட்டார், அவ்வாறே எழுந்தருளி பிணிநீக்கினார். அன்று முதல் இத்தல சிவனாரை அவரின் பக்தகோடிகளால் வைத்தியநாதன் என்றழைக்கபெற்று வழிபடலாயினர்.

வைத்தீசுவரன் கோயில் பிரகாரம் (வழிபாட்டாளர்கள் சுற்றிவரும் பாதை)

கல்வெட்டு [தொகு]

தமிழ் ஆண்டு சகம் 1814 (கி.பி.1892)[5] அங்கு வாழ் நகரத்தாரால் திருப்பணியும் குடமுழுக்கும் செய்யப்பட்டன. தமிழ் ஆண்டு சகம் 1689 (கி.பி. 1767)[5] ராசாமகாராசர் (ராஜாமகாராசர்[5] ) காலத்தில் முத்துக்குமாரசாமித் தம்பிரானால் (இறைப்பணி செய்யும் துறவி அல்லது மடத்தலைவன்) திருப்பணி செய்யப் பட்டது. தமிழ் ஆண்டு சகம் 1682 (கி.பி.1770)[5] துளசாமகாராசர் (துளஜாமகாராசர்[5] ) காலத்தில் கருங்கல் திருப்பணி செய்யப்பட்டது. தமிழ் ஆண்டு சகம் 1802 (கி.பி. 1880)[5] கொடிக்கம்பம் தங்கமயம் ஆக்கப்பட்டது என்று கோயில் கல்வெட்டில்[5] குறிக்கப்பட்டுள்ளது.

மூலவர் காட்சி மற்றும் செவிவழிச் செய்திகள் (ஐதீகங்கள்) [தொகு]

இக்கோயிலில் வைத்தீசுவர சுவாமி மற்றும் அவரின் இணையான தையல்நாயகி அம்பாள் இருவரும் இணைந்து மூலிகை தைலத்துடன் நின்று பக்தர்களுக்கு காட்சித் தருகின்றனர்.

இக்கோயிலுக்கு இராமர், இலட்சுமணன் மற்றும் ஏழுகடல் முனிவர்களும் (சப்தரிஷி) இத்தலம் வந்து வணங்கியதாக செவிவழிச் செய்திகள் (அய்தீகங்கள்) உண்டு.

இத்தலம் இந்துக்களின் கடவுளாக கூறப்படும் இராமரின் மனைவி சீதையை இலங்கை மன்னன் இராவணன் கவர்ந்து சென்றபொழுது கழுகு மன்ன்னான சடாயு இடைமறித்து தடுத்ததினால், இராவணனின் தாக்குதலுக்குள்ளாகி மாண்ட சடாயுவின் சடலத்தை இராமன் மற்றும் அவரின் தமையனாரான இலக்குவணன் இருவரும் இணைந்து (ஜடாயு) இங்கு அமைந்துள்ள குளத்தின் அருகே வைத்து சடாயுவின் சிதைக்கு தீமூட்டி எரிக்கப்பட்டதினால் இக்கோயிலில் அமைந்துள்ள குளத்தை சடாயு குந்தம் என்றழைக்கப்படுகின்றது.

இக்கோயிலினுள் உள்ள சிறிய தலத்தில் கடவுள் தன்வந்தரியும், தமிழ்க்கடவுளாம் முருகன் முத்துகுமாரசாமியாகவும் எழுந்தருளியுள்ளனர்..

மூலவருக்காக படைக்கப்படுகின்ற பொருட்கள் மற்றும் காணிக்கைகள் [தொகு]

கடவுளுக்கு படைத்த பொருட்காளாக (பிரசாதங்களாக) திருநீரும் , சாம்பல் (திருச்சந்தன உருண்டை (அ)திருச்சாந்து உருண்டை) நோய்தீர்க்கும் மருந்தாக வழங்கப்படுகின்றது. இது தீக்குழியிலிருந்து (ஒமகுண்டத்திலிருந்து) தயாரிக்கப்படுகின்றது. இன்னொரு வகையான மருந்தாக (சந்தன துகள்கள்) சந்தனம், குங்குமப்பூ கலந்து வழங்கப்படுகின்றது.

மக்கள் இங்கு வருகை புரியும் பொழுது மிளகு மற்றும் வெல்லத்துடன் கலந்த் உப்பு இவற்றை சித்தாமிர்தத்தில் (குளம்) வைத்து நோய்தீர்க்க வேண்டி கடவுளுக்கு படைக்கின்றனர். கடவுளுக்காக வெள்ளித்தட்டுகள், மோதிரங்களை காணிக்கையாக பிணிதீர்க்க வேண்டி உண்டியலில் செலுத்துகின்றனர்.

மூலவர் காட்சி, சேவைகள் மற்றும் திருவிழாக்கள் [தொகு]

ஆண்டுத் திருவிழா (பிரம்மோற்சவம்) ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மற்றும் தை (தமிழ் மாதங்கள்) மாதங்களில் கொண்டாடப்படுகின்றது. கார்த்திகை மாதத்திலும் விழா எடுக்கப்படுகின்றது. தமிழ்க் கடவுளாம் முத்துகுமாரசுவாமிக்கு தனி விழாவாக அமாவசை அல்லது பௌர்ணமிக்குப் பின்வரும் காலத்தன்று (சஷ்டியன்று) விழா எடுக்கப்படுகின்றது.

நாடி சோதிடம் இங்கு புகழ்பெற்ற ஒன்று இது அவரவர் நம்பிக்கையை பொறுத்தது ஆனால் இது பொய்யுரையாகவும் இருக்கலாம்.

பாடல்பெற்ற தலம் [தொகு]

திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரரால் வைத்தியநாத சுவாமிகள் குறித்து பாடியத்தலமாகும். ஆகையால் இது பாடல் பெற்ற தலமாக விளங்குகின்றது.

இவற்றையும் பார்க்க [தொகு]

மேற்கோள்கள் [தொகு]

  1. http://www.tn.gov.in/tamiltngov/prof-govern-Tamil.htm
  2. http://www.tn.gov.in/gov_cm.html
  3. http://tnmaps.tn.nic.in/default.htm?coll_all.php
  4. http://census2001.tn.nic.in/pca2001.aspx Urban - Nagapattinam District;Sirkali Taluk;Vaitheeswarankoil (TP) Town 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை
  5. பிழை காட்டு: Invalid <ref> tag; no text was provided for refs named thevaaramthirumari_1
  6. 6.0 6.1 6.2 6.3 6.4 6.5 6.6 திருபுள்ளிருக்குவேளூர்-புனித இந்தியா-இணையத்தளம் பார்த்து பரணிடப்பட்ட நாள் 21-06-2009

வெளி இணைப்புகள் [தொகு]