கார்கில் போர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கார்கில் போர்
Kargil War
இந்திய-பாகிஸ்தான் போர்களின் பகுதி
Kargil Bofors.jpg
இந்தியாவின் பொஃபொர்ஸ் துப்பாக்கி பாகிஸ்தான் இராணுவம் இருக்கும் இடத்தை குறி பார்த்துக் கொண்டு இருக்கிறது
நாள் மே-ஜூலை 1999
இடம் கார்கில் மாவட்டம், ஜம்மு காஷ்மீர்
முடிவு இந்தியா கார்கிலை மீண்டும் கைப்பற்றியது
காரணம் பாகிஸ்தானின் இராணுவமும் காஷ்மீரி போராளிகளும் கட்டுப்பாடுக் கோடைத் தாண்டி வந்தனர்
நிலப்பகுதி
மாற்றங்கள்
போருக்கு முன்னிருந்த இடங்கள்
பிரிவினர்
இந்தியாவின் கொடி இந்தியா பாக்கித்தானின் கொடி பாக்கித்தான்,
காஷ்மீரி போராளிகள்
பலம்
30,000 5,000
இழப்புகள்
இந்திய அரசு குறித்த கணக்கு:
527 பலி[1][2][3]
1,363 படுகாயம்[4]
1 போர் கைதி
பாகிஸ்தானி மதிப்பு:(II)
357-4000 பலி[5][6]
(பாகிஸ்தான் இராணுவ வீரர்கள்)
665+ இராணுவ வீரர்கள் படுகாயம்[5]

8 போர் கைதிகள்.[7]

கார்கில் போர் (Kargil War) அல்லது கார்கில் பிரச்சனை 1999இல் மே முதல் ஜூலை வரை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நடந்த போராகும். இந்தப் போர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கார்கில் நகரின் அருகில் நடந்தது. மே 1999இல் பாகிஸ்தான் இராணுவமும் காஷ்மீரி போராளிகளும் பாகிஸ்தானிலிருந்து கட்டுப்பாடுக் கோடைத் தாண்டி இந்தியாவிற்குள் நுழைந்தனர். இரண்டு மாதங்களாக மிக உயரத்தில் நடந்த போரில் இந்திய ராணுவம், இந்திய வான்படையின் உதவியுடன், அத்துமீறி நுழைந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களைக் கட்டுப்பாடுக் கோட்டுக்கு அப்பால் விரட்டினர்.

போர் நிகழும்போது பாகிஸ்தான் அரசு போரைச் சேரவில்லை என்று கூறியுள்ளது. ஆனால் போர் முடிவுற்ற பிறகு பாகிஸ்தான் படையினர்கள் காஷ்மீரி போராளிகளுக்கு உதவி செய்துள்ள தகவல் வெளிவந்தது. இந்த போர் காரணமாக இந்தியா, இராணுவத்துக்கு ஒதுக்கும் நிதியை அதிகமாக்கியது. பாகிஸ்தானின் பொருளாதாரமும் அரசும் இந்த போர் காரணமாக பலவீனமானது. இந்த போர் முடிந்து அதே ஆண்டு அக்டோபர் மாதத்தில் பாகிஸ்தான் இராணுவத் தலைவர் பர்வேஸ் முஷாரஃப், இராணுவ புரட்சி செய்து பிரதமர் நவாஸ் செரிபஃபைப் பதவியில் இருந்து அகற்றினார்.

கார்கில் போரில், உலக வரலாற்றில் முதல் முறையாக இரண்டு அணு ஆயுதங்கள் பெற்றிருந்த நாடுகளுக்கு இடையில் போர் நடந்தது.

கார்கில் போருக்கு பிறகு இந்த போரை மையமாகக் கொண்டு இந்தியாவி்ல் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்தன. என்.ஓ.சி. கார்கில் (2003), லட்சிய (2004) போன்ற இந்தி திரைப்படங்கள் இதுபோன்ற திரைப்படங்கள் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Government of India site mentioning the Indian casualties, Statewise break up of Indian casualties statement from Indian Parliament
  2. Breakdown of casualties into Officers, JCOs, and Other Ranks - Parliament of India Website
  3. Complete Roll of Honour of Indian Army's Killed in Action during Op Vijay இந்திய இராணுவ இணையத்தளத்திலிருந்து.
  4. Official statement giving breakdown of wounded personnel - Parliament of India Website
  5. 5.0 5.1 President Musharaffs disclosure on Pakistani Casualties in his book Indian Express news report
  6. Over 4000 soldier's killed in Kargil: Sharif
  7. Tribune Report on Pakistani POWs

"http://ta.wikipedia.org/w/index.php?title=கார்கில்_போர்&oldid=1531517" இருந்து மீள்விக்கப்பட்டது